சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

பன்னிரண்டு தமிழ் மாதங்களில் முதல் மாதம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். முன்வைத்த காலை எதிலும் பின் வைக்க மாட்டார்கள். எடுத்து கொண்ட வேலையை சாமர்த்தியமாக செய்து முடிக்கும் திறமைசாலிகள். நேர்மையான குணம் கொண்ட இவர்கள், எதையும் மறைத்து பேச மாட்டார்கள்.

சித்திரையில் பிறந்தவர்களின் குணநலன்கள்

சித்திரை மாதத்தில் பிறந்தவர்களிடம் தான் என்ற அகந்தை இருக்கும். எல்லோரும் இவரை நம்பியே இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். என்ன நடந்தாலும் எதற்கும் கலங்க மாட்டார்கள். தனிமை விரும்பிகள். மற்றவர்களுக்காக தன்னை மாற்றி கொள்ள மாட்டார்கள். சுறுசுறுப்பானவர்கள், சோம்பல் என்பது இவர்களுக்கு பிடிக்காது. இவர்கள் எந்த வேலையை எடுத்து கொண்டாலும் சுறுசுறுப்புடன் பணியாற்றுவார்கள்.

இவர்கள் எந்த ஒரு காரியத்தையும் தள்ளி போட மாட்டார்கள். எந்த ஒரு காரியத்தையும் தாமதிக்காமல் உடனே செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்கள் குறித்த நேரத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் எதையும் செய்து முடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். இவர்கள் குடும்பம் மற்றும் வியாபாரத்தில் பெண்கள் மூலமாக அதிக ஆதாயம் அடைவார்கள். திட்டம் போட்டு குடும்பம் நடத்துவதில் வல்லவர்கள்.

இவர்கள் பயணங்கள் செல்வதில் அதிக விருப்பம் கொண்டவர்கள். பயணங்கள் மூலம் நிறைய அனுபவங்களை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள். இவர்களுக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகம் இருக்கும். இவர்களின் கையில் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். இவர்களை நம்பி எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் வெற்றி நிச்சயம்.

இவர்கள் இடம், பொருள், ஏவல் அறிந்து நடந்து கொள்வார்கள். இவர்கள் எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் பிரகாசிப்பார்கள். தோல்வி வந்தால் துவண்டு போகாமல் வெற்றி பெறும் வரை கடுமையாக உழைப்ப்பார்கள். அரசியல், அதிகாரப் பதவிகள் மூலம் செல்வம் சேர்த்து, அதன்மூலம் சொத்துகள் வாங்கும் யோகம் உடையவர்கள்.

இவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும், எந்த பொறுப்பு வகித்தாலும் அந்தத் துறையில் சிறந்து விளங்குவார்கள். இவர்களுக்கு அதிகாரம், அந்தஸ்து, அரசியலில் தலைமை இடத்தில் உள்ளவர்கள் போன்றோரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் கிடைக்கும்.

இவர்கள் மனதில் ஒரு காரியத்தை நினைத்து விட்டால் அதை சாதிக்காமல் விட மாட்டார்கள். இவர்கள் வேலை செய்யும் துறையில் சிறப்பாக இருப்பதால், பலரது பகையை சந்திப்பார்கள். இவர்கள் கோபக்காரர்கள். இவர்கள் கோபத்தை கட்டுப்படுத்தினால் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.

இவர்களுக்குள் பல திறமைகள் இருந்தாலும், அதை வெளிகாட்டிக்கொள்ள மாட்டார்கள். தங்கள் மனதில் தன்னை ஒரு கோழையாக எண்ணிக் கொள்ளும் குணம் கொண்டவர்கள். இந்த எண்ணத்தையும், கோபத்தையும் சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் மாற்றிக் கொண்டால் அவர்கள் வாழ்வில் வெற்றிகள் பல வந்து சேரும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஆடாதொடை இலையின் பயன்கள்

நுரையீரல் பிரச்சனைகளை தீர்க்கும் ஆடாதோடா இலை

ஆடாதோடா இலை மக்கள் ஆரோக்கியமாக வாழ நம் சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப...

Puzzles with Answers | Tamil Puthirgal | Brain games in Tamil | Brain Teasers...

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
தரை பசலை கீரை நன்மைகள்

தரை பசலை கீரையின் மகத்தான மருத்துவ பயன்கள்.

தரை பசலை என்கிற சிறு பசலை தரையில் படரும் கீரை வகைகளுள் பசலை கீரை முக்கியமான ஒன்றாகும். இதற்கு சிறு பசலை, தரை பசலை என்ற வேறு பெயர்களும் உண்டு. உடலின் நோய் எதிர்ப்பு...
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் அனுஷம் நட்சத்திரத்தின் இராசி : விருச்சிகம் அனுஷம் நட்சத்திரத்தின் அதிபதி : சனி அனுஷம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய் அனுஷம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : லக்ஷ்மி அனுஷம் நட்சத்திரத்தின் பரிகார...

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் புனர்பூசம் நட்சத்திரத்தின் இராசி : மிதுனம் மற்றும் கடகம் புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதி : குரு புனர்பூசம் 1 முதல் 3 பாத நட்சத்திரத்தின் இராசி அதிபதி - மிதுனம் :...
தினப் பொருத்தம் என்றால் என்ன

தினப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்க்க வேண்டும்

தினப் பொருத்தம் என்றால் என்ன? தினப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் முதல் பொருத்தம் ஆகும். தினப் பொருத்தம் என்பது கணவன், மற்றும் மனைவிக்கு இடையே தினசரி எந்த மாதிரியான சூழ்நிலைகள் நிலவும் என்பதை...
துளசி மருத்துவ நன்மைகள்

துளசி மருத்துவ குணங்கள்

துளசி துளசி மூலிகைகளின் ராணி என அழைக்கபடுகிறது. துளசியில் உள்ள மருத்துவ குணங்களால் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசியின் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. துளசி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.