நட்சத்திரங்களும் அதற்குரிய பரிகார கோவில்களும்

நட்சத்திரங்களும் அதற்குரிய பரிகார கோவில்களும்

அஸ்வினி

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வர பகவானை வணங்கி வருவது நல்லது. திருநள்ளாறு சென்று சனீஸ்வரன் மற்றும் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரரை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

பரணி

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாகாளியை வணங்குவது நல்லது. திருவாலங்காடு சென்று வழிபட்டு வருவது நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும்.

கிருத்திகை

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆதிசேஷனை வணங்குவது நல்லது. திருநாகை சென்று வழிபட்டு வருதல் நலம் தரும்.

பரிகார கோவில்கள்ரோகிணி

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நாகநாதசுவாமியை வழிபடுவது நன்மையை செய்யும். ஒரு முறையேனும் திருநாகேஸ்வரம் சென்று வர வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

மிருகசீரிஷம்

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்காதேவியை வழிபட்டு வர நன்மைகள் அதிகரிக்கும். ஒருமுறையேனும் கதிராமங்கலம் சென்று வருதல் பல நன்மைகளை செய்யும்.

திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வரரை வழிபட்டு வர நன்மைகள் நடந்தேறும். ஒரு முறையேனும் திருநள்ளாறு சென்று வர வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

நட்சத்திரங்களும் கோவில்களும்புனர்பூசம்

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தென்முகக் கடவுளை வழிபட நன்மைகள் மேலோங்கும். ஆலங்குடி சென்று குருபகவானை வழிபட்டு வருவது மிகவும் நல்லது.

பூசம்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வரரை வழிபட நன்மைகள் மேலோங்கும். குச்சனூர் சென்று வர வாழ்வில் நல்ல திருப்பங்களை சந்திப்பீர்கள்.

ஆயில்யம்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வரரை வழிபட நன்மைகள் மேலோங்கும். ஒரு முறையேனும் திருப்பரங்குன்றம் சென்று வர வாழ்வில் நல்ல திருப்பங்களை சந்திப்பீர்கள்.

மகம்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தில்லை காளியை வழிபட வாழ்வில் பல நன்மைகள் நடைபெறும். சிதம்பரம் சென்று வருதல் நலம் தரும்.

பூரம்

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  ராகுபகவானை வழிபட நன்மைகள் உண்டு. ஒரு முறையேனும் திருமணஞ்சேரி சென்று வருதல் பல நன்மைகளை செய்யும்.

உத்திரம்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  வாஞ்சியம்மனை வழிபட நன்மைகள் உண்டு. ஒரு முறையேனும் மூவனூர் சென்று வருதல் நலம் தரும்.

அஸ்தம்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராஜதுர்கையை வழிபட நன்மை உண்டு. ஒரு முறையேனும் திருவாரூர் சென்று வருதல் நலம் தரும்.

வழிபாட்டு தலங்கள் சித்திரை

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராஜதுர்கையை வழிபட நன்மை உண்டு. ஒரு முறையேனும் திருவாரூர் சென்று வருதல் நலம் தரும்.

சுவாதி

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வரரை வழிபட நன்மைகள் உண்டு. ஒரு முறையாவது திருவானைக்காவல் சென்று வருதல் நலம் தரும்.

விசாகம்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வரரை வழிபட நன்மை உண்டு. ஒரு முறையேனும் சோழவந்தான் சென்று வருதல் நலம் தரும்.

அனுஷம்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீ மூகாம்பிகையை வழிபட்டு வர நன்மை உண்டு. ஒரு முறையேனும் திருவிடைமருதூர் சென்று வருதல் நலம்.

கேட்டை

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியை வணங்கி வருதல் நலம். ஒரு முறையேனும் பல்லடம் கோயில் சென்று தரிசித்து வருவது நலம் தரும்.

மூலம்

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தென்முகக் கடவுளை வணங்கி வருவது நல்லது. ஒரு முறையேனும் மதுரை சென்று சொக்கநாதரை வழிபட்டு வாருங்கள்.

பூராடம்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  தென்முகக் கடவுளான தட்சிணா மூர்த்தியை வணங்குவது நன்மை தரும். ஒரு முறையேனும் திருநாவலூர் சென்று வாருங்கள் நன்மை உண்டு.

உத்திராடம்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தட்சிணாமூர்த்தியையும், துர்காதேவியையும் வணங்குவது நன்மை தரும்.ஒரு முறையேனும் தர்மபுரம் கோயிலுக்கு சென்று வருதல் நலம் தரும்.

திருவோணம்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராஜகாளியம்மனை வணங்குவது நன்மை தரும். ஒரு முறையேனும் தெத்துப்பட்டி சென்று வருதல் நலம் தரும்.

அவிட்டம்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  சனி, நாகராஜன் ஆகிய இந்த இரு தெய்வங்களையும் நீங்கள் வணங்குவது நன்மை தரும். முடிந்தால் ஒரு முறை கொடுமுடி சென்று வருதல் நலம்.

சதயம்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனி, நாகராஜன் ஆகிய இந்த இரு தெய்வங்களையும் வணங்குவது நலம் தரும். முடிந்தால் திருச்செங்கோடு சென்று வழிபட்டு வரவும்.

பூரட்டாதி

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆதிசேஷன், சித்ரகுப்தர் ஆகிய இவர்களை வணங்குவது நலம் தரும். முடிந்தால் திருவையாறு கோயில் சென்று வணங்கி விட்டு வாருங்கள்.

உத்திரட்டாதி

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனி, தக்ஷிணாமூர்த்தி ஆகிய இவர்கள் இருவரையும் வணங்குவது நல்லது. முடிந்தால் திருவையாறு சென்று இறைவனை வழிபட்டு வாருங்கள்.

ரேவதி

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  சனீஸ்வரரை வழிபடுவது நல்லது. முடிந்தால் ஓமாம்புலியூர் கோயிலுக்கு சென்று வருதல் நலம் தரும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

போட்டிக் குழம்பு

ஆட்டுக்கறி குடல் குழம்பு செய்வது எப்படி 

ஆட்டுக்கறி குடல் குழம்பு செய்வது எப்படி ஆட்டுக் குடல் நம் வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆட்டுக் குடலை அடிக்கடி நாம் சமைத்து சாப்பிடும் போது உடல் சூட்டினால் உண்டாகும்...
மூச்சுபயிற்சி

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்

உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் நம் அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆசை. ஆனால் பலருக்கும் அது நடப்பதில்லை. காரணம் நாம் வாழும் வாழக்கை முறை, உணவு...
கனவு பலன்கள் வீடு

கட்டிடங்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

கட்டிடங்கள் கனவில் வந்தால் கனவுகள் காணாதவர் இவ்வுலகில் எவரும் இல்லை. அதற்கேற்றார் போல நாம் நம் தூக்கத்தில் எண்ணற்ற கனவுகளை காண்கிறோம். ஒரு சில சமயங்களில் அதிசயக்க வைக்கும் கனவுகளும் உண்டு. ஆனால் அந்த...
வெந்தயக்கீரை மருத்துவ குணங்கள்

வெந்தயக்கீரை மருத்துவ பயன்கள்

வெந்தய கீரை வெந்தயம் கீரை மற்றும் வெந்தயம் உணவுப்பொருளாகவும், மருத்துவ பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயம் தமிழர்களின் சமையலில் தவறாமல் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருளாகும். இதன் செடி கீரையாகவும், இதன் விதைகளான வெந்தயம் உணவுகளில் சுவையூட்டியாகவும்...
ஆண் மலட்டு தன்மையை நீக்கும் உணவுகள்

ஆண்களின் மலட்டுத்தன்மையை நீக்கும் உணவுகள்

ஆண்களின் மலட்டுத்தன்மையை நீக்கும் உணவுகள் நவீன வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப மாறிவரும் உணவுப்பழக்கம், இரவு - பகல் பார்க்காமல் தொடர் வேலை போன்றவற்றின் காரணமாக ஆண்களுக்குகூட மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. இதன் தாக்கத்தால் உடலில் உயிர்...
திதியும் நெய்வேத்தியமும்

எந்த திதிக்கு என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்

திதி என்றால் என்ன ? இறை வழிபாடு என்பது நாம் அனைவரும் கட்டாயம் செய்யவேண்டிய ஒன்றாகும். இறைவழிபாடு செய்யும்போது மனம் அமைதி அடையும், மன நிம்மதி உண்டாகும், புத்தி தெளிவடையும், எதிர்மறை எண்ணங்கள்...
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் விசாகம் நட்சத்திரத்தின் இராசி : துலாம், விருச்சிகம் விசாகம் நட்சத்திரத்தின் அதிபதி : குரு விசாகம் நட்சத்திரத்தின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பாதத்தின் இராசி அதிபதி (துலாம்) : சுக்கிரன் விசாகம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.