செட்டிநாடு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

செட்டிநாடு சிக்கன் பிரியாணி

செட்டிநாடு உணவுகள் என்றாலே பாரம்பரிய சுவையும், மணமும் கொண்டதாகும். செட்டிநாடு உணவு வகைகளில் சேர்க்கப்படும் பிரத்தியேக மசாலாக்களால் உணவுகள் மிகுந்த சுவையும், மணமும், ஆரோக்கிய குணமும் கொண்டதாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் செட்டிநாடு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

செட்டிநாடு சிக்கன் பிரியாணி எளிதாக செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

1. கோழிக்கறி – ½ கிலோ
2. அரிசி – 4 கப் அளவு
3. பெரிய வெங்காயம் – 3 ( பொடியாக நறுக்கியது)
4. தக்காளி 3
5. புதினா – 1 கைப்பிடி அளவு
6. கொத்தமல்லி – 1 கைப்பிடி அளவு
7. மிளகாய் தூள் – ½ மேஜைக்கரண்டி
8. மஞ்சள் தூள் ½ மேஜைக்கரண்டி
9. தயிர் – ¼ கப்
10. தேங்காய் பால் – 2 கப்
11. வறுத்த முந்திரி – சிறிதளவு
12. தண்ணீர் – 7 கப்
13. பிரியாணி இலை – 2
14. எண்ணெய் – தேவையான அளவு
15. வெண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
16. எலுமிச்சை சாறு – 1 மேஜைக்கரண்டி

மசாலா அரைப்பதற்கு

1. பச்சை மிளகாய் – 5
2. இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜைக்கரண்டி
3. பட்டை – 2 துண்டு
4. ஏலக்காய் – 3
5. கிராம்பு – 4
6. தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

1. முதலில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.

2. பிரியாணி அரிசியை தண்ணீரில் நன்கு கழுவி ½ மணி நேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

3. பின்பு கோழிக்கறியை நன்கு கழுவி விட்டு, அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவை, புதினா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

4. குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும், அதில் பிரியாணி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி கொள்ள வேண்டும்.

5. பின்பு அதில் ஊற வைத்துள்ள கோழிக்கறி துண்டுகளை சேர்த்து கறியின் நிறம் மாறும் வரை நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.

6. பின்பு அதனுடன் தக்காளி, புளித்த தயிர், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பிரட்டி கொள்ள வேண்டும்.

7. பின்பு குக்கரை சிறிது நேரம் மூடி வைத்து, தீயை குறைத்து, 10 நிமிடம் கோழிக்கறியை நன்கு வேக வைத்து கொள்ள வேண்டும்.

8. பின்பு அதனுடன் தேங்காய் பாலை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, தண்ணீரை நன்கு கொதிக்க விட வேண்டும்.

9. தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரிசியை சேர்த்து 8 கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் போட்டு குக்கரை மூடி, 2 விசில் வரும் வரை வேகவிடவும்.

10. இரண்டு விசில் வந்ததும் குக்கரை இறக்கி விட்டு, பிரியாணியின் மேல் கொத்தமல்லி, வறுத்த முந்திரி, எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவையான செட்டிநாடு சிக்கன் பிரியாணி தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பாதாம் அல்வா செய்வது எப்படி

பாதாம் அல்வா செய்வது எப்படி

பாதாம் அல்வா தேவையான பொருள்கள் பாதாம் பருப்பு – 1 கப் சர்க்கரை – ¾ கப் நெய் – ¼ கப் தண்ணீர் – சிரிதளவு செய்முறை பாதாம் பருப்பை வெந்நீரில் இரண்டு மணி...
செல்வம் பெருக

கணவன் வெளியே கிளம்பும் பொழுது இதை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்

செல்வம் பெருக கணவன் வெளியே கிளம்பும் பொழுது  இதை செய்தால் போதும்  நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேலையை செய்து பணத்தை சம்பாதிக்க தினந்தோறும் ஓடிக் கொண்டிருக்கிறோம். மாத சம்பளம் வாங்குபவர்கள் விட தினந்தோறும்...
chinese garlic chicken

சைனீஸ் கார்லிக் சிக்கன்

சைனீஸ் கார்லிக் சிக்கன் தேவையான பொருட்கள் 1. சிக்கன் – ½  கிலோ ( எலும்பில்லாதது ) 2. மைதா – 3 ஸ்பூன் 3. சோள மாவு – 3 ஸ்பூன் 4. உப்பு - தேவையான அளவு 5....
மஞ்சள்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

நோய் எதிர்ப்பு சக்தி அனைத்து வசதி வாய்ப்புகள் இருந்தாலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் முழு மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். அதனால்தான் ‘ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ‘ என்று முன்னோர்கள்...

கடக ராசி பொது பலன்கள் – கடக ராசி குணங்கள்

கடக ராசி குணங்கள் கடக ராசியின் அதிபதி சந்திர பகவானாவார். கடக ராசியில் புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களின் அனைத்து பாதங்களும் அடங்கியுள்ளன. 12 ராசிகளில் இது 2வது சர...
Riddles with Answers

Brain Teasers with Answers | Riddles and Puzzles

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்களும் விடைகளும்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
துவிதியை திதி பலன்கள்

துவிதியை திதி பலன்கள், துவிதியை திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

துவிதியை திதி ‘துவி’ என்றால் இரண்டு, இது ஒரு வடமொழி சொல்லாகும். இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து இரண்டாவது நாள் ஆகும். அமாவாசைக்கு அடுத்து வரும் துவிதியை சுக்கில பட்ச துவிதியை என்றும்,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.