பலவகையான மனிதர்கள் கனவில் வந்தால்
கனவு காணாத மனிதர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வித்தியாசமான கனவுகளை காண்கின்றனர். ஆனால் அந்த கனவுக்கான அர்த்தம் தெரியாமல் பல்வேறு குழப்பத்துக்கு ஆளாகின்றனர். அந்த வகையில் பலவகையான மனிதர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1. துறவிகள் கனவில் வந்தால் பெரியவர்கள் உதவி தகுந்த நேரத்தில் கிடைக்கும் என்று அர்த்தம்.
2. வழுக்கை தலை கொண்ட மனிதரை கனவில் கண்டால் அது உங்கள் கணவராக இருந்தால் நன்மை உண்டு. அதுவே உங்களுக்கு சம்பந்தமில்லாத வேறு ஒருவர் வழுக்கை தலையுடன் கனவில் வந்தால் கையில் காசு தங்காது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று பொருள்.
3. பெரிய கூட்டம் கனவில் வந்தால் அது கல்யாண வீடாக இருந்தால் நல்லது கிடையாது என்று அர்த்தம். அதுவே ஒரு சாவு வீடாக இருந்தால் நல்லது என்று அர்த்தம்.
4. கோயில், குளம், மரம், போன்ற இடங்களில் கூட்டத்தை கனவில் கண்டால் தொழில் மேன் மேலும் விருத்தி அடையும் என்று அர்த்தம்.
5. விவசாயி நிலத்தை உழுவதைப்போல் கனவு வந்தால், சேமிப்பு பெருகும் என்று அர்த்தம்.
6. நீங்கள் விவசாயம் செய்வது போல கனவு கண்டால், வாழ்க்கையில் அனைத்து வளங்களும் கிடைக்கும்.
7. ராஜா அல்லது ராணி கனவில் வந்தால் அரசாங்கத்தால் நன்மைகள் ஏற்படும், மேலும் தீடீர் தனலாபம் ஏற்படும் என்றும் பொருள்.
8. ஊனமுற்றவர்கள் அல்லது மாற்று திறனாளிகள் கனவில் வந்தால் உங்களுக்குள் இவ்வளவு நாட்கள் மறைந்து கிடந்த திறமைகள் சரியான நேரத்தில் வெளிப்படும் என்று அர்த்தம்.
9. மனநலம் சரியில்லதவர்கள் அல்லது மனநல மருத்துவமனை கனவில் வந்தால் நீங்கள் வரும் நாட்களில் நிதானம் தவறி எதையோ செய்ய போகிறீர்கள் என்று அர்த்தம்.
10. கனவில் உங்கள் பெற்றோர் வந்தால் நாம் மனதில் நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும் என்று பொருள்.
11. ஆசிரியர் பாடம் நடத்துவது போல கனவு வந்தால் நாம் நினைத்த காரியம் நிறைவேறும் என்று அர்த்தம்.
12. ஆசிரியர் அல்லது குருவை கனவில் கண்டால் நன்மைகள் வந்து சேரும். செல்வம் மற்றும் செல்வாக்கு நிலை உயரும் என்று பொருள்.
13. நீங்கள் இறந்து விட்டது கனவு வந்தால் உங்களின் ஆயுள் கூடும் என்று அர்த்தம்.
14. நமக்கு வேண்டியவர் யாராவது இறந்துவிட்டது போல கனவு வந்தால் நம்மை சூழ்ந்திருந்த துன்பங்கள் விலகும் என்று அர்த்தம்.
15. எதிரிகள், துரோகிகள், விரோதிகள் போன்றவர்கள் கனவில் வந்தால் பிரச்சனை வரபோகிறது என்று அர்த்தம். அதனால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது.
16. வயதானவர்கள் கனவில் வந்தால் மிகவும் நல்லது.
17. கர்ப்பிணி பெண் கனவில் வந்தால் பொன், பொருள் சேர்க்கை சேரும், நன்மை அதிகரிக்கும் என்று அர்த்தம்.
18. கர்ப்பிணிகள் கனவில் வந்தால் வம்சம் தழைக்கும் என்று அர்த்தம்.
19. இரண்டு கர்ப்பிணி பெண்கள் கனவில் வந்தால் இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் உண்டு என்று அர்த்தம்.
20. சிறு குழந்தைகள் கனவில் வந்தால் எல்லா விதத்திலும் நன்மைகள் ஏற்படும் என்று பொருள்.
21. குள்ளமான மனிதர்கள் கனவில் வந்தால் பிறரால் ஏமாற்றப்பட கூடிய சூழ்நிலை உருவாகும் என்று அர்த்தம்.
22. வாய்பேச இயலாதவர்கள் / ஊமைகள் கனவில் வந்தால் உங்கள் வாயால் வீண் வம்பு வழக்குகள் ஏற்படும் என்று அர்த்தம்.
23. குடுகுடுபைக்காரன் கனவில் வந்தால் விரைவில் நல்ல செய்தி வரபோகிறது என்று அர்த்தம்.
24. தபால்காரர் / போஸ்ட்மேன் கனவில் வந்தால் சந்தோஷமான நல்ல செய்தி வரபோகிறது என்று அர்த்தம்.
25. செய்யும் வேலையில் இருந்து நம்மை நீக்குவது போல கனவு வந்தால் நல்ல சகுனம் அல்ல, வேலையில் ஏதேனும் சிக்கல்கள் வரலாம் என்று அர்த்தம்.
26. முனிவர்கள், யோகிகள் அல்லது மகான்கள் கனவில் வந்தால் மிகவும் நல்லது. இது நீங்கள் பொது வாழ்கையில் ஈடுபட போவதற்கான அறிகுறியாகும்.
27. திருநங்கைகள் கனவில் வந்தால் உங்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட போகிறது என்று பொருள்.
28. குறவர்கள் கனவில் வந்தால் உங்களின் நன்மதிப்பு குறைய போகிறது என்று பொருள்.
29. நெசவாளர் நம் கனவில் வந்தால் நன்மை ஏற்படும் என்று அர்த்தம்.
30. காவலர்கள் / போலீஸ் கனவில் வந்தால் உங்களுக்கு அரசாங்கத்தால் தொல்லைகள் ஏற்படலாம் என்று அர்த்தம்.
31. குருக்கள் அல்லது புரோகிதர் கனவில் வந்தால் நெருப்பால் தீமை ஏற்படலாம் என்று அர்த்தம்.
32. குழந்தை இறந்துபோனது போல கனவு கண்டால் வர போகும் காலங்களில் கெடுதல் ஏற்படலாம் என்று அர்த்தம்.
33. முதியவர்கள் கனவில் வந்தால் நன்மைகள் உண்டாகும் என்று அர்த்தம்.
34. பிச்சை போடுவது போல கனவு வந்தால் லஷ்மி கடாஷம் ஏற்படும் என்று அர்த்தம்.
35. ஒரு அந்தணர் மட்டும் கனவில் வந்தால் நல்லது கிடையாது.
36. இரண்டு அந்தணர்கள் கனவில் வந்தால் மிகுந்த நன்மை ஏற்படும் என்று அர்த்தம்.
37. பிணத்தை தூக்கிச் செல்வது போல கனவு கண்டால் நன்மை ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
38. விதவை பெண் வீட்டிற்குள் வருவது போல கனவு வந்தால் கெட்ட விஷயம் நடக்க போகிறது என்று பொருள்.
39. சுமங்கலி பெண் கனவில் வந்தாலோ அல்லது சுமங்கலி வீட்டிற்குள் வருவது போல கனவு கண்டாலோ மிகுந்து நன்மை ஏற்படும் என்று அர்த்தம்.
40. கன்னி பெண்கள் கனவில் வந்தால் நன்மை ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
41. குற்றவாளிகள் கனவில் வந்தால் கெட்ட பெயர் ஏற்படலாம் என்று அர்த்தம்.
42. நகை செய்பவர் / பொற்கொல்லர் கனவில் வந்தால் தொழில் மென்மேலும் மேன்மை ஏற்படும் என்று பொருள்.
43. தேவலோகப் பெண்கள் கனவில் வந்தால், எதிர்பாராத நன்மைகள் ஏற்படும் என்று அர்த்தம்.
44. நீங்கள் ஓடிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால், எதிர்காலத்தில் உங்களின் நிலைமை மேன்மை அடையும் என்று அர்த்தம்.
45. நீங்கள் கீழே விழுவது போல கனவு கண்டால், நஷ்டமடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.
46. குறட்டை விடுவது போல கனவு வந்தால், சுக வாழ்க்கை ஏற்படும் என்று அர்த்தம்.
47. மற்றவர்கள் நம்மை கேலி செய்வதுபோல கனவு கண்டால், தொழிலில் மேம்பாடு, உத்தியோகத்தில் உயர்வு, பொருள் சேர்க்கை உண்டாகும் என்று அர்த்தம்.