கரிநாட்கள் என்றால் என்ன? கரிநாளில் சுபகாரியம் செய்வதை ஏன் தவிர்க்க வேண்டும்

கரிநாட்கள் என்றால் என்ன

நமது கலெண்டர்களில் சில குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் கரிநாள் என்று குறிபிடபட்டிருக்கும். அப்படி கரிநாட்கள் என குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சூரிய கதிர் வீச்சின் தாக்கம் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் சற்று அதிகமாக இருக்கும். இது பொதுவான விசேஷ நாட்கள் போல் இல்லாமல்  தமிழ் மாதங்களில் எப்போதும் ஒரே நாளில் தான் வரும். கலெண்டரில் கரிநாள் என்று குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சூரியனின் கதிர்வீச்சு சற்று அதிகமாக இருக்கும் என்பதால், அன்றைய தினம் நாம் வெளியில் சென்றால் நம் உடல் உள்உறுப்புகள் பாதிக்கப்படும் மற்றும் நமது மன நிலையிலும் கூட பலவித எதிர்மறை எண்ணங்கள் வரலாம். இதனால்தான் இந்த கரி நாள் எனப்படும் நாட்களில் தமிழர்கள் சுப காரியங்கள் செய்வதை அறவே தவிர்த்தனர்.

கரிநாள் பரிகாரம்

அறிவியல் சார்ந்தது

கரிநாளில் சுப காரியங்கள் செய்தால் அது சரிவராது என்பது அர்த்தமல்ல. இது ஒரு விஞ்ஞானம், 2021 பொங்கல் கரிநாளில் தான் வருகிறது, அதே போல 2021 விஜயதசமி தினம் இந்த கரிநாளில் தான் வருகிறது. அதற்காக அன்றைய தினம் புதிய செயல்கள் எதையும் செய்யக்கூடாது என்று அர்த்தமல்ல. அன்றைய தினத்தில் சூரியனின் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும் ஆதலால் அதிகம் வெயிலில் அலையக் கூடாது என்பதால் சுபகாரியங்கள் செய்வதை தமிழர்கள் தவிர்த்தனர். இது முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தது. தமிழ்நாட்டில் சூரியனின் தாக்கம் அதிகம் உள்ள நாட்களைக் கணித்து கரிநாட்கள் என்று குறித்தனர். மற்ற இந்திய கலெண்டர்களில் கரி நாட்கள் என்பதே கிடையாது.

கரிநாட்கள் விவரம் தமிழ் மாதங்களின்படி

கரிநாள் என்பது என்னஎல்லா ஆண்டும் தமிழ் மாதங்களில் கரிநாட்கள் ஒரே நாளில்தான் வரும், அதன்படி,

சித்திரை 6, 15

வைகாசி 7, 16, 17

ஆனி 1, 6

ஆடி 2,10, 20

ஆவணி 2, 9, 28

புரட்டாசி 16, 29

ஐப்பசி 6, 20

கார்த்திகை 1, 10, 17

மார்கழி 6, 9, 11,

தை 1,2, 3, 11, 17

மாசி 15, 16, 17

பங்குனி 6, 15, 19

தமிழர் பஞ்சாங்கத்தில் தமிழ் மாதங்களில் மேற்படி நாட்கள் கரி நாட்களாகும் கரி நாட்கள் கணக்கீடு எனபது இந்தியாவை பொறுத்தவரை தமிழகத்தில் மட்டுமே இருக்கிறது. மற்ற இந்திய மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ள பஞ்சாங்கங்களில்  கரிநாட்கள் என்ற ஒன்றே கிடையாது அதனால் பெரும்பாலும் இம்மாநிலத்தில் உள்ளவர்கள் எல்லா நாட்களிலும் சுப காரியங்கள் செய்வர்.

ஆனால், பூஜைகள் ஹோமங்கள் பரிகாரங்கள் ஆகியவற்றை கரிநாட்களில் செய்யலாம். மேலும் விருத்தியடையகூடாது என்று நாம் நினைக்கும் காரியங்களை அன்று நடத்தலாம். உதாரணமாக கடனை அடைக்கும் பணியை மேற்கொள்ளலாம். ஏனென்றால் கரிநாள் அன்று கடனை அடைத்தால் மீண்டும் கடன் வாங்கும் நிலை ஏற்படாது.

தமிழர் நிலம் மற்றும் அதன் தன்மை மற்ற மாநிலங்களில் நிலம் மற்றும் அதன் தன்மை வேறு. அதனால் தமிழகத்தில் சூரியனின் கதிர்வீச்சு அதிகம் உள்ள நாட்களில் அங்கெல்லாம் சூரிய கதிர்வீச்சு அதே அளவுகளில் இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. நம் முன்னோர் செய்தது எல்லாம் மூடநம்பிக்கை அல்ல என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கேரட் ஹேர் பேக்

தலை முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளர கேரட் ஹேர் பேக்

தலை முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளர கேரட் ஹேர் பேக் ஆண், பெண் இருவருக்குமே தலை முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். குறிப்பாக பெண்களுக்கு தலைமுடிதான் அழகு. நீண்ட அடர்த்தியான...
மட்டன் சுக்கா வறுவல்

செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல் செய்வது எப்படி

செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல் தேவையான பொருட்கள் மட்டன் கால் – ½ கிலோ  ( எலும்பில்லாதது ) சோம்பு - ½ ஸ்பூன் பட்டை – 1 துண்டு கிராம்பு – 2 ...
எண்ணெய் குளியல் எப்படி செய்ய வேண்டும்

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பலன்?

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பயன்? நாம் எல்லோரும் தினமும் குளிக்கிறோம். வாரத்தில் இரு நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும். விசேஷ நாட்களிலும், பூஜையில் கலந்து கொள்ளும் போதும் தலைக்கு குளிக்க வேண்டும். இது...

Riddles with Answers | Brain Teasers and Puzzles | Brain games

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
திணை இட்லி

திணை அரிசி இட்லி

திணை இட்லி திணை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற ஏரளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட மிகவும் சிறந்த உணவு திணையாகும். திணை இட்லி எப்படி செய்வது...
மாம்பழ பாயாசம்

சுவையான மாம்பழ பாயாசம் செய்முறை

மாம்பழ பாயாசம் தேவையான பொருட்கள் மாம்பழ விழுது - ஒரு கப் மாம்பழ துண்டுகள் - ½ கப் சர்க்கரை – ½ கப் பால் - 1 லிட்டர் நெய் – சிறிதளவு ...
மின் விபத்துக்கான முதலுதவிகள்

மின்சார விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

மின்சார விபத்து மழைக் காலங்களில் மின்சார விபத்து ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. புயல், மழை காலங்களில் பொது இடங்களிலும், வீடுகளிலும் மின்சார விபத்து பல்வேறு விதங்களில் ஏற்படுகிறது. அந்த எதிர்பாராத நேரத்தில்  மின்சார விபத்து ஏற்பட்டால்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.