இறால் கட்லட் செய்வது எப்படி

இறால் கட்லட்

prawn katletதேவையான பொருட்கள்

  1. இறால் –  ½ கிலோ
  2. பெரிய வெங்காயம் – 1 ( பொடியாக நறுக்கியது )
  3. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  4. பச்சைமிளகாய் – 1 ( பொடியாக நறுக்கியது )
  5. உருளை கிழங்கு – 2 ( வேக வைத்து மசித்தது )
  6. மிளகாய் தூள் – ½ ஸ்பூன்
  7. மிளகுத்தூள் – ½  ஸ்பூன்
  8. மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
  9. கொத்தமல்லி  – சிறிதளவு
  10. சோள மாவு – ½ கப்
  11. பிரட் தூள் – 1 கப்
  12. உப்பு –  தேவையான அளவு
  13. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

  1. இறால் கட்லட் செய்வதற்கு முதலில் இறாலை தோல் நீக்கி சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  2. சுத்தம் செய்த இறாலுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  3. இறால் முக்கால் பாகத்திற்கு வெந்தவுடன் தண்ணீரை வடித்து  ஆற வைக்கவும்.
  4. இறால் சூடு முழுமையாக ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  5. ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  6. எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும்.
  7. வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  8. பின்னர் ½ ஸ்பூன் மிளகாய் தூள், ½ ஸ்பூன் மிளகாய் தூள், ¼ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  9. இத்துடன் வேக வைத்து மசித்து வைத்துள்ள உருளைகிழங்கை சேர்க்கவும்.
  10. உருளைகிழங்கை சேர்த்து நன்கு கிளறி சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி கிளறி ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
  11. ஒரு சிறிய பாத்திரத்தில் ½ கப் அளவிற்கு சோள மாவு சேர்த்துக் கொள்ளவும்.
  12. இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
  13. பிரட் தூள் சிறிதளவு எடுத்துக் கொள்ளவும்.
  14. சூடு ஆறியதும் இறால் மசாலாவை கட்லட் வடிவத்தில் தட்டிக் கொள்ளவும்.
  15. சோள மாவு கலவையில் முக்கி எடுத்து பிரட் தூளில் பிரட்டி எடுத்து கொள்ளவும்.
  16. ஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
  17. எண்ணெய் சூடானதும் பிரட் தூளில் பிரட்டி வைத்துள்ள கட்லட்டை எண்ணெய் சேர்த்து பொறித்து எடுத்தால் சுவையான இறால் கட்லட் ரெடி.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இராசி : மீனம் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி : சனி உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு உத்திரட்டாதி நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை- : காமதேனு உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பரிகார...
செட்டிநாடு பெப்பர் சிக்கன்

செட்டிநாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி

செட்டிநாடு பெப்பர் சிக்கன் வறுவல் நம் பாரம்பரிய உணவு முறைகளில் செட்டிநாடு உணவு முறைகென்று ஒரு தனி இடம் உண்டு. செட்டிநாடு உணவுகளின் மணமும், சுவையும் இதற்க்கு சான்று. செட்டிநாடு உணவு முறைகளில் அசைவு...
aarkadu makkan beda

ஆற்காடு மக்கன் பேடா செய்வது எப்படி

ஆற்காடு மக்கன் பேடா தேவையான பொருட்கள் மைதா - 1 கப் இனிப்பு இல்லாத கோவா - 150 கிராம் வெண்ணெய்  - 1 ஸ்பூன் சமையல் சோடா - 1 சிட்டிகை எண்ணெய்...
பிரதோஷ சிறப்புகள்

பிரதோஷ வழிபாடும் அதன் சிறப்புகளும்

பிரதோஷம் பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றுமண தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை...
பல்வேறு திருமண சடங்குகள்

பல்வேறு விதமான திருமண சடங்குகள்

திருமண சடங்குகள் திருமணத்தை ஆயிரம் காலத்து பயிர் என முன்னோர்கள் சொல்லி வைத்தனர். இரு மனங்கள் இணைவது திருமணமாகும். திருமணம் ஒவ்வொருவர் வாழ்விலும் அத்தியாவசியமான ஒன்றாகும். திருமணம் எந்த அளவு முக்கியமோ, அதே அளவு...
தொடை கறி

ஆற்காடு தொடை கறி

ஆற்காடு தொடை கறி தேவையான பொருட்கள் மட்டன்  (தொடை கறி) - ½ கிலோ வினிகர் - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மிளகுத் தூள் - 2 ஸ்பூன் ...
ஷாக் அடித்தால் என்ன செய்ய வேண்டும்

முதலுதவி பெட்டி யும் அதில் இருக்க வேண்டிய முதலுதவி பொருட்களும்

முதலுதவி பெட்டி முதலுதவி செய்ய மிகவும் முக்கியம் முக்கிய பொருட்கள் நிறைந்த முதல் உதவிப் பெட்டி ஆகும். காயமடைந்தவருக்கு முதன்மையான உதவிகளை செய்வதற்காக சில அத்தியாவசிய மருத்துவப்பொருட்களை கொண்டுள்ள பெட்டியே முதலுதவிப்பெட்டி ஆகும். இது...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.