சிக்கன் 65 செய்வது எப்படி?
சிக்கன் உணவு வகைகளில் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு உணவு வகை என்றால் அது சிக்கன் 65 தான். அதன் ருசியும், சிக்கனின் மணமும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஒரு உணவாகும். சிக்கன் 65 சுலபமாக ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- சிக்கன் – ½ கிலோ
- இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- கேசரி பவுடர் – 1 சிட்டிகை
- மல்லி தூள் – 1 ஸ்பூன்
- தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- மிளகு தூள் – 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
- கரம் மசாலா – 1 ஸ்பூன்
- தயிர் – ¼ கப்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
- முதலில் சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும்.
- அதில் இஞ்சி பூண்டு விழுது, கேசரி பவுடர், தயிர், உப்பு சேர்த்து நன்கு பிசறி கொள்ளவும்.
- பின்னர் மல்லித்தூள், மிளகாய் தூள்,மிளகு தூள் , கரம் மசாலா ,எலுமிச்சை சாரு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- மசாலா பொருட்களை சேர்த்த பின் ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
- 1 மணி நேரம் சிக்கன் நன்கு ஊறிய பின் வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
- எண்ணெய் காய்ந்ததும் ஊற வைத்த சிக்கனை எண்ணெயில் சேர்த்து மிதமான தீயில் வைத்து பொரித்துக் கொள்ளவும்.
8. பொரித்தவுடன் அதன் மேல் சிறிது வெங்காயத்தை நறுக்கி போட்டு சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறினால் சுவையான சிக்கன் 65 ரெடி.