எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்

எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம்

ஜாதகத்தில் இருக்கிற கிரகங்கள் தான் ஒருவரை யோகம் உள்ளவராகவும், யோகம் அற்றவராகவும் மாற்றுகிறது. அதே போல தான் ஒவ்வொரு ஜாதகருக்கும் தோஷம் அமைகிறது. நாம் முந்தைய பிறப்பில் செய்த பாவ , புண்ணியங்களை பிறக்கும் போதே கடவுள் எழுதி விடுகிறார் அதை பொறுத்து தான் இப்பிறப்பில் நமக்கு தோஷங்கள் அமைகிறது. தோஷத்தில் பல வகைகள் உள்ளன. தோஷங்கள் நீங்க எளிமையான பரிகாரமாக தெய்வங்களுக்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டாலே போதுமானது.

திருமண தோஷம் ஒவ்வொரு தோஷத்திற்கு ஒவ்வொரு பரிகாரங்கள் உள்ளன. பொதுவாக பலரும் தோஷங்கள் நீங்குவதற்காக கோவில்களில் தீபம் ஏற்றுவது வழக்கம். அனால் எத்தனை தீபம் ஏற்றவேண்டும் என்பதில் சிலருக்கு குழப்பம் இருப்பதுண்டு. ஒவ்வொரு தோஷ நிவர்த்திக்கும் இத்தனை தீபங்கள் ஏற்றினால் பலன்களை பெறலாம் என்றொரு கணக்கு உண்டு. அதன் படி தீபம் ஏற்றுவது சிறந்தது. ராகு, கேது, நாக தோஷ பரிகார தலமான  திருநாகேஸ்வரம் கோவிலில், தோஷங்கள் நீங்குவதற்காக இத்தகைய முறையே பக்தர்களால் கடைபிடிக்கப்படுகிறது.

சனி தோஷம்

சனி தோஷம் நீங்க 9 தீபங்கள் ஏற்றவேண்டும்.

திருமண தோஷம்

திருமணத்தில் உள்ள தோஷங்கள் நீங்கி திருமண தடை அகல 21 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

ராகு தோஷம்

ராகு தோஷம் நீங்க 21 தீபங்கள் ஏற்றவேண்டும்.

கால சர்ப்ப தோஷம்

கால சர்ப்ப தோஷம் நீங்க 21 தீபங்கள் ஏற்றவேண்டும்.

குரு தோஷம்

குரு தோஷம் நீங்க 33 தீபங்கள் ஏற்றவேண்டும்.

சர்ப்ப தோஷம்

சர்ப்ப தோஷம் நீங்க 48 தீபங்கள் ஏற்றவேண்டும்.

புத்திர தோஷம்

புத்திர தோஷம் நீங்க 51 தீபங்கள் ஏற்றவேண்டும்.

களத்திர தோஷம்

களத்திர தோஷம் நீங்க 108 தீபங்கள் ஏற்றவேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கேழ்வரகு முறுக்கு செய்வது எப்படி

சத்தான கேழ்வரகு முறுக்கு செய்முறை

கேழ்வரகு முறுக்கு தேவையான பொருட்கள் கேழ்வரகு மாவு – 500 கிராம் அரிசி மாவு - 50 கிராம் உடைத்த கடலை மாவு – 50 கிராம் சீரகம் – 1 ஸ்பூன் வெண்ணை...

முகப்பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும் பீட்ரூட்

முகப்பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும் பீட்ரூட் இயற்கையான அழகை பெற விரும்பும் பெண்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த தீர்வாகும். பீட்ரூட்டில் நம் உடலுக்கும், உள்ளுருப்புகளுக்கும் மிகவும் தேவையான ஒன்றாகும். நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும்...
பெண் உடல் மச்ச பலன்கள்

பெண் உடல் பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

பெண் உடல் மச்ச பலன்கள் மச்சம் ஒருவரின் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று கூறுவார்கள். பெண்களுக்கு எந்த இடத்தில் மச்சம் இருந்தால் எந்த மாதிரியான பலன்கள் ஏற்படும் என்று மச்ச சாஸ்திரம் என்னும் நூல் கூறுகிறது....
நவராத்திரி ஒன்பது நாட்கள்

நவராத்திரி முதல் நாள் வழிபாடு

நவராத்திரி முதல் நாள் வழிபாடு "நவராத்திரி" என்றால் "ஒன்பது இரவுகள்" என்று பொருள். நவராத்திரி என்பது அம்பிகையை பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களாக வழிபடும் பண்டிகையாகும். மகிஷாசுரன் என்னும் அரக்கனை அழித்து உலகிற்கு...
திரிதியை திதி

திரிதியை திதி பலன்கள், திரிதியை திதியில் செய்ய வேண்டியவை

திரிதியை திதி திரிதியை என்பது வடமொழி சொல்லாகும். திரிதியை என்றால் மூன்று என்று பொருள். இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் மூன்றாவது நாள் ஆகும். அமாவாசைக்கு அடுத்து வரும் திரிதியை சுக்கில...
அதிமதுரத்தின் மருத்துவ பயன்கள்

அதிமதுரம் மருத்துவ பயன்கள்

அதிமதுரம் அதிமதுரம் செடி வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். காடுகளில் புதர் செடியாக வளரும். மிதமான சீதோஷ்ணத்தில் வளரும். இது சுமார் 1.5 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் கூட்டிலையைக் கொண்டது....
வேதை பொருத்தம் என்றால் என்ன

வேதைப் பொருத்தம் என்றால் என்ன? எப்படி பார்ப்பது

வேதைப் பொருத்தம் என்றால் என்ன? வேதை என்கிற சொல்லுக்கு ஒன்றுக்கொன்று தாக்குதல் என்று அர்த்தம். வேதைப் பொருத்தம் என்பது வேதனையில்லாத வாழ்க்கையை அமைக்கக்கூடிய பொருத்தம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு நட்சத்திரம் மட்டும் வேதையாக...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.