சைனீஸ் கார்லிக் சிக்கன்

சைனீஸ் கார்லிக் சிக்கன்

chinese garlic chickenதேவையான பொருட்கள்

1. சிக்கன் – ½  கிலோ ( எலும்பில்லாதது )
2. மைதா – 3 ஸ்பூன்
3. சோள மாவு – 3 ஸ்பூன்
4. உப்பு – தேவையான அளவு
5. மிளகுத் தூள் – 1 ஸ்பூன்
6. சோயா சாஸ் – 1 ஸ்பூன்
7. இஞ்சி பூண்டு விழுது  – 2 ஸ்பூன்
8. தண்ணீர் – தேவையான அளவு
9. எண்ணெய் – தேவையான அளவு

கிரேவி செய்ய தேவையான பொருட்கள்

1. எண்ணெய் – சிறிதளவு
2. வெண்ணெய் – 1 ஸ்பூன்
3. இஞ்சி – 1 துண்டு ( பொடியாக நறுக்கியது )
4. பூண்டு – 20 பல் ( பொடியாக நறுக்கியது )
5. வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
6. தக்காளி சாஸ் – 1 ஸ்பூன்
7. சோயா சாஸ் – 1 ஸ்பூன்
8. சில்லி சாஸ் – 1 ஸ்பூன்
9. வினிகர் – ½  ஸ்பூன்
10. உப்பு – தேவையான அளவு
11. சர்க்கரை – 1 ஸ்பூன்
12. மிளகுத் தூள் – 1 ஸ்பூன்
13. சோள மாவு – 1 ஸ்பூன்
14. வெங்காயத் தாள் – சிறிதளவு
15. தண்ணீர் – தேவையான அளவு

சைனீஸ் கார்லிக் சிக்கன்செய்முறை

 1.    முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.       சுத்தம் செய்த சிக்கனை  ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்துக்    கொள்ளவும்.
 2. சிக்கனுடன் மைதா, சோள மாவு, மிளகு தூள், சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
 3. சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிரட்டி வைத்துக் கொள்ளவும்.
  பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
 4. எண்ணெய் காய்ந்ததும் ஊற வைத்துள்ள  சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
 5. வெண்ணெய் உருகியதும்  அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
 6. இஞ்சி பூண்டு வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
 7. வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும் மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
 8. பின்னர் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், வினிகர், 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
 9. ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் சோள மாவினை சேர்த்துக் கொள்ளவும்.
 10. அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் எதுவும் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
 11. கலந்த சோள மாவு கலவையை வாணலியில் சேர்த்துக் கொள்ளவும்.
 12. சோள மாவு சேர்த்து கைவிடாமல் கலந்து விடவும்.
 13. பின்னர் பொறித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி 2 நிமிடத்திற்கு மூடி பொட்டு வேக விடவும்.
 14. கடைசியாக பொடியாக நறுக்கிய வேங்கயத்தாளினை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சைனீஸ் கார்லிக் சிக்கன் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

30 வயதை கடந்த பெண்களா நீங்கள் ?  அப்போ இந்த பதிவை கண்டிப்பா பாருங்க.

பெண்களின் வாழ்க்கை முறை   பெண்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் பல வேலைகளை செய்கின்றனர். குழந்தைகளை கவனித்துக்கொள்வது, வீட்டு வேலைகளை செய்வது, சமைப்பது, வீட்டை நிர்வகிப்பது என பல்வேறு பொறுப்புகளை சுமந்து செல்கின்றனர். அதிலும் வேலைக்கு...
மட்டன் குருமா குழம்பு வைப்பது எப்படி

மட்டன் குருமா செய்வது எப்படி

மட்டன் குருமா ஆட்டுக்கறி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது, கூடவே ஆரோக்கியமும் நிறைந்தது. மட்டனை வைத்து விதவிதமான உணவுகள் செய்யப்படுகிறது. அதில் ஒன்றுதான் மட்டன் குருமா. இந்த மட்டன் குருமா செய்வதற்கு மணமானது மற்றும் எளிதானது,...
how to make prawn 65 recipe

ஹோட்டல் ஸ்டைல் இறால் 65

இறால் 65 தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ சோளமாவு - 1 ஸ்பூன் மைதா மாவு - 1 ஸ்பூன் முட்டை – 1 தயிர் – 2 ஸ்பூன் இஞ்சி,...
தலப்பாகட்டு மட்டன் பிரியாணி செய்வது எப்படி

தலப்பாகட்டு மட்டன் பிரியாணி

தலப்பாகட்டு மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள் சீரக சம்பா அரிசி (அல்லது) பாஸ்மதி அரிசி – ½ கிலோ மட்டன் கறி – ½ கிலோ பெரிய வெங்காயம் – 3 ( பெரியது...

காலை உணவை தவிர்க்கும் இல்லத்தரசிகளா நீங்கள் ?

காலை உணவை தவிர்க்கும் இல்லத்தரசிகளா நீங்கள் ? பரபரப்பான இன்றைய வாழ்க்கை சூழலில் நிற்க நேரம் இல்லாமல் நாம் அனைவரும் ஓடிக்கொண்டிருகிறோம். குடும்பத்தின் ஆணி வேராக இருப்பது குடும்பத் தலைவி தான். என்னதான் கணவன்...
நாட்டுக் கோழி குழம்பு செய்வது எப்படி

நாட்டுக் கோழி குழம்பு செய்வது எப்படி?

நாட்டுக் கோழி குழம்பு நாட்டு கோழி குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது. அது உடலுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நாட்டு கோழி குழம்பை எவ்வாறு எளிதாக...
இரத்தத்தை சுத்தப்படுத்துவது எப்படி

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்யும் வழிகள் நம் உடலில் நடைபெறும் அனைத்து செயல்களுக்கும் இரத்தம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இரத்தம் சுத்தமாக இருந்தால் தான் உடலின் செயல்பாடுகள் சரியாக நடக்கும். இரத்தம் சுத்தமில்லாமல்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.