சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சிம்ம லக்னத்தின் அதிபதி சூரிய பகவானவார். சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். மற்றவர்கள் இவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்களை கண்டு பிறர் அஞ்சி தயங்கிப் தயங்கி பேசுவார்கள். நல்ல திடமான புத்தி கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் முன் கோபம் என்பது இவர்களுக்கு அதிகமாக இருக்கும். அதுவே இவர்களின் பலமும், பலவீனமும் ஆகும். பிறரின் காலை பிடித்து முன்னேற மாட்டார்கள். மனசாட்சிபடி நடப்பார்கள் மற்றும் பேசுவார்கள்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

இவர்கள் வாழ்வின் முற்பகுதியை விட பிற்பகுதியில் தான் வசதி வாய்ப்புகளுடன் நன்றாக வாழ்வார்கள். தலைமை பதவிகளில் இருக்கும் பலர் உதாரணமாக அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் பலர் இந்த லக்னத்தில் பிறந்தவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு கட்டளையிடும் உயர்ந்த இடத்தில இருப்பார்கள். ஒரு மாபெரும் கூட்டத்துக்கு தலைவராக இருப்பார்கள். எப்பொழுதும் தனக்கு கீழ் ஒரு கூட்டம் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

இவர்கள் நல்ல கவர்ச்சிகரமான மற்றும் எடுப்பான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். விளையாட்டுகளில் அதிக ஆர்வம் இருக்கும். பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். தான் எப்படி மற்றவர்களிடம் நடந்து கொள்கிறாரோ அது போலவே மற்றவர்களும் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாக எடுத்துக் கொள்வார்கள். தீர்கமாக முடிவு செய்துவிட்டு ஒரு காரியத்தில் இறங்கினால் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டார்கள்.

இவர்களுக்கு நண்பர்களும், உறவினர்களும் அதிகமாக இருப்பார்கள். கொண்ட கொள்கையில் மிகவும் உறுதியானவர்களாக இருப்பார்கள். எதிலும் ஒளிவு மறைவு இல்லாமல் உண்மையாக நடக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்கள் கலை, மற்றும் இசையில் மிகுந்த விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்கள். தங்கள் தாய், தந்தை மேல் அதிக மிகுந்த பாசம் உள்ளவர்கள்.

இவர்கள் எதையும் ஆராய்ந்து பார்க்கும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தாங்கள் எடுத்து கொண்ட செயல்களில் உறுதியுடன் இருப்பார்கள். இவர்களை பின்னால் இருந்து கவிழ்க்க ஒரு கூட்டம் எப்போதும் தயாராக இருக்கும். மிகுந்த ஜாக்கிரதையாக இருப்பார்கள். தற்புகழ்ச்சி மற்றும் சிற்றின்ப பிரியராக இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் எல்லா விதமான சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

தன்னம்பிக்கையுடன் கூடிய விடமுயற்சி கொண்டவர்கள். இவர்கள் படித்த படிப்பிற்கும், பார்க்கும் வேலைக்கும் சம்மந்தம் இருக்காது. அனாலும் தான் செய்யும் வேலையில் மிகுந்த கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.  இவர்கள் செய்யும் செலவுகளை பற்றி கொஞ்சமும் கவலைபட மாட்டார்கள். கடன் வாங்குவது என்பது இவர்களுக்கு பிடிக்காது. அப்படியே கடன் வாங்கினாலும் அதை சரியாக திருப்பி கொடுத்து விடுவார்கள். இவர்கள் பிறருடன் அனுசரித்து செல்வது என்பது மிகவும் கடினம்.

இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை தெற்கு மற்றும் மேற்கு திசையிலிருந்து வருவார்கள். இவரின் வாழ்க்கைத் துணையாக வருபவர்கள் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள். எந்த ஒரு கடினமான வேலைகளையும் புன்சிரிப்போடு செய்யக்கூடியவராக இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை இருப்பார். மனைவிக்கு முழுமைமாக கட்டுபட்டவர்கள். மனைவியின் அன்பிற்கு அடங்கி போவதில் பெரும் விருப்பம் கொள்வார்கள்.  இவர்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் அதிக ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள். திருமண தடை நீங்க குலதெய்வம் மற்றும் காவல் தெய்வத்தை வணங்கி வருவது நன்மை பயக்கும்.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மார்கழியில் சுபகாரியங்கள் ஏன் செய்வது இல்லை

மார்கழியில் சுபகாரியங்கள் மார்கழி மாதம் என்றால் நமது நினைவுக்கு முதன் முதலில் வருவது ஒவ்வொரு வீட்டின் முகப்பிலும் போடப்பட்டிருக்கும் வண்ணமயமான அழகிய கோலங்கள் தான். மார்கழி மாதத்தின் பெருமையை ஆண்டாள், "மார்கழித் திங்கள் மதிநிறைந்த...
ஜாதக யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #7

ஜாதக யோகங்கள் இந்த பூமியில் மனிதன் பிறக்கும்போது, அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கிரகங்கள் இருக்கும் நிலையை வைத்து நிர்ணயிக்கபடுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில் எந்த...
துவாதசி திதி

துவாதசி திதி பலன்கள், துவாதசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

துவாதசி திதி துவாதச என்பதற்கு பன்னிரண்டு என்று அர்த்தம். துவாதசி என்பது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 12 வது நாள் துவாதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும்...
கம்பு அல்வா செய்முறை

புரதச்சத்து நிறைந்த கம்பு அல்வா

கம்பு அல்வா கம்பு ஒரு புரதச் சத்து நிறைந்த உணவாகும்.தினமும் இட்லி, தோசை சாப்பிடுவதை தவிர்த்து கம்மங்கூழ்,கம்பு அடை, கம்பு தோசை என கம்பை நம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோய்...
இறால் கிரேவி செய்முறை

இறால் கிரேவி செய்வது எப்படி

இறால் கிரேவி செய்வது எப்படி இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. ஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், இந்த கடல் உணவை தாரளமாக சாப்பிடலாம்....
கிரிஸ்பி மிளகாய் சிக்கன்

கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்முறை

கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தேவையான பொருட்கள் சிக்கன் - 1/2 கிலோ மிளகாய் தூள் - 1  தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் மிளகு தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் -...
அதிமதுரத்தின் மருத்துவ பயன்கள்

அதிமதுரம் மருத்துவ பயன்கள்

அதிமதுரம் அதிமதுரம் செடி வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். காடுகளில் புதர் செடியாக வளரும். மிதமான சீதோஷ்ணத்தில் வளரும். இது சுமார் 1.5 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் கூட்டிலையைக் கொண்டது....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.