வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள்

வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள்

தினசரி வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொரு விஷயத்திலும் நாம் வெற்றி அடைய வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகிறோம். சிறிதும் மனம் தளராமால் அதற்கான முயற்ச்சியை செய்து கொண்டு தான் இருக்கிறோம். இதில் வெற்றி , தோல்வி என இரண்டையுமே நாம் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இதில் நாம் பல இடங்களில் தோல்வியை கண்டாலும் இறுதி வரை உறுதியுடன் நேர்மையாக நேர் வழியில் செல்வது தான் நமக்கு வெற்றியை தேடிக் கொடுக்கும்.

உலகில் உள்ள அனைவரும், ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த வகையில் ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பார்ப்பது அல்லது பயன்படுத்துவது என்ற நிலையில் அவரது முயற்சிகளில் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன என்று முன்னோர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

வெற்றி தரும்  நட்சத்திர குறியீடு நட்சத்திர குறியீடுகள்:

1. அஸ்வினி –  குதிரைத் தலை அல்லது குதிரை உருவம்.

2. பரணி –  மண் பாத்திரம், அடுப்பு அல்லது முக்கோண வடிவம்

3. கிருத்திகை –  கத்தி, வாள் மற்றும் ஹோம தீ ஜூவாலை

4. ரோகிணி –  தேர், வண்டி, கோவில், ஆலமரம் மற்றும் சக்கரம்

5. மிருகசீரி‌ஷம் –  மான் தலை மற்றும் தேங்காயின் கண்

6. திருவாதிரை –  குறியீடு மனித தலை, வைரம் மற்றும் நீர்த்துளி

7. புனர்பூசம் –  சின்னம் வில் மற்றும் அம்புக்கூடு

8. பூசம் – தாமரை, புடலம் பூ, அம்பு மற்றும் பசுவின் மடி

9. ஆயில்யம் – சர்ப்பம் மற்றும் அம்மி ஆகியவை.

10. மகம் –  வீடு, பல்லக்கு மற்றும் நுகம்

11. பூரம் – கட்டிலின் இரு கால்கள், சங்கு மற்றும் மெத்தை

12. உத்திரம் – கட்டில் கால்கள் மற்றும் மெத்தை

13. ஹஸ்தம் – கைகள் அல்லது உள்ளங்கை

14. சித்திரை –  முத்து மற்றும் ஒளி பொருந்திய ரத்தினக் கற்கள்.

15. சுவாதி –  புல்லின் நுனி மற்றும் காற்றில் அசையும் தீபச்சுடர்

16. விசாகம் –  முறம், தோரணம் மற்றும் பானை செய்யும் சக்கரம்

17. அனு‌ஷம் –  குடை, மலரும் தாமரை மற்றும் வில் வளைவு

18. கேட்டை –  குடை, குண்டலம் மற்றும் ஈட்டி

19. மூலம்  – அங்குசம், சிங்கத்தின் வால் மற்றும் யானை தும்பிக்கை

20. பூராடம் – விசிறி, முறம் மற்றும் கட்டில் கால்கள்

21. உத்திராடம் – யானை தந்தம், மெத்தை விரிப்பு, கட்டில் கால்கள்

22. திருவோணம் – காது, மூன்று பாதச்சுவடுகள் மற்றும் அம்பு

23. அவிட்டம் – மிருதங்கம் மற்றும் உடுக்கை

24. சதயம் – பூங்கொத்து மற்றும் வட்ட வடிவம்

25. பூரட்டாதி –  கட்டிலின் இரு கால்கள், வாள் மற்றும் இரு மனித முகங்கள்

26. உத்திரட்டாதி – கட்டில் கால்கள் மற்றும் இரட்டையர்கள்

27. ரேவதி – சின்னங்கள் மீன் மற்றும் மத்தளம்

நட்சத்திரமும் குறியீடும்சின்னங்களின் பயன்:

ஜோதிட சாஸ்திர நூல்களில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும் சின்னம் அல்லது குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நமது தனிப்பட்ட வெற்றி சின்னங்களாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதாவது, வசிக்கும் வீடு, பணிபுரியும் இடம், அணியும் ஆடைகள், வியாபார நிறுவன சின்னங்கள்,அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய சின்னங்களை பயன்படுத்தினால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் இயல்பாக அமைகின்றன என்பது நம்பிக்கையாகும்.

பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தர்மரின் ஜென்ம நட்சத்திரம் கேட்டை என்று ஒரு தகவல் இருக்கிறது. அதன் குறியீடாக வேல் குறிப்பிடப்படுகிறது. தர்மர் வேலை குறி பார்த்து எறிவதில் திறமை மிக்கவராக சொல்லப்படுகிறார். பாரதப்போரில் சல்லியனோடு நடந்த போரில், திறமையாக வேல் எறிந்து அவனை வென்றது பாரதத்தில் குறிப்பிடப்படுகிறது.

ஆஞ்சநேயரின் ஜென்ம நட்சத்திரம் மூலம் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் குறியீடாக சிங்கத்தின் வால் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆஞ்சநேயரின் கைகளில் உள்ள கதையின் வடிவம் கிட்டத்தட்ட அந்த வடிவத்தில் இருப்பதும், தனது வாலை எப்படியெல்லாம் பயன்படுத்தினார் என்பதையும் அனைவரும் நன்றாக அறிவோம்.

ருத்ரனான, சிவனின் ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை ஆகும். அதன் குறியீடாக மண்டை ஓடு சொல்லப்பட்டுள்ளது. ருத்ரன் மண்டையோட்டு மாலையை அணிந் திருப்பதோடு, கபால ஓட்டை கையில் வைத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

திருமகளான மகாலட்சுமியின் நட்சத்திரம் பூசம் ஆகும். அதன் குறியீடுகளாக தாமரை மற்றும் பசுவின் மடி ஆகியவை குறிப்பிடப்படுகிறது.

மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய வி‌ஷயம் நட்சத்திரங்களுக்கான குறியீடுகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்தலாம் என்பதாகும். அதன் மூலம் ஒருவரது ஜனன கால கிரக நிலைகளுக்கு தக்கவாறு சாதகமான சூழல்கள் அமைகின்றன என்று கருதலாம். அந்த குறியீடுகளை அல்லது சின்னங்களின் மூலம் வெற்றிக்கான கூடுதல் வாய்ப்பு களையும் பெறலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

kanavil samiyay kandaal

கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன்

கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன் கடவுள் சம்பந்தமான கனவுகள் வருவதற்கு முக்கிய காரணம் நீங்கள் உங்களை தாண்டி மற்றவர்களின் நலனை பற்றி யோசிக்கும் பொழுது தான் தோன்றுகிறது. அப்படித் தோன்றும் கனவுகள்...
ஆடியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் ஆடி மாதத்தில் பிறந்தவர்கள், தங்கள் குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டு இருப்பார்கள். ஆனால் பாசத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் கற்பனை சக்தி கொண்டவர்கள். அந்த...
கனவுகள் உண்மையா

கனவுகள் பலிக்குமா, எந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்கும்

கனவுகள் பலிக்குமா நாம் உறக்கத்தில் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. சிலர் கனவுகள் என்பது நினைவுகளின் கற்பனை வடிவம் என்றும் இன்னும் சிலர் மனிதர்களின் ஆழ் மனதில் இருக்கும் நினைவுகளே...
துவிதியை திதி பலன்கள்

துவிதியை திதி பலன்கள், துவிதியை திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

துவிதியை திதி ‘துவி’ என்றால் இரண்டு, இது ஒரு வடமொழி சொல்லாகும். இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து இரண்டாவது நாள் ஆகும். அமாவாசைக்கு அடுத்து வரும் துவிதியை சுக்கில பட்ச துவிதியை என்றும்,...
ஆண் உடல் மச்ச பலன்கள்

ஆண் உடல் பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் உடல் மச்ச பலன்கள் எல்லோருக்கும் உடலின் வெவ்வேறு பகுதிகளில் மச்சங்கள் இருக்கும். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள். அந்த வகையில் ஆணின் உடலில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மச்சங்களின்...
உதட்டை சிவப்பாக்க இயற்கை முறைகள்

இயற்கையான முறையில் உங்கள் உதடுகள் சிவப்பாக மாற

லிப்ஸ்டிக் போடாமல் உங்கள் உதடுகள் சிவப்பாக வேண்டுமா? பெண்கள் பயன்படுத்தும் பல அழகுசாதன பொருட்களில் லிப்ஸ்டிக் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் உதடுகளும் அழகாக இருந்தால் தான் நமது தோற்றம்...
புத்திர தோஷம்

புத்திர தோஷம் என்றால் என்ன? புத்திர தோஷம் நீக்கும் பரிகாரங்கள்

புத்திர தோஷம் என்றால் என்ன நமக்கு ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நாம் முற்பிறவியில் செய்த கர்மவினைகளை பொறுத்தே அமைகிறது. முற்பிறவியில் பெற்றோர்களை மதிக்காமல் கொடுமைபடுத்தியிருந்தால், அவர்கள் கொடுத்த சாபத்தால் இந்த ஜென்மத்தில் புத்திர தோஷம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.