கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
கேட்டை நட்சத்திரத்தின் இராசி : விருச்சிகம்
கேட்டை நட்சத்திரத்தின் அதிபதி : புதன்
கேட்டை நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய்
கேட்டை நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை :- இந்திரன்
கேட்டை நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் : பெருமாள்
கேட்டை நட்சத்திரத்தின் நட்சத்திர கணம் : ராட்ஷச கணம்
கேட்டை நட்சத்திரத்தின் விருட்சம் : பலா மரம்(பால் மரம்)
கேட்டை நட்சத்திரத்தின் மிருகம் : ஆண் மான்
கேட்டை நட்சத்திரத்தின் பட்சி : சக்கிரவாகம்
கேட்டை நட்சத்திரத்தின் கோத்திரம் : அகத்தியர்
கேட்டை நட்சத்திரத்தின் வடிவம்
கேட்டை நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 18வது இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘துளங்கொளி’ என்ற பெயரும் உண்டு. கேட்டை நட்சத்திரம் வான் மண்டலத்தில் குடம், ஈட்டி போன்ற வடிவங்களில் காணப்படும்.
கேட்டை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோட்டை கட்டி வாழ்வார்கள் என்ற பழமொழி உண்டு. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இனிய சுபாவம் கொண்டவர்கள். அழகான தோற்றம் கொண்டவர்கள். மற்றவர்களின் அறிவுரைகளை கேட்கமாட்டார்கள். செல்வாக்கு நிறைந்தவர்கள். உண்மையை பேசக்கூடியவர்கள். இறை நம்பிக்கை உடையவர்கள். உடன் பிறந்தவர்கள் மீது அதிக அன்பு கொண்டவர்கள். இவர்களிடம் ஒரு காரியத்தை ஒப்படைத்தால் அதை முழு மூச்சாக நின்று முடித்து காட்டுவார்கள். நகைச்சுவை உணர்வு மிகுந்தவர்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வசீகரமான தோற்றம் கொண்டவர்கள். இவர்களிடம் ரகசியம் என்று எதையும் சொல்ல முடியாது. ஏனெனில் இவர்களுக்கு ரகசியம் காக்க தெரியாது. எதையும் வெளிப்படையாக பேசிவிடும் குணம் உள்ளவர்கள். தன் குடும்ப பிரச்சனைகளைக்கூட மற்றவர்களிடம் சொல்லிச் சொல்லி அலுத்துக்கொள்வார்கள். இவர்களுக்கு எதிர்காலத்தில் நடக்க போவதை பற்றி முன் கூட்டியே அறியும் ஆற்றல் உண்டு. இவர்களுக்கு பிடிவாத குணம் அதிகம் இருக்கும். அந்த பிடிவாதத்தாலேயே பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
மற்றவர்களின் யோசனைகளை ஏற்காமல் தங்கள் சொந்த விருப்பங்களுக்கு ஏற்பவே நடப்பார்கள். சந்தர்ப்பம், சூழ்நிலை இவற்றை புரிந்து கொள்ளாமல் திடீர் தீடிரென முடிவுகளை எடுப்பார்கள். அதனால் பல சந்தர்ப்பங்களில் இக்கட்டான சூழ்நிலைகளை இவர்கள் சந்திப்பார்கள். பொய்யை பேசினாலும் பிறர் நம்பும்படியாக உண்மை போல பேசக்கூடியவர்கள். தைரியமும், துணிச்சலும் இயற்கையாகவே இவர்களுக்கு இருக்கும்.இவர்களின் ஆரம்பகால வாழ்க்கை சுகமாக அமைவதில்லை. யாருடைய தயவையும் எதிர் பார்க்க மாட்டார்கள். கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கும். நல்ல அறிவாளிகள்.
வெகுளியான சுபாவத்தை கொண்டவர்கள். பிறர் தனக்கு செய்த நன்றியை மறக்க மாட்டார்கள். சண்டை வந்தாலும் சமாதானமாகவே போக விரும்புவார்கள். அழகான சுருக்கமான பேச்சுகளில் சிறந்தவர்கள். இவர்களுக்கு நல்ல நுட்பமான அறிவும், விளையாட்டுத்தனமும் இருக்கும். ஒரு காரியத்தில் தடை ஏற்பட்டால் ஒரு வித பயம், பதற்றம், கோபம் போன்றவை இவர்களுக்கு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வார்கள். யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டார்கள். இவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள்.
கேட்டை நட்சத்திரத்தில் முதல் பாதம் :
இவர்களிடம் கேட்டை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். எப்பொழுதும் எதையாவது யோசித்து கொண்டே இருப்பார்கள். சாதிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுபவர்கள். இவர்களுக்கு விளையாட்டுதனம் அதிகம் இருக்கும். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்னும் விருப்பமுடையவர். குழப்பம் நிறைந்தவர்கள். சினம் அதிகமாக கொண்டவர்கள். வெளிப்படையாக பேசக்கூடியவர்கள். நட்புக்கு முக்கியத்துவம் தருபவர்கள். மனதில் உள்ளதை மறைக்காமல் வெளியில் கொட்டி விடுவார்கள். இதனால் எதிரிகளை அதிகம் சம்பாதிப்பார்கள்.
கேட்டை நட்சத்திரம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் கேட்டை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். புகழை விரும்பக்கூடியவர்கள். இவர்களுக்கு இசை மற்றும் சங்கீதத்தில் அதிக ஆர்வம் உண்டு. கொடைக்குணம் கொண்டவர்கள். குடும்பத்தை பேணி காப்பார்கள். பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். தேக சுகத்தை விரும்புபவர்கள். இவர்களுக்கு வாய் துடுக்கு அதிகம் இருக்கும். கடினமான மனதை கொண்டவர்கள். கோபம் இவர்களின் சுபாவமாக இருக்கும். உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்ள மாட்டார்கள்.
கேட்டை நட்சத்திரம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் கேட்டை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்களுக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். இவர்களுக்கு கலைகளின் மேல் அதிக ஈர்ப்பு உண்டு. பின்புத்தி உடையவர்கள். பிறருக்காக உழைக்கக்கூடியவர்கள். அமைதியானவர்கள். பொதுவாக பரம சாதுவாக இருப்பார்கள்.
கேட்டை நட்சத்திரம் நான்காம் பாதம் :
இவர்களிடம் கேட்டை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் அழகான தோற்றம் உடையவர்கள். ஆடம்பரங்களில் பிரியம் இருக்கும். சாஸ்திரம், சம்பிரதாயங்களில் ஈடுபாடு உண்டு. நல்ல வலுவான தேக பலத்தை கொண்டு இருப்பார்கள். தெய்வபக்தி உடையவர்கள். பேச்சுத் மற்றும் எழுத்து திறமை உடையவர்கள்.
மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.