திருமண தடை நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

திருமண தடை  நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்

இரு வீட்டாரின் சம்மதத்துடன் இரு மணங்கள் இணையும் வைபவமே திருமணமாகும். அந்த திருமணம் சரியான காலத்திலும் சரியான வயதிலும் நடைபெறுவது முக்கியமானதாகும்.  சிலரது ஜாதகத்தில் இருக்கும் தோஷம் காரணமாக திருமண யோகம் வர கால தாமதம் ஏற்படலாம்.

திருமண தோஷம் இருப்பவர்களுக்கு என்ன செய்தாலும் திருமணம் தடை பட்டுக்கொண்டே போகும். இவர்கள் என்ன பரிகாரம் செய்தால் தோஷம் நிவர்த்தியாகி வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும் என்று பார்க்கலாம்.

திருமண தடை நீங்க பரிகாரம்ஒரு சிலருக்கு திருமண தோஷம் இருந்தாலும், மனதில் திருமண ஆசை இருக்கும். ஆனால் பெண் அமையாமல் அல்லது கிடைக்காமல் அவதிப்பட நேரிடும். திருமண வயது கடந்த பிறகும் கூட திருமணம் நடைபெறாமல் இருப்பதும் ஒரு வகையில் தோஷம்தான்.

இதுபோன்ற நிலையில் இருப்பவர்கள், ஏற்கனவே மணம் முடித்துப் பிரிந்தவர்கள், விதவைகளைத் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படிச் செய்யும் போது தோஷம் நிவர்த்தியாகி வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும் என சில ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமண தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்

திருமண தோஷம் உள்ள ஆணோ அல்லது பெண்ணோ உங்கள் ஊரிலுள்ள துர்க்கை அம்மன் கோவில் அல்லது சந்நிதியில், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் நெய் விளக்கேற்றி, வழிபட்டு வர வேண்டும். இது போன்று 27 வெள்ளிக்கிழமைகள் செய்து வர திருமண தோஷம் நீங்கி விரைவிலேயே நல்ல வரன் மற்றும் வது அமையும்.

திருமண தடை நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்கும்பகோணத்திற்கு அருகே இருக்கும் “திருமணஞ்சேரி” என்ற கோவிலுக்கு சென்று அக்கோவிலின் மூலவரான சுந்தரேஸ்வரர் மற்றும் அம்பாளை வணங்கி, அக்கோயிலை 9 முறை வலம் வந்து வேண்டுதலை முடிக்க, 90 நாட்களுக்குள் திருமணம் தோஷம் கொண்ட ஆண்களுக்கும், பெண்களும் அத்தோஷங்கள் நீங்கி சிறப்பான திருமணம் அமையும்.

திருவிடந்தையில் உள்ள “ நித்திய கல்யாண பெருமாள் “ கோவிலுக்கு சென்று மனமுருகி வேண்டி பெருமாளுக்கு மாலை சாற்றி வழிபட்டால் விரைவில் திருமண தடை நீங்கி திருமண வைபவம் நடைபெறும். வேண்டுதல் நிறைவேறி திருமணம் நடந்த பின் தம்பதிகளாக இருவரும் கோவிலுக்கு சென்று மாலை சாற்றி வழிபட வேண்டும்.

திருமண தோஷம் இருப்பவர்கள் செவ்வாய் கிழமை தோரும் ராகு கால நேரத்தில் துர்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி அம்மனை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும்.

திருமண வயதை கடந்து திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் சீதா ராமர் கல்யாண வைபவத்தை காண வேண்டும், இவ்வாறு செய்வதால் சீக்கிரம் திருமணம் நிச்சயமாகும்.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஆப்பிள் பாயாசம் செய்வது எப்படி

ஆப்பிள் பாயாசம் செய்முறை

ஆப்பிள் பாயாசம்  ஆப்பிளில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதன் வழக்கமான நுகர்வு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் இதயம் தொடர்பான நோய்களைக் குறைக்க உதவுகிறது.  ஆப்பிளில் நோய் எதிர்ப்பு...
பிரதமை திதி பலன்கள்

பிரதமை திதி பலன்கள், பிரதமை திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

பிரதமை திதி அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்த வரும் திதி பிரதமை திதியாகும். பிரதமை என்பது வடமொழி சொல்லாகும். இதற்கு முதலாவது என்று பொருள். அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமையை சுக்கில பட்ச பிரதமை...
சிக்கன் சூப் செய்வது எப்படி

சிக்கன் சூப் எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி

சிக்கன் சூப் உடல் நலிவுற்றவர்கள் காய்கறிகள் மற்றும் சூப்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். சூப் குடிப்பதால் உடல் பலப்படும், பசியை தூண்டும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், இளைத்த உடலை தேற்றும்....
திருமணத்தில் மாலை மாற்றுதல்

திருமணத்தில் மாலை மாற்றுதல் சடங்கு ஏன் செய்யபடுகிறது?

திருமணத்தில் மாலை மாற்றுதல் ஒரு திருமண பேச்சு ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை எண்ணற்ற சடங்குகள் நம் சமுகத்தில் செய்கின்றனர். ஆனால் பல சடங்குகள் ஏன் செய்கின்றனர் என பலருக்கும் தெரிவதில்லை. அவற்றில் ஒன்று...

Riddles with Answers | Puzzles and vidukathaigal

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
உணவை எப்படி சாப்பிட வேண்டும்

வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து

வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அதற்கு நம் உடலை நாம் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருக்க நாம் சாப்பிடக்கூடிய உணவு மிகவும் அவசியமாகும்....
காபி குடிப்பது நல்லதா

காபி குடிப்பதால் முகப்பரு ஏற்படுமா ?

காபி குடிப்பதால் முகப்பரு ஏற்படுமா ? கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் ஒரு சமயம் எத்தியோப்பியாவில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு நாள் தங்களது ஆடுகள் வழக்கத்திற்கு மாறான உற்சாகத்துடனும், இரவில் தூங்காமல் விழித்திருந்ததையும் கவனித்தனர்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.