உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம் மற்றும் கன்னி
உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன்
உத்திரம் முதல் பாதத்தின் இராசி மற்றும் அதிபதி – சிம்மம் : சூரியன்
உத்திரம் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் பாதத்தின் ராசி மற்றும் அதிபதி – கன்னி : புதன்
உத்திரம் நட்சத்திரத்தின் நட்சத்திர தேவதை : சூரியன்
உத்திரம் நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் : சிவன்
உத்திரம் நட்சத்திரத்தின் நட்சத்திர குணம் : மனுஷ குணம்
உத்திரம் நட்சத்திரத்தின் விருட்சம் : அலரி
உத்திரம் நட்சத்திரத்தின் மிருகம் : ஆண் எருது
உத்திரம் நட்சத்திரத்தின் பட்சி : மரம்கொத்தி
உத்திரம் நட்சத்திரத்தின் கோத்திரம் : வசிஷ்டர்

உத்திரம் நட்சத்திரத்தின் வடிவம்

உத்திரம் நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 12வது இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘உத்தரம்’ என்ற பெயரும் உண்டு. உத்திரம் நட்சத்திரம் வான் மண்டலத்தில் கட்டில்கால் போன்ற வடிவத்தில் காணப்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இனிமையாக பேசுக்கூடியவர்கள். படிப்பில் நாட்டம் உடையவர்கள். அழகான முக அமைப்பு உடையவர்கள். இவர்களுக்கு சிறந்த மன வலிமையும், உண்மையே பேசும் சுபாவமும் இருக்கும். முன் கோபம் உடையவர்கள். உண்மையை பேசக்கூடியவர்கள். தெய்வ நம்பிக்கை உடையவர்கள். அழகிய நடை உடையவர்கள். தைரியமானவர்கள், தனக்கு தவறென பட்டால் நேரடியாக கேட்க கூடியவர்கள். கர்வம் நிறைந்தவர்கள். தாய் மேல் அதிக அன்பு கொண்டவர்கள். பிறருக்கு உதவி செய்யும் இயல்பு கொண்டவர்கள். பிறர் செய்த உதவியை மறக்க மாட்டார்கள். பிறருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் குணம் கொண்டவர்கள்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கருணை உள்ளம் நிறைந்தவராகவும், பொறுமை மிக்கவராகவும், நல்ல பண்பாடான நடத்தை கொண்டவராகவும், பலராலும் விரும்பி நேசிக்கப்படுபவராகவும் இருப்பார்கள். இவர்கள் பலவித கல்வி கேள்விகளில் சிறந்தவராக இருப்பார்கள். சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தங்கள் சுயமுயற்சியில் பணத்தை சம்பாதித்திடும் ஆற்றல் மிக்கவர்கள். இவர்கள் தங்கள் சொந்த சம்பாத்தியத்தில் சுகபோகமாக வாழ்க்கை நடத்துவார்கள். இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கும். இவர்கள் தங்கள் 28 லிருந்து 31 வயது வரையான காலத்தில், வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.

இவர்கள் செய்யும் காரியங்கள் அனைத்திலும், உண்மையாகவும், ஈடுபாட்டோடும் செய்வார்கள். மிகவும் சாதுர்யம் மிக்கவர்கள். பெரும்பாலும் மக்கள் தொடர்புடைய துறைகளிலேயே பிரகாசிப்பார்கள். இவர்களுக்கு இயற்கையாகவே கம்பீரமான நடையும், பெண்களை கவரும் உடலமைப்பும் இருக்கும். ஒருமுறை ஒரு விஷயத்தில் முடிவு செய்து விட்டால் அந்த முடிவை மாற்றிக் கொள்ளும் மனப்போக்கு இல்லாதவர்கள். இவர்களுக்கு அனைவரையும் கவரக் கூடிய பேச்சாற்றல் இருக்கும். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் அன்பாக பழகுவார்கள். தங்கள் உடல் நலனில் அக்கறை எடுத்து கொள்ள மாட்டார்கள்.

இவர்களுக்கு படிப்பறிவை விட அனுபவ அறிவு அதிகமிருக்கும். சிக்கனமாக இருப்பதில் விருப்பமுள்ளவர்கள். சுயமரியாதை அதிகம் உடையவர்கள். இவர்களின் முற்பகுதி வாழ்க்கையில் முன்னேற்றம் எதிர்பார்த்த அளவு இருக்காது. மத்திம வயதுக்கு மேல்தான் சகல சௌபாக்கியங்களும் இவர்களிடம் சேரும். இவர்களின் திருமண வாழ்க்கை நல்ல விதமாகவே அமையும். இவர்கள் செய்யும் காரியங்களுக்கு சரியான காரணம் இருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதில் வல்லவர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற போராடுவார்கள். நன்றியுணர்வு அதிகம் கொண்டவர்கள்.

உத்திரம் நட்சத்திரம் முதல் பாதம் :

இவர்களிடம் உத்திரம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் பிறர் விரும்பும் வகையில் இனிமையாக பேசுவதில் வல்லவர்கள். உயர்ந்த குணம் உடையவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவர்கள். மனத்தூய்மை உடையவர்கள். தீய குணம் இல்லாதவர்கள். உறவினர்கள் மேல் அன்பு உடையவர்கள். கடுமையான உழைப்பாளிகள். பெற்றார்களிடமும், சகோதரர்களிடமும் பாசம் உள்ளவர்கள். கண்ணியமாக இருக்க விரும்புவார்கள்.

உத்திரம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் :

இவர்களிடம் உத்திரம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் பொன், பொருள் சேர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். கவனக்குறைவால் பொருளை இழப்பவர்கள். பொறுமை இல்லாதவர்கள். அலைபாயும் மனதை உடையவர்கள். இவர்களிடம் சுயநலம் இருக்கும். இவர்களிடம் தலைமை தாங்கும் பண்பு அதிகம் இருக்கும். எதிலும் அவசரமாக முடிவெடுத்து விட்டு பின்னர் வருத்தபடுவார்கள்.

உத்திரம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் :

இவர்களிடம் உத்திரம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். நேர்மையானவர்கள். வெற்றிக்காக எதையும் செய்யக் கூடியவர்கள். இவர்களிடம் கர்வம் அதிகம் இருக்கும். தான் என்ற அகங்காரம் அதிகம் இருக்கும். கால்நடைகளால் இலாபம் அடைபவர்கள். ஆணவம் கொண்டவர்கள். ஆச்சாரம் உடையவர்கள். தனிமையை விரும்புபவர்கள். ஒரு செயலில் வெற்றி பெறுவதற்காக எதையும் துணிந்து செய்வார்கள்.

உத்திரம் நட்சத்திரம் நான்காம் பாதம் :

இவர்களிடம் உத்திர நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் நல்ல உழைப்பாளிகள். இவர்களிடம் நல்ல பழக்க வழக்கங்கள் இயல்பாகவே குடி கொண்டு இருக்கும். பிறர் செய்த உதவியை மறக்காதவர்கள். மற்றவர்களை மதிக்கக்கூடியவர்கள். பெருந்தன்மையான குணம் உடையவர்கள். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ தெரிந்தவர்கள். இவர்களுக்கு கல்வி கற்பதில் அதிக ஆர்வம் இருக்கும். தர்ம சிந்தனை அதிகம் இருக்கும்.

மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கோவில் குளத்தில் காசு போடுவது

கோவில் குளத்தில் காசு போடலாமா?

கோவில் குளத்தில் காசு ஏன் போடுகிறார்கள் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களுக்கு நாம் சென்றால் அந்த கோவில் குளம் அல்லது கிணற்றில் காசு போடப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஒரு சிலர் அதில் காசு போடுவதையும்...
மச்ச சாஸ்திர பலன்கள்

நவகிரக மச்சம் என்றால் என்ன? அவற்றின் பலன்கள் யாவை?

நவகிரக மச்சம் சிலருக்கு பிறக்கும்போதே உடலில் நவகிரக மச்சங்கள் இருக்கும். நவகிரக மச்சம் என்பது சூரியன் போன்ற வடிவிலோ, சந்திர வடிவிலே, இன்னும் சில விசேஷ நவகிரக குறியீடுகள் போலவே, உருவத்திலோ, வடிவத்திலோ, நிறத்திலோ,...
அஷ்டமி நவமி திதிகள்

அஷ்டமி, நவமி திதிகள் ஏன் மக்களால் புறகணிக்கப்டுகின்றன

அஷ்டமி, நவமி திதிகள் அமாவாசை, மற்றும் பௌர்ணமி நாட்களுக்கு பிறகு வரும் 8வது நாள் அஷ்டமி, 9வது நாள் நவமி ஆகும். அஷ்டமி, நவமி வரும் திதிகளில் நல்ல காரியங்கள் செய்ய கூடாது, அல்லது...
திருமணத்தில் மாலை மாற்றுதல்

திருமணத்தில் மாலை மாற்றுதல் சடங்கு ஏன் செய்யபடுகிறது?

திருமணத்தில் மாலை மாற்றுதல் ஒரு திருமண பேச்சு ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை எண்ணற்ற சடங்குகள் நம் சமுகத்தில் செய்கின்றனர். ஆனால் பல சடங்குகள் ஏன் செய்கின்றனர் என பலருக்கும் தெரிவதில்லை. அவற்றில் ஒன்று...
நார்ச்சத்துள்ள உணவு வகைகள்

உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகள்

உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள் நாம் தினந்தோறும் பல வகையான உணவுப் பொருட்களை சாப்பிடுகிறோம். நாம் உட்கொள்ளும் அனைத்து உணவுகளிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும்....
புரட்டாசி மாத வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?

புரட்டாசி சனிக்கிழமை விரதம் தமிழ் மாதங்கள் மொத்தம் 12. அதில் பெருமாளுக்கு உகந்த மாதம் என்றால் அது புரட்டாசி மாதம் தான். புரட்டாசி மாதம் தமிழ் மாதங்களில் ஆறாவதாக இருக்கும் மாதம் ஆகும். புரட்டாசி...
ஜோதிடத்தில் யோகங்கள்

யோகங்கள் என்றால் என்ன? பலவகையான ஜாதக யோகங்கள்

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது அதற்கு எதிரான கெடு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.