ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #11

ஜாதகத்தில் யோகங்கள்

யோகம் என்பது நாம் செய்த கர்ம வினைகளின் அடிப்படையில் நாம் அனுபவிக்கும் இன்பமாகும். இதை தான் நம் முன்னோர்கள் ‘திணை விதைத்தவன் திணையை அறுவடை செய்வான்” என்று சொன்னார்கள். செய்த வினையை யாராலும் மாற்ற முடியாது ஆனால் செய்யப்போகும் வினையை மாற்றும் ஆற்றல் நம் எல்லோர்க்கும் உண்டு. இந்த யோகங்கள் நாம் பிறக்கும்போதே நாம் பிறந்த நேரத்தை வைத்து கணிக்கபடுகிறது

ஜாதகத்தில் உள்ள யோகங்கள்

யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அந்த வகையில் ஜாதக யோகங்கள் பலவாறு இருக்கும். நாம் இந்த பகுதியில் ஒரு சில யோகங்களையும் அதனால் உண்டாகும் பலன்களையும் பார்ப்போம்,

அதியோகம் :

லக்னத்துக்கு அல்லது சந்திர லக்னத்திற்கு 6, 7 மற்றும் 8ம் இடங்களில் சுக்கிரன், புதன், குரு மற்றும் சுப கிரகங்கள் ஒன்றாகவோ, 6 அல்லது 8ம் வீடுகளில் மறைந்து இருந்தாலோ அதியோகம் உண்டாகிறது.

அதியோகத்தின் பலன்கள் :

இவர்கள் நீதி வழங்குவதில் வல்லவர்கள். நிதியுடையவர். அதிகாரம் கொண்ட பதவிகளில் வல்லமை உடையவராக திகழ்வார்கள்.

சக்கரவர்த்தி யோகம் :

ராகுவும், குருவும் ஒரே நட்சத்திரத்தில் ஒரே பாதத்தில் கூடி இணைந்து இருந்தால் சக்கரவர்த்தி யோகம் உண்டாகிறது.

சக்கரவர்த்தி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

செல்வாக்கு உள்ள கோடீஸ்வரராக இருப்பார். புகழால் உலகை ஆளக் கூடியவர்கள்.

புத சுக்கிர யோகம் :

புதனும், சுக்கிரனும் பலம் பெற்று உச்ச ஆட்சி வீடுகளான ரிஷபம், மிதுனம், கன்னி மற்றும் துலாம் போன்ற வீடுகளிலோ அல்லது கேந்திர ஸ்தானத்திலோ அல்லது நட்பு வீடுகளிலோ அமையப் பெற்றால் புத சுக்கிர யோகம் உண்டாகிறது.

புத சுக்கிர யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

இவர்கள் கலைகளில் புகழ் உடையவராக திகழ்வார்கள். வாழ்வில் செல்வந்தராகவும் கலைகளான எழுத்து, ஓவியம், இசை, மற்றும் ஆடல் கலைகளில் சிறந்து விளங்குபவராக இருப்பார்கள்.

குரு சண்டாள யோகம் :

குருவும், ராகுவும் ஒரு கிரகத்தில் ஒன்றாக இணைந்து இருந்து ஆட்சி உச்சம் அடையாமல் இருந்தால் குரு சண்டாள யோகம் உண்டாகிறது.

குரு சண்டாள யோகத்தின் பலன்கள் :

செல்வம் செல்வாக்கு உண்டாகிறது, வாழ்வில் வெற்றிகள் குவியும்.

காலசர்ப்ப யோகம் :

ராசி கட்டத்தில் உள்ள ஏழு கிரகங்களும் ராகு, கேதுவிற்கு இடையே இருந்தால் காலசர்ப்ப யோகம் உண்டாகிறது.

கால சர்ப்ப யோகத்தின் பலன்கள் :

ஒரு சமயம் நல்லது நடக்கும், இன்னொரு சமயம் கெட்டது நடக்கலாம். இவர்கள் வாழ்க்கையில் ஏற்ற, இறக்க நிலையை இருக்கும்.

யோகங்களின் வகைகள்

அதிர்ஷ்ட லட்சுமி யோகம் :

அசுர குருவான சுக்கிரன் லக்னத்திற்கு 1, 5 மற்றும் 9ம் இடங்களில் நின்று சுக்கிரன் ஆட்சி செய்யும் இடம் நட்பு வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருந்தால் அது அதிர்ஷ்ட லட்சுமி யோகம் ஆகும்.

அதிர்ஷ்ட லட்சுமி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

இவர்கள் லட்சுமி கடாட்சம் மிக்கவர்களாக இருப்பார்கள். பெண்களின் நேசமும், அதிர்ஷ்டமும் கிடைக்கும்.

பேரி யோகம் :

சுக்கிரனுக்கு குரு கேந்திரம் பெற்று, ஒன்பதாம் இடத்தில் வலுத்து நின்று பலமாய் அமைந்திட பேரி யோகம் ஆகும்.

பேரி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

இவர்கள் நோயில்லாமல் சுக வாழ்வு வாழ்வார்கள். நல்ல குணமுடைய ஆசார சீலனாய் வாழ்வார்கள்.

தாரை யோகம் :

சந்திரனுக்கு நான்காம் வீட்டிலோ அல்லது பத்தாம் வீட்டிலோ சுக்கிரன் இருந்தால் தாரை யோகம் உண்டாகும்.

தாரை யோகத்தின் பலன்கள் :

இவர்கள் பெரும் மனைக்கு உரியவராக திகழ்வார்கள். சொகுசான வாகன வசதியை அமையப் பெற்றவராகவும் இருப்பார்கள். பெரும் தனத்திற்கு உரியவராகவும் விளங்குவார்கள்.

கோடீஸ்வர யோகம் :

ராகு கேந்திரத்தில் தனித்து நின்றால் கோடீஸ்வர யோகம் ஏற்படுகிறது. ராகு சரராசிகளில் தனித்து நின்றாலும், குருவுடன், கேது சேர்ந்து இருந்தாலும் கோடீஸ்வர யோகம் உண்டாகிறது. புதனும், சுக்கிரனும் அல்லது புதனோ, சுக்கிரனோ குரு, கேதுவுக்கு 9ல் நின்றாலும் கோடீஸ்வர யோகம் ஏற்படும். மேலும் ராகுவுக்கு 9ல் புதனும், சுக்கிரனும் நின்றால் கோடீஸ்வர யோகம் ஏற்படும்.

கோடீஸ்வர யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

இவர்களுக்கு சொத்து சேர்க்கை அதிகம் இருக்கும். அதிகாரம் உள்ள பதவிகள் கிடைக்கும். கீர்த்தி உடையவராக வாழ்வார்கள்.

நிபுண யோகம் :

லக்னத்திற்கு 2, 4 மற்றும் 8ல் புதன் உச்சம் மற்றும் ஆட்சி வீடாக அமைந்தால் நிபுண யோகம் உண்டாகும்.

நிபுண யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

இவர்கள் எதையும் சாதிக்க வல்லவர்கள். கல்வியில் சிறந்த நிபுணத்துவம் பெற்று இருப்பார்கள். நிதி நிர்வாகத்தில் திட்டம் தீட்டும் வேலை உடையவர்.

குபேர யோகம் :

குரு ஆட்சியாகி லக்னத்திற்கு 2 அல்லது 5 இருக்க சனி 11 அல்லது 9 ல் உச்ச ஆட்சியாகி அல்லது 2, 5, 9 மற்றும் 15ம் வீட்டின் அதிபதிகள் நல்ல ஆதிபத்தியம் அடைந்தால் குபேர யோகம் உண்டாகிறது.

குபேர யோகத்தால் கிடைக்கும் பலன்கள் :

இவர்கள் செல்வந்தராக வாழக்கூடியவர்கள்.

ஜாதக யோகங்கள்

லட்சுமி யோகம் :

சுக்கிரனும், 9ம் அதிபதியும் சேர்ந்து கேந்திர வீடுகளான 2, 11 ல் இருக்க உச்ச ஆட்சியாய் அமைந்தால் லட்சுமி யோகம் உண்டாகிறது.

லட்சுமி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

இவர்கள் மன்னர்களை போன்று அனைத்து சுகபோக வாழ்க்கையை வாழக்கூடியவர்கள். ஆனால் சுக்ர தசையில் தான் இப்பலன் முழுமையாக கிடைக்கும்.

ஹர்ஷ யோகம் :

6ம் அதிபதி 6ம் இடத்தில் ஆட்சி பெறுவதோ அல்லது 6ம் இடத்தை 6ம் அதிபதியே பார்வை இடுவதால் ஹர்ஷ யோகம் உண்டாகிறது.

ஹர்ஷ யோகத்தால் கிடைக்கும் பலன்கள் :

இந்த யோகம் அமைந்தவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். நல்ல நண்பர்கள் மற்றும் மனைவி அமைவார்கள். கீர்த்தி மற்றும் தனம் உண்டாகும்.

சரள யோகம் :

8ம் அதிபதி, 8ம் இடத்தில் ஆட்சி பெறுவதோ அல்லது 8ம் இடத்தை 8ம் அதிபதியே பார்வை இடுவதால் சரள யோகம் உண்டாகிறது.

சரள யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

ஆயுள் விருத்தி உண்டாகும். புகழ், தனம் மற்றும் வெற்றி கொண்ட வாழ்க்கை உண்டாகும். நீண்ட ஆயுள் உடையவர். பயமில்லாதவர். தைரியமிக்கவர், கல்வியாளர், பகைவெல்லும் திறமைசாலி. உயர்நிலை பெரும் யோகமுடையவர்.

விபரீத ராஜ யோகம் :

8ம் வீட்டுக்கு உடையவன் 6ம் வீட்டிலோ அல்லது 12ம் வீட்டிலோ இருந்தால் விபரீத ராஜ யோகம் உண்டாகிறது. 8க்குடையவனும், 6க்குடையவனும் பரிவர்த்தனைப்பட்டு இடம் மாறி நின்றாலும் விபரீத ராஜ யோகம் உண்டாகிறது. 8க்குடையவனும், 12க்குடையவனும் பரிவர்த்தனைப்பட்டு இடம் மாறி நின்றாலும் விபரீத ராஜ யோகம் உண்டாகும்.

விபரீத ராஜ யோகத்தின் பலன்கள் :

சாதாரண நிலையில் வாழ்ந்து வரும் ஒருவர் திடீரென் உயர்ந்த அந்தஸ்து உடையவராக ஆகிறார். 8க்குடையவனின் தசை காலங்களில் எதிர்பாராத பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நிலம் மற்றும் வாகனச் சேர்க்கை உண்டாகும்.

உங்கள் ஜாதகத்தில் உள்ள யோகங்கங்களை பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சிக்கன் மஞ்சூரியன் ரெசிபி

சிக்கன் மஞ்சூரியன் செய்வது எப்படி

சிக்கன் மஞ்சூரியன் அசைவ உணவுகளில் முக்கிய இடம் வகிப்பது சிக்கன். சிக்கன் ஆரோக்கியம் நிறைந்தது மட்டுமல்ல, மற்ற அசைவ உணவுகளை விட மலிவானது. சிக்கனை விதவிதமாக சமைத்து சாப்பிட அனைவரும் விரும்புவர். சிக்கனை பாரம்பரிய...
மச்ச சாஸ்திரம் என்றால் என்ன

மச்ச சாஸ்திரம் என்றால் என்ன? மச்ச பலன்களை எவ்வாறு கணிப்பது

மச்சம் என்றால் என்ன? நமது உடலில் தலையில் இருந்து கால் பாதம் வரை உள்ள தோலில் அமைந்துள்ள சிறு சிறு புள்ளிகள் தான் மச்சங்கள் ஆகும். இது மஞ்சள், நீலம், சிவப்பு, வெளுப்பு, கருப்பு...
உணவை சிந்தாமல் சாப்பிட வேண்டும்

உங்கள் வீட்டின் வறுமைக்கு காரணம் நீங்கள் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்வது தான்

உங்கள் வீட்டின் வறுமைக்கு காரணம் நீங்கள் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்வது தான்   சமைக்கும் பொழுது இன்முகத்துடன் சமைத்தால் தான் அந்த சமையல் ருசி அதிகரிக்கும். அது போல உணவு சாப்பிடும் பொழுதும் பேசாமல்,...
சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி

சிக்கன் நூடுல்ஸ் வீட்டிலேயே செய்வது எப்படி

சிக்கன் நூடுல்ஸ் பலரும் விதவிதமாக சிக்கனை சமைத்து சாப்பிட விரும்புவர். அதில் ஒன்றுதான் சிக்கன் நூடுல்ஸ். தற்போது பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவு கடைகளில் இந்த சிக்கன் நூடுல்ஸ் மிகவும் பிரபலம். சிறுவர்கள்...
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் திருவோணம் நட்சத்திரத்தின் இராசி : மகரம் திருவோணம் நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன் திருவோணம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சனி திருவோணம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : விஷ்ணு திருவோணம் நட்சத்திரத்தின் பரிகார...
மீன் குழம்பு செய்வது எப்படி

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு தேவையான பொருட்கள் மீன் – ½  கிலோ புளி – எலுமிச்சை அளவு பூண்டு – 10 பல் சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 1 ...
திருமண சடங்குகள்

திருமணத்தின்போது பால், பழம் கொடுப்பது எதற்காக?

திருமணத்தின்போது பால், பழம் கொடுப்பது எதற்காக? திருமணம் என்றாலே பல்வேறு சடங்குகள், சம்ப்ரதாயங்கள் நிறைந்திருக்கும். ஒவ்வொரு திருமணத்திலும் அவரவர் குடும்ப வழக்கதிற்கு ஏற்ப சடங்குகள் வேறுபடும். குறிப்பாக இந்து மத திருமணத்தில் பல வகையான...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.