ஆட்டு தலைக்கறி குழம்பு செய்வது எப்படி

ஆட்டு தலைக்கறி குழம்பு

ஆட்டுக்கறியில் புரதச் சத்து அதிகளவில் உள்ளது. ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் பல்வேறு வித பலன்களை தருகிறது. சிலருக்கு ஆட்டின் தலைக்கறி மிகவும் விருப்ப உணவாக இருக்கும். தலைக்கறியை சாப்பிட்டால் இதயநோய்கள் தீரும் என்கின்றனர் மருத்துவர்கள். குடலுக்கு பலம் கிடைக்கும். பார்வை கோளாறால் பாதிக்கபட்டவர்கள் ஆட்டின் கண் சாப்பிட்டால் கண் கோளாறுகள் தீரும். ஆட்டின் நாக்கு உடல் சூட்டை குறைக்கும், மற்றும் சருமத்திற்கு இளமை தந்து பளபளப்பை அதிகரிக்கும்.

 

தலைக்கறி குழம்பு

தலைக்கறி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்

1. ஆட்டு தலை – 1
2. எண்ணெய் – தேவையான அளவு
3. பட்டை – 3 துண்டுகள்
4. ஏலக்காய் – 2
5. கிராம்பு – 3
6. வெங்காயம் – 5
7. தக்காளி – 4
8. இஞ்சி பூண்டு விழுது – 4 மேஜைக்கரண்டி
9. கொத்தமல்லி – 1 கைப்பிடி அளவு
10. புதினா – 1 கைப்பிடி அளவு
11. பச்சை மிளகாய் – ஐந்து
12. மிளகாய் தூள் – 2 மேஜைக்கரண்டி
13. தனியா தூள் – 3 மேஜைக்கரண்டி
14. மஞ்சள் தூள் – 1/4 மேஜைக்கரண்டி
15. உப்பு – தேவையான அளவு
16. தேங்காய் பால் – ½ கப்

செய்முறை

1. ஆட்டு தலையை நன்றாக சுத்தம் செய்து வாங்கி வரவும்.

2. ஆட்டின் நாக்கை தனியாக எடுத்து அதை கொதிக்கும் நீரில் போட்டு அதன் மேல்தோலை பிரித்தெடுக்கவும்.

3. ஆட்டின் தலையை நன்றாக கழுவி, அதனுடன் உப்பு, மஞ்சள், 1 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு குக்கரில் வேகவிடவும்.

4. வேக வைத்த ஆட்டின் தலையை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்து அதனுடன் வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி கொள்ளவும்.

6. இப்போது வேகவைத்த ஆட்டின் தலையை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.

6. பின்பு அதனுடன் கொத்தமல்லி புதினா, பச்சை மிளகாய், மசாலா தூள் வகைகள் அனைத்தையும் போட்டு நன்றாக கிளறி கொள்ளவும்.

7. பிறகு தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு கிளறவும். தீயை பத்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.

8. இறுதியில் தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் மல்லி இழை தூவி இறக்கவும்.

ஆட்டு தலைக்கறி குழம்பு உடம்புக்கு மிகவும் நல்லது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கருவளையம் வர காரணம் என்ன

கருவளையத்தை போக்க எளியமையான சில வழிமுறைகள் 

கருவளையத்தை போக்க எளியமையான சில வழிமுறைகள் நம் முகத்திற்கு அழகை கொடுப்பதே நம் கண்கள் தான். நம் முகத்தின் அழகை கெடுப்பது கண்ணீர்க்கு கீழ் ஏற்படும் கருவளையம் தான். அதிக நேரம் வெயிலில் அலைவதாலும்,...
சர்க்கரை நோய் வர காரணம்

இந்த 4 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும், இரத்த சர்க்கரை அளவை நீங்களே சுலபமாக குறைக்கலாம்

சர்க்கரை நோய்  இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது வீட்டில்  ஒருவருக்கு கண்டிப்பாக இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு காரணம் மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம். நாகரீகம் என்ற பெயரில் நம்...
அரிசி கழுவிய தண்ணீர் நன்மைகள்

அரிசி கழுவிய தண்ணீரில் மறைந்திருக்கும் அற்புத பயன்கள்

அரிசி கழுவிய தண்ணீர் நன்மைகள்  நம் சமையலைறையில் உள்ள பல பொருட்கள் நமது அழகை தக்கவைத்துக் கொள்ள பயன்படுகிறது. உதாரணமாக மஞ்சள் தூள், தயிர், அரிசி மாவு, தக்காளி, வெள்ளரிக்காய், இன்னும் பல உள்ளன....
நார்ச்சத்துள்ள உணவு வகைகள்

உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகள்

உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள் நாம் தினந்தோறும் பல வகையான உணவுப் பொருட்களை சாப்பிடுகிறோம். நாம் உட்கொள்ளும் அனைத்து உணவுகளிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும்....
கேழ்வரகு முறுக்கு செய்வது எப்படி

சத்தான கேழ்வரகு முறுக்கு செய்முறை

கேழ்வரகு முறுக்கு தேவையான பொருட்கள் கேழ்வரகு மாவு – 500 கிராம் அரிசி மாவு - 50 கிராம் உடைத்த கடலை மாவு – 50 கிராம் சீரகம் – 1 ஸ்பூன் வெண்ணை...
தந்தூரி சிக்கன் செய்வது எப்படி

தந்தூரி சிக்கன் வீட்டிலேயே செய்வது எப்படி

தந்தூரி சிக்கன் தந்தூரி சிக்கன் நல்ல காரசாமான சுவையை கொண்டது. தந்தூரி சிக்கன் உணவகங்களில் மட்டுமே செய்ய முடியும் என பலரும் நினைத்திருப்போம். இந்த பதவில் தந்தூரி சிக்கன் எளிமையாக எப்படி வீட்டிலேயே செய்வது...

சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு

சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு தேவையான பொருட்கள் ஆட்டுக்கால் – 4 கால்கள் கத்திரிக்காய் - 4 புளி - ஒரு சிறிய எலுமிச்சை பழ அளவு வெள்ளை கொண்டைக்கடலை – 1 கப் ...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.