சிக்கன் சமோசா செய்வது எப்படி

சிக்கன் சமோசா செய்வது எப்படி

சிக்கன் சமோசா தேவையான பொருள்கள்

 1. சிக்கன் – 250 கிராம் (எலும்பில்லாதது)
 2. இஞ்சி – 1 துண்டு ( பொடியாக நறுக்கியது )
 3. எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
 4. மைதா – 250 கிராம்
 5. 5 சோம்பு – ½  ஸ்பூன்
 6. உப்பு – தேவையான அளவு
 7. பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது )
 8. கரம் மசாலா – 1 ஸ்பூன்
 9. பட்டாணி – 1 கப் ( வேக வைத்தது )
 10. பெரிய வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது )
 11. கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி

செய்முறை

 1. முதலில் 250 கிராம் மைதாவை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்க்கவும்.
 2. பின்னர் மாவுடன் தேவையான அளவு உப்பு சிறிதளவு எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
 3. எடுத்து வைத்துள்ள 250 கிராம் சிக்கனை நன்றாக கொந்தி எடுத்துக் கொள்ளவும்.
 4. சிக்கனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
 5. இப்பொழுது வெந்த சிக்கனை வேறு ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
 6. எண்ணெய் சூடானவுடன் ½ ஸ்பூன் சோம்பு சேர்த்துக் கொள்ளவும்.
 7. சோம்பு பொரிந்தவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
 8. வெங்காயம் வதங்கியவுடன் கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
 9. பின்னர் வேக வைத்த பச்சை பட்டாணி, சிக்கன், சேர்த்து நன்கு கிளறி சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
 10. 10. இப்போது நாம் பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
 11. உருட்டிய மாவை சப்பாத்தி கட்டையில் வைத்து சிறிது மைதா மாவு தூவி மாவை வட்டமாக தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
 12. பின்னர் ஒரு கத்தி வைத்து அதனை அரை வட்டமாக வெட்டி அதில் இன்னும் கூட தேவையான அளவு மைதா மாவை தூவி நீள வாக்கில் ரிப்பன் போல நன்கு தேய்க்கவும்.
 13. இருக்கின்ற எல்லா மாவையும் இதே போல செய்து ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளவும்.
 14. இப்போது சப்பாத்திக் கல்லை அடுப்பில் வைத்து தேய்த்த மாவை அதிகம் வாட்டாமல் ஒரு நிமிடம் மட்டும் வாட்டி எடுத்துக் கொள்ளவும்.
 15. இந்த ரிப்பன் போல தேய்த்த மாவின் நுனியை மடக்கி அதனுள் ஒரு டீஸ்பூன் அளவு சிக்கன் கலவை வைத்து முக்கோண வடிவில் மடிக்கவும்.
 16. கடைசியாக வரும் பகுதியை மைதா பசையால் ஒட்டி விடவும் அப்போதுதான் சமோசா பிரியாமல் இருக்கும்.
 17. தயார் செய்த சமோசாக்களை பிரீஸரில் நிமிடத்திற்கு வைக்கவும்.
 18. பின்னர் ஒரு கடாயில் சமோசா பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
 19. எண்ணெய் சூடானதும் சமோசாக்களை எண்ணெயில் சேர்த்து பொறித்து எடுத்தால் சுவையான சிக்கன் சமோசா ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மூன்று முடிச்சு போடுவதின் அர்த்தம்

திருமணத்தில் மூன்று முடிச்சு எதற்காக போடப்படுகிறது ?

திருமணத்தில் மூன்று முடிச்சு எதற்காக போடப்படுகிறது ? திருமணம் என்றாலே பல்வேறு சடங்குகள், சம்ப்ரதாயங்கள், நம்பிக்கைகள் நிறைந்ததாகும். திருமணத்தில் செய்யப்படும் ஒவ்வொரு சடங்கிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. சில சடங்குகள் ஏன், எதற்காக செய்கிறோம்...
கூறைபுடவை அணிவது ஏன்

திருமணத்தில் கூறைப்புடவை அணிவது ஏன்?

கூறைப்புடவை அணிவது ஏன்? திருமணத்தில் இருக்கும் பல்வேறு சடங்களில் ஒன்று மணமகள் கூறைப்புடவை அணிவது. எத்தனையோ விலை உயர்ந்த சேலைகள் இருக்கும்போது ஏன் கூறைப்புடவையை மட்டும் திருமணத்தில் அணிகின்றனர் என்ற கேள்வி பலருக்கும் எழாமல்...
ரவா லட்டு செய்முறை

சுவையான ரவா லட்டு

ரவா லட்டு தேவையான பொருட்கள் ரவை - ½ கிலோ சர்க்கரை – ¼ கிலோ முந்திரி – தேவையான அளவு திராட்சை – தேவையான அளவு நெய் – சிறிதளவு ஏலக்காய் தூள்...
மீன் குழம்பு செய்வது எப்படி

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு தேவையான பொருட்கள் மீன் – ½  கிலோ புளி – எலுமிச்சை அளவு பூண்டு – 10 பல் சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 1 ...
சிக்கன் சூப் செய்வது எப்படி

சிக்கன் சூப் எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி

சிக்கன் சூப் உடல் நலிவுற்றவர்கள் காய்கறிகள் மற்றும் சூப்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். சூப் குடிப்பதால் உடல் பலப்படும், பசியை தூண்டும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், இளைத்த உடலை தேற்றும்....
ஹைதராபாத் மட்டன் பிரியாணி செய்முறை

ஹைதராபாத் மட்டன் பிரியாணி செய்வது எப்படி

பிரியாணி என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு வகையாகும். விதவிதமான பிரியாணி வகைகள் இருந்தாலும் மட்டன் பிரியாணிக்கென்று ஒரு தனி இடம் உண்டு. அதுவும் ஒவ்வொரு பகுதிகேற்ப ஒவ்வொரு பெயர் கொண்டு அழைக்கபடுகிறது....
பப்பாளி பழ அல்வா செய்வது எப்படி

பப்பாளி பழ அல்வா செய்முறை

பப்பாளி பழ அல்வா தேவையானப் பொருட்கள்: பப்பாளி பழ துண்டுகள்  -  2 கப் சர்க்கரை  -  1 கப் சோள மாவு - 2 ஸ்பூன் நெய்  -  4 தேவையான...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.