மட்டன் குருமா
ஆட்டுக்கறி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது, கூடவே ஆரோக்கியமும் நிறைந்தது. மட்டனை வைத்து விதவிதமான உணவுகள் செய்யப்படுகிறது. அதில் ஒன்றுதான் மட்டன் குருமா. இந்த மட்டன் குருமா செய்வதற்கு மணமானது மற்றும் எளிதானது, இது அனைத்து வகையான டிபன் மற்றும் சாப்பாடு வகைகளுக்கு ஏற்றது. மட்டன் குருமாவை எளிதாக எப்படி செய்வது என்பதை விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஆட்டுக் கறி – ½ கிலோ
- வெங்காயம் – 3
- தக்காளி – 3
- பச்சைமிளகாய் 2
- மல்லித்தழை – சிறிதளவு
- சீரகத்தூள் – 1 ஸ்பூன்
- தனியாத்தூள் – 2 ஸ்பூன்
- மஞ்சள்பொடி – ½ ஸ்பூன்
- கரம் மசாலா – 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- பட்டை – 1
- ஏலம் – 2
- கிராம்பு – 2
அரைக்க
- தேங்காய்த் துருவல் – ½ கப்
- கசகசா – 2 ஸ்பூன்
- முந்திரி – 5
செய்முறை
- ஆட்டுகறியை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- குக்கரில் 5 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து அதனுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் பொட்டு தாளிக்கவும்.
- அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரும் வரை வதக்கவும்.
- இப்போது சுத்தம் செய்து வைக்கபட்டுள்ள ஆட்டு கறியை அதனுடன் சேர்த்து கொள்ளவும். பின்னர் அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சீராகத்தூள், கரம் மசாலா போன்றவற்றை சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.
- சேர்க்கபட்ட மசாலாக்களின் பச்சை வாசனை மறைந்தவுடன் அரைத்த தேங்காய் மற்றும் முந்திரி விழுதை சேர்த்துக் கிளறி தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும்.
- இப்போது குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கி சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறினால் மணம் மற்றும் சுவை நிறைந்த மட்டன் குருமா ரெடி.