முடக்கத்தான் கீரை துவையல்
முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலக்சிக்கல், மூல நோய், பக்கவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன. வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
- முடக்கத்தான் – ஒரு கட்டு
- புளி – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- பூண்டு – 10 பல்
- காய்ந்த மிளகாய் – 6
- இஞ்சி – சிறிய துண்டு
- சீரகம் – ½ ஸ்பூன்
- மிளகு – ½ ஸ்பூன்
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
- கடுகு – 1 ஸ்பூன்
- உளுந்து – 1 ஸ்பூன்
- பெருங்காயத் தூள் – சிறிதளவு
செய்முறை
- முடக்கத்தான் கீரையை நன்கு சுத்தம் செய்து அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சீரகம்,மிளகு,பூண்டு, காய்ந்த மிளகாய், இஞ்சி, சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதனுடன் சுத்தம் செய்த முடக்கத்தான் கீரையை சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கியதும் சிறிதளவு புளி, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கிய பின் இறக்கி ஆற விடவும்.
- சூடு ஆறியவுடன் மிக்சியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
- எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்து சேர்த்து தாளிக்கவும்.
- தாளித்த பின் அதில் அரைத்து வைத்துள்ள முடக்கத்தான் விழுது சேர்த்து சிறிதளவு பெருங்காய தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
- எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கிளறி இறக்கினால் சுவையான முடக்கத்தான் துவையல் ரெடி.