இறால் பிரியாணி
அசைவ உணவில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான். பிரியாணியின் சுவையும் மணமும் தான் நாம் விரும்பி சாப்பிட ஒரு முக்கிய காரணமாக உள்ளது. அந்த வகையில் வீட்டிலேயே சுவையான இறால் பிரியாணி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பிரியாணி அரிசி – ½ கிலோ
- இறால் – ¼ கிலோ
- வெங்காயம் – 3
- தக்காளி – 2
- பச்சை மிளகாய் – 4
- இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- தனி மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
- கரம் மசாலா – ½ ஸ்பூன்
- கொத்தமல்லித் தழை – 1 கைப்பிடி
- புதினா – 1 கைப்பிடி
- தயிர் – ¼ கப்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- நெய் – தேவையான அளவு
- பட்டை – 2 துண்டு
- கிராம்பு – 4
- சோம்பு – 1 ஸ்பூன்
- பிரியாணி இலை – 2
செய்முறை
- முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
- பிரியாணி அரிசியை 20 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.
- பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
- தாளித்த பின் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
- பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம், தக்காளி நன்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லித் தழை, மற்றும் புதினா சேர்த்து வதக்கவும்.
- பின்னர் தனி மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- எடுத்து வைத்துள்ள ¼ கப் தயிரை சேர்த்துக் கொள்ளவும்.
- சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விடவும்.
- இறால் சிறிது நேரம் வெந்த பிறகு ஊற வைத்துள்ள பிரியாணி அரிசியை நன்கு கழுவி பின் சேர்த்துக் கொள்ளவும்.
- அரிசியை சேர்த்து பின் மெதுவாக கிளறி விடவும்.
- பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
- கடைசியாக கொஞ்சம் நெய் சேர்த்துக் கொள்ளவும்.
- உப்பு, காரம் சரிபார்த்த பிறகு குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கினால் சுவையான இறால் பிரியாணி தயார்.