இனிப்பு அப்பம் செய்வது எப்படி

அப்பம்

இறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியங்களில் முக்கியமான ஒன்று இனிப்பு அப்பம் ஆகும். இந்த அப்பம் சுவையானது மட்டுமல்லாமல் செய்வதும் மிகவும் எளிதான ஒரு பலகாரம் ஆகும். சுவையான இனிப்பு அப்பம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்

 1. மைதா மாவு – 1 கப்
 2. ஏலக்காய் – சிறிதளவு
 3. அரிசி மாவு – ½ கப்
 4. வெல்லம் – ½ கப்
 5. வாழைப்பழம் – 2
 6. தண்ணீர் – தேவையான அளவு
 7. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

 1. முதலில் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதித்து பின் வெல்லம் கரைந்த பின் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
 2. இரண்டு வாழைப்பழத்தையும் மசித்து வைத்துக் கொள்ளவும்.
 3. வேறு ஒரு பாத்திரத்தில் மைதா மாவு , அரிசி மாவு, ஏலக்காய், மசித்த வாழைப்பழம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 4. கரைத்து வைத்துள்ள வெல்லக் கரைசைலை மாவுடன் சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
 5. மாவு அதிக தண்ணீராகவும் இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் சரியான பதத்தில் இருக்க வேண்டும்.
 6. ஒரு வாணலியில் அப்பம் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.
 7. எண்ணெய் சூடானதும் குழிக்கரண்டியில் எடுத்து ஒவ்வொரு கரண்டியாக எண்ணெயில் சேர்க்கவும்.
 8. இரண்டு பக்கமும் சிவந்து வெந்த பின் எடுத்தால் சுவையான அப்பம் தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தேங்காயில் குடுமி ஏன் வைக்க வேண்டும்

சாமிக்கு உடைக்கும் தேங்காயில் குடுமி அவசியமா?

சாமிக்கு உடைக்கும் தேங்காயில் குடுமி அவசியமா நாம் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிப்பதற்கு தேங்காய், பூ, பழம், கொண்டு முதலானவற்றைக் கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு சாமிக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும்போது தேங்காயை...
கருவளையம் வர காரணம் என்ன

கருவளையத்தை போக்க எளியமையான சில வழிமுறைகள் 

கருவளையத்தை போக்க எளியமையான சில வழிமுறைகள் நம் முகத்திற்கு அழகை கொடுப்பதே நம் கண்கள் தான். நம் முகத்தின் அழகை கெடுப்பது கண்ணீர்க்கு கீழ் ஏற்படும் கருவளையம் தான். அதிக நேரம் வெயிலில் அலைவதாலும்,...
தந்துரி சிக்கன் பிரியாணி

தந்தூரி சிக்கன் பிரியாணி

தந்தூரி சிக்கன் பிரியாணி எளிமையான முறையில் வீட்டிலேயே மிகவும் சுவையாக தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் சிக்கன் தொடை பகுதி – 4 தயிர் - ஒரு கப் ...
how to reduce belly fat

உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க உதவும் சில உணவுகள்

உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க உதவும் சில உணவுகள் உடலை ஆரோக்கியமாகவும் உடல் எடையை சரியான முறையில் வைத்திருக்கவும் உணவு முறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் எந்த வகையான உணவுகளை...
நவகிரக தோஷம் விலக

செவ்வாய் தோஷம் ஏன் ஏற்படுகிறது? செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரங்கள்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக பார்க்கபடும் ஒன்று செவ்வாய் தோஷமாகும். செவ்வாய் தோஷம் இருப்பவருக்கு திருமணம் தாமதமாக நடைபெறும், அல்லது திருமணம் நடைபெறுவதில் பல்வேறு தடைகள் ஏற்படும்....
ஜாதகத்தில் யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #8

ஜாதக யோகங்கள் இந்த பூமியில் ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போது, அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கிரகங்கள் இருக்கும் நிலையை வைத்து கணிக்கப்படுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில்...
ஆரோக்கியமான நகங்கள்

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்பதை உங்கள் நகத்தை வைத்தே சொல்லிவிடலாம்.

ஆரோக்கியமான நகங்கள் நம் உடலில் ரத்த ஓட்டம் இல்லாத பகுதிகளில் ஒன்று நகம். ' ஆல்ஃபா கெரட்டின் ' என்னும் புரதப் பொருளால் ஆனது. டென்ஷனாக இருக்கும்போது நகத்தைக் கடித்துத் துப்புவதும், மகிழ்ச்சியாக இருக்கும்போது...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.