ஸ்திரீ தீர்க்க பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

ஸ்திரீ தீர்க்க பொருத்தம் என்றால் என்ன?

ஸ்திரீ என்றால் பெண் என்று அர்த்தம், தீர்க்கம் என்றால் முழுமையான அல்லது இறுதியான என்று அர்த்தம். ஸ்திரீ தீர்க்க பொருத்தம் என்பது பொருள் வளத்தையும், செல்வத்தையும், செல்வாக்கையும் வழங்குவது ஆகும். திருமண வாழ்க்கையை எந்தவித இன்னல்களும், பிரச்சனைகளும் இல்லாமல் நீண்ட காலம் நீடிக்க இந்த ஸ்திரீ தீர்க்க பொருத்தம் அவசியம் ஆகும். திருமணத்திற்குப் பின்பு பெண்ணின் ஆயுள் கணவனின் நட்சத்திரத்தை பொருத்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதைத் தீர்மானிக்கும் பொருத்தம் இந்த ஸ்திரீ தீர்க்க பொருத்தம் ஆகும்.

ஸ்திரீ தீர்க்க பொருத்தம் என்றால் என்ன

ஸ்திரீ தீர்க்க பொருத்தம் என்பது பெண்ணின் ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தை ஆணின் நட்சத்திரத்துடன் உள்ள தொடர்பை வைத்து எவ்வாறு மாறுகிறது என பொருத்தம் பார்க்க வேண்டும். இந்த பொருத்தம் இருந்தால் குடும்ப வாழ்க்கை வளமாகவும், சகல வித சம்பத்தும் கிடைக்க பெற்று இருக்கும். இது பெண்ணின் ஆயுளுக்கு தேவையான முக்கிய பொருத்தம் ஆகும்.

ஸ்திரீ தீர்க்க பொருத்தம் எவ்வாறு பார்க்க வேண்டும்?

பெண்ணின் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை வரும் எண்ணிக்கை 7 க்குள் வந்தால் பொருத்தம் இல்லை. 7க்கு மேல் 13 வரை என்றால் மத்திம பொருத்தம் ஆகும். 13க்கு மேல் இருந்தால் உத்தமம். பெண் நட்சத்திரம் ஆண் நட்சத்திரத்திலிருந்து எவ்வளவு தள்ளி இருக்கிறதோ அவ்வளவு நல்ல பொருத்தம் இருப்பதாக கொள்ளலாம். உதாரணமாக பெண் நட்சத்திரம் கார்த்திகை, ஆண் நட்சத்திரம் அவிட்டம் என்றால் பெண் நட்சத்திரம் 21 வது நட்சத்திரமாக வரும். எனவே இதற்கு ஸ்திரி தீர்க்க பொருத்தம் உண்டு.

ஸ்திரீ தீர்க்க பொருத்தம் இல்லை என்றால்?

ஸ்திரீ தீர்க்க பொருத்தம் இல்லையென்றால் பெண்ணின் ஜாதகத்தில் 6ம் ஸ்தானம் அல்லது 8ம் ஸ்தானம் அல்லது ஆண் ஜாதகத்தில் 12ம் ஸ்தானம் அல்லது 2ம் ஸ்தான பலம் மூலம் ஜோதிடர்கள் கணிப்பார்கள். பெண் நட்சத்திரம் அசுவினி என்றால், சித்திரை முதல் ரேவதி வரை உள்ள ஆணின் நட்சத்திரங்களுக்கு ஸ்திரீ தீர்க்க பொருத்தம் உண்டு. இவை 13-க்கு மேற்பட்டவை. பரணி முதல் அஸ்தம் வரை 13 எண்ணிக்கைக்கு உட்பட்ட ஆண் நட்சத்திரங்களுக்கு ஸ்திரீ தீர்க்க பொருத்தம் இல்லை என அறியலாம். ஆனால், இது கண்டிப்பான விதி கிடையாது. இதற்கும் ஜோதிடத்தில் சில விதிவிலக்குகள் உண்டு.

ஸ்திரீ தீர்க்க பொருத்தம் இருந்தால் மகாலட்சுமி கடாட்சமும், சுபிட்சமும் கிடைக்கும். சகலவிதமான செல்வங்களும் விருத்தியாகும். பெண் வாழ்நாள் முழுவதும் சிறப்புடன் ஆணுடன் கூடி வாழ வேண்டும் என்பதற்காக இந்த திருமண பொருத்தத்தை சோதிடத்தில் வைத்துள்ளனர்.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சிக்கன் சுக்கா செய்யும் முறை

சிக்கன் சுக்கா வறுவல் செய்வது இவ்வளவு சுலபமா

சிக்கன் சுக்கா வறுவல் சிக்கனின் சுவையே அலாதிதான். அதிலும் சிக்கனை விதவிதமாக செய்து சாப்பிடுவதை மிகவும் விரும்புவார்கள் சிக்கன் பிரியர்கள். அந்த வகையில் இன்று நாம் காண இருப்பது காரசாரமான சிக்கன் சுக்கா வறுவல்,...
கைகளை அழகாக வைத்துக்கொள்ள

கைகளை மென்மையாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி?

கைகளை மென்மையாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி? நம் அனைவருக்குமே நம் முகம் போல கைகளையும் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் விரும்புவோம். முகம்தான் நம் உடலின் கிரீடம் என்ற நிலையில்...
சுறா புட்டு செய்வது எப்படி

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிக சிறந்த உணாவாகும். குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால்...

எலும்புகளை பலப்படுத்தும் எள்ளுத் துவையல்

எள்ளு துவையல் மூட்டு தேய்மானம், எலும்பு பலம் குறைதல் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எள்ளு ஒரு அருமருந்தாகும்.  இதுமட்டுமல்லாமல் எள்ளில், இரும்பு சத்து, வைட்டமின், 'ஏ, பி' ஆகியவை நிறைந்துள்ளதால், இளம் நரையை...
திருமணத்தில் மாலை மாற்றுதல்

திருமணத்தில் மாலை மாற்றுதல் சடங்கு ஏன் செய்யபடுகிறது?

திருமணத்தில் மாலை மாற்றுதல் ஒரு திருமண பேச்சு ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை எண்ணற்ற சடங்குகள் நம் சமுகத்தில் செய்கின்றனர். ஆனால் பல சடங்குகள் ஏன் செய்கின்றனர் என பலருக்கும் தெரிவதில்லை. அவற்றில் ஒன்று...
கண்களை எப்படி பாதுகாப்பது

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சில எளிய வழிகள்

கண்களை பரமாரிக்க சில எளிய வழிகள் நம் உடலில் மிகவும் மென்மையான உறுப்பு எது என்றால் அது நம் கண்கள் தான். கண்கள் ஒரு மனித்தனுக்கு மிகவும் இன்றியமையாதது. கண்களால் தான் நம் அனைத்தையும்...
ரவா லட்டு செய்முறை

சுவையான ரவா லட்டு

ரவா லட்டு தேவையான பொருட்கள் ரவை - ½ கிலோ சர்க்கரை – ¼ கிலோ முந்திரி – தேவையான அளவு திராட்சை – தேவையான அளவு நெய் – சிறிதளவு ஏலக்காய் தூள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.