துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவனாவார். சுக்கிரன் லக்னாதிபதியாக இருப்பதால் இயற்கையாகவே நல்ல அழகும், கவர்ச்சியான உடலமைப்பும் கொண்டிருப்பார்கள். துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் தராசு போல எதையும் சீர்தூக்கி பார்க்கும் குணம் கொண்டவர்கள். இவர்கள் ஒருவரை பார்த்த உடனே அவர்களை எடை போடுவதில் வல்லவர்கள். இவர்கள் எதை செய்தாலும் அதில் சாமர்த்தியமும், புத்திசாலித்தனமும் நிறைந்து இருக்கும். எதையும் ஒன்றுக்கு இரண்டு தடவை யோசித்து தான் செய்வார்கள். செல்வம் சேர்ப்பதில் அதிக கவனம் கொண்டவர்கள். ஜாக்கிரதை உணர்வு அதிகம் கொண்டவர்கள். வாழ்க்கையை சுகமாக வாழ விரும்புவார்கள். இவர்கள் நீண்ட ஆயுளை கொண்டவர்கள்.

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

துலாம் லக்ன ஆண்கள் சற்று சபல புத்தி கொண்டவர்கள். பெண்கள் விசயத்தில் கொஞ்சம் பலவீனமானவர்கள். பெண்களாக இருந்தால் ஆண்களால் பிரச்சினைகளை சந்திப்பார்கள். இவர்கள் அழகான உருவ அமைப்பை கொண்டவர்கள். கற்பனை உலகில் மனதை செலுத்துவார்கள். மற்றவர்களை கவர்ந்து இழுக்கும் அளவுக்கு பேச்சாற்றல் கொண்டவர்கள். தன்னை அழகாக காட்டி கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அழகுடன் இருப்பதற்காக நிறைய செலவு செய்வார்கள். சுற்றுலா, கூத்து, கேளிக்கை இவற்றில் அதிக விருப்பம் கொண்டவர்கள். கோபம் என்பது இவர்களுக்கு அரிதாக தான் வரும். ஆனால் கோபம் வந்தால் யாராக இருந்தாலும் ஒரு கை பார்க்காமல் விட மாட்டார்கள்.

இவர்கள் நல்ல கவர்ச்சியான தோற்றம் கொண்டவர்கள். இவர்கள் உடனிருப்பவர்கள் ஏதேனும் தவறு செய்தால் அவர்களிடம் பேசுவது, பழகுவதை முற்றிலும் தவிர்த்து விடுவார்கள். எதையும் ரசித்து, ருசித்து உண்ண வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களிடம் அன்புடன் இருப்பார்கள். மற்றவர்களும் அதே போல இருக்க வேண்டும் என நினைப்பார்கள். தவறுகளை நேரடியாக சுட்டி காட்டாமல் நாசுக்குடன் இப்படி இருந்தா நல்லாருக்குமே மற்றவர்களுக்கு எடுத்து சொல்வார்கள். பிறருக்கு உதவி செய்வதில் விருப்பம் கொண்டவர்கள்.

இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோர் வியாபாரத்துறையில் ஈடுபடுவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெரிய வியாபாரிகளாகவும், வழக்கறிஞர்களாகவும், நடிகர்களாகவும், கலைத்துறையில் சாதிப்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் பிரதிபலன் பாராமல் உதவ கூடியவர்கள். பயணங்கள் செய்வதில் விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் ஜாதகம், ஜோசியம் போன்றவற்றில் அதிக விருப்பம் கொண்டவர்கள். குடும்ப பொருளதார தேவைக்காக குடும்பத்தை விட்டு பிரிந்து, தொலைதூர இடத்தில் வசிப்பார்கள்.

இவர்கள் வாழ்க்கையின் முற்பகுதியை விட பிற்பகுதியில் சந்தோஷமாக இருப்பார்கள். எக்காரியத்திலும் மிக மிக நிதானமாக செயல்படுவார்கள். ஆழ்ந்த ஆலோசனை செய்து தான் எந்த முடிவுக்கும் வருவார்கள். இவர்கள் முகத்தில் புன்சிரிப்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் சிறந்த நிர்வாகியாக விளங்குவார்கள். இவர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு. கடவுள் பக்தி அதிகம் கொண்டவர்கள். சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றுபவர்கள். சமுகப் பணியில் ஈடுபாடு கொண்டவர்கள். நேரம் தவறாதவர்கள். இவர்கள் சொல்லுக்கு சமுகத்தில் எப்போதும் ஒரு மதிப்பு, மரியாதை இருக்கும்.

இவர்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணை கிழக்கு மற்றும் வடக்கு திசையிலிருந்து வருவார். மிகுந்த தைரியசாலியாகவும், மனதில் சரியான பட்டதை தைரியாமாக சொல்லக் கூடியவர்களாகவும், கொள்கை கொண்டவர்களாகவும், எந்த ஒரு விஷயத்திலும் தீர ஆலோசித்து முடிவு எடுப்பவராகவும் வாழ்க்கைத்துணை இருப்பார். வரக்கூடிய வாழ்க்கைத் துணை குடும்பம் சம்பந்தமான விஷயங்களில் எந்த ஒரு முடிவிலும் விட்டு கொடுத்து போவது சிறந்தது. பூமி, லாபம், வாகனம் ஆகியவை திருமணத்திற்குப் பிறகு தான் ஏற்படும். திருமண தடை நீங்க சிவபெருமான் மற்றும் முருகனை வழிபட்டு வரலாம்.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

வெற்றி தரும் நட்சத்திர குறியீடு

வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள்

வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள் தினசரி வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொரு விஷயத்திலும் நாம் வெற்றி அடைய வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகிறோம். சிறிதும் மனம் தளராமால் அதற்கான முயற்ச்சியை செய்து கொண்டு தான்...
நீண்ட அடர்த்தியான கூந்தலை பெற

கூந்தலை பராமரிக்க சின்ன சின்ன ஆலோசனைகள்

கூந்தல் பராமரிப்பு  பெண்களுக்கு அழகு சேர்ப்பது அவர்களின் கூந்தல் தான். அதிலும் நீளமான கூந்தலை உடைய பெண்கள் பார்க்க மிகவும் அழகாகவும் இருப்பார்கள். நீண்ட கூந்தலை உடைய பெண்களுக்கு இயல்பாகவே தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்களாக...
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் தனுசு லக்னத்தின் அதிபதி குரு பகவனாவார். தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவாளிகளாகவும், விவேகம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் வயதில் மூத்தவர்களையும், படித்தவர்களையும் மதித்து மரியாதை செலுத்துவார்கள். சுறுசுறுப்பான...
துருதுருவென இருக்கும் குழந்தைகளுக்கு

குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் உணவுகள்

குழந்தைகளை சுறுசுறுப்பாக்கும் உணவுகள் குழந்தையின் நினைவாற்றலை அதிகரிக்கவும், அவர்கள் அனைத்திலும் சிறப்பாக கவனம் செலுத்தவும்,  சரியான சீரான உணவு அவசியமாகிறது. குறிப்பாக துருதுருவென சுறுசுறுப்பாக இருக்கும்  குழந்தைகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. குழந்தையின் அறிவாற்றல் மற்றும்...
நட்சத்திர தோஷம்

நட்சத்திர தோஷங்களும், பரிகார முறைகளும்

நட்சத்திர தோஷங்களும், பரிகாரங்களும் ஜோதிடத்தில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும், ஒரு நட்சத்திரத்துக்கு 4 பாதங்களும் உண்டு. இவ்வுலகில் பிறக்கும் எந்த ஒரு மனிதனும் இந்த மேற்கண்ட ராசி, நட்சத்திரம் மற்றும் நட்சத்திர பாதத்தில்...
இறால் வடை செய்முறை

சுவையான இறால் வடை

இறால் வடை தேவையான பொருட்கள் இறால் - 100 கிராம் கடலைபருப்பு – 250 கிராம் வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது ) பச்சை மிளகாய் -  5 ( பொடியாக...
திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்

திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்? பொன்னுருக்குதல் என்றால் என்ன?

திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்? திருமணத்தின் போது ஐயர் மாப்பிள்ளை கையில் காப்பு கட்டுவதை பார்த்திருப்போம். அதே போல மாப்பிள்ளை, மணப்பெண் கையில் காப்பு கட்டுவதை பார்த்திருப்போம். எதற்காக இதை செய்கிறார்கள் என பலருக்கும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.