இராகு கேது தோஷம் என்றால் என்ன? இராகு கேது தோஷ பரிகாரங்கள்

இராகு கேது தோஷம்

ராகு மற்றும் கேது ஜோதிடத்தில் நிழல் கிரகங்கள் என கூறப்படுகின்றன. ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாக இருந்தாலும் மிகவும் வலிமை வாய்ந்தவையாகும். ஒருவருடைய ஜாதகத்தில் ராகு மற்றும் கேது எந்த கிரகங்களுடன் சேர்ந்து இருக்கிறதோ, அந்த கிரகத்தின் குணத்தை பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை ஆகும். ராகு மற்றும் கேது நல்ல கிரகங்களுடன் இருந்தால் நல்ல பலனையும், தீய கிரகங்களுடன் இருந்தால் தீய பலனையும் அளிக்கும் குணமுடையவை ஆகும்.

நாக தோஷம் நீங்க

ராகு – கேது தோஷம் ஏன் ஏற்படுகிறது?

வயதான பெண்களை சரியாக கவனிக்காமல் கொடுமைப்படுத்தினால் அவர்களின் தலைமுறைக்கு இராகு கேது தோஷம் ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட காலத்தில் திருமணம் நடைபெறாமல் தள்ளி போகிறது. மேலும் களத்திர ஸ்தானத்தில் ராகு ஜென்மத்தில் கேதுவாக மாறி கெடுதலைச் செய்கிறது. கோவில் இடங்களை ஆக்கிரமித்து ஆண்டவனின் கோபத்திற்கு ஆளானால் இந்த தோஷம் ஏற்படலாம்.

குடும்பங்களை பிரித்து வயதானவர்களிடம் சாபம் வாங்கினால் சாபம் நிறைவேற குடும்ப ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டமத்தில் கேதுவும் இருந்து இல்வாழ்க்கையை நிம்மதி இல்லாமல் இந்த இராகு கேது கெடுக்கும். சகோதரர்களை மதிக்காமலும், உண்மை பாசத்தை உதறித்தள்ளி கைவிட்டாலோ அல்லது அவர்களை ஏமாற்றினாலோ அவர்கள் கொடுத்த சாபம் காரணமாக ஒருவருக்கு 3வது வீட்டில் ராகுவும், தர்ம கர்மா ஸ்தானமான 9-ம் வீட்டில் கேதுவும் இருக்கும்.

சர்ப்ப தோஷங்களின் வகைகள்

இராகு கேது தோஷம் என்ன செய்யும்

ஒருவரது ஜாதகத்தில் ராகு – கேது தோஷம் இருந்தால் திருமணம் தாமதமாகும். தொழிலில் முடக்கம் ஏற்படும். உடல் பல நோய்களால் பாதிக்கபடும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்படும்.

ராகு கேது தோஷ பரிகாரங்கள்

ராகு மற்றும் கேது தோஷத்திற்கு பொதுவான பரிகாரமாக தோஷத்தின் வீரியம் குறைய, பெருமாள் கோயிலில் உள்ள கருடாழ்வாருக்கு அர்ச்சனை செய்வது நல்லது. ராகு மற்றும் கேது எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார்களோ அந்த நட்சத்திரத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்வது நல்லது. பாம்பின் மேல் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள் கோயிலில் பரிகாரம் செய்துகொள்வதும் நல்லது.

நவகிரக தோஷ பரிகாரகங்கள்

சுவாதி, சதயம், திருவாதிரை நட்சத்திரம் வரும் தினங்களில், அருகில் உள்ள சிவன் கோயிலில் பிரதோஷ காலத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்தால், ராகு கேதுவின் வீரியம் குறையும். பாம்பை அடித்துக் கொன்றவர்கள், பாம்புப் புற்றை இடித்தவர்கள் இந்த தோஷத்தின் பிடியில் இருப்பார்கள். அவர்கள் ஆடி, தை மாத வெள்ளிக்கிழமைகளில் பாம்புப் புற்றுக்குப் பால் ஊற்றுவது அல்லது நாகர் சிலைக்கு பால் அபிஷேகம், மஞ்சள் காப்பிட்டு வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.

கேது பகவான் அருள் பெற விநாயகர், சித்ரகுப்தர் ஆகிய தெய்வங்களை வழிபடலாம். ராகுவின் அருள் பெற துர்க்கை அம்மன், கருமாரி அம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடலாம். காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தருக்கு என்று தனி கோவில் உள்ளது. அங்கு கேது பரிகார பூஜை செய்யலாம்.

பாம்பு புற்று இருக்கும் அனைத்து அம்மன், காளி கோவில்களிலும் ராகு பரிகார பூஜைகள் செய்யலாம். நவகிரகத்தில் உள்ள ராகு கேதுவுக்கும் விளக்கேற்றலாம். சிவன் கோவிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபட வேண்டும். பெருமாள் கோவிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை புதன்கிழமை ராகுகாலத்திலும் வணங்குவது நல்லது. சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள், அர்ச்சனை செய்து வழிபடவும். தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபாடு செய்யலாம்.

ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி வழிபடலாம். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடவும். பசுமாட்டிற்கு வாழைப்பழம் கொடுத்து வழிபடலாம். பாம்பு புற்றுள்ள கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தலாம். ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை காலை ஒருபொழுது மட்டும் விரதம் இருக்கலாம்.

ராகு – கேதுக்கு எப்போது பரிகாரம் செய்ய வேண்டும்

செவ்வாய் திசையில் ராகு புத்தி, கேது புத்தி நடக்கும்போது பரிகாரம் செய்யலாம். ராகு திசையில் ராகு புத்தி, கேது புத்தி நடக்கும்போது பரிகாரம் செய்யலாம். சந்திரதிசையில் ராகு புத்தி, ராகு அந்தரம் கேது புத்தி, கேது அந்தரம் நடக்கும்போது பரிகாரம் செய்யலாம். குரு திசையில், கேது புத்தி ராகு புத்தி நடக்கும்போது பரிகாரம் செய்யலாம்.

நாக தோஷ பரிகார தலங்கள்

சூரிய திசையில், எந்த புத்தி நடந்தாலும், அதில் ராகு அல்லது கேது அந்தரம் நடக்கும்போது பரிகாரம் செய்யலாம். சனி திசையில் ராகு, கேது புத்தி-சூரிய புத்தியில் ராகு, கேது அந்தரம் நடக்கும்போது பரிகாரம் செய்யலாம். கேது திசையில் சந்திர புத்தி, சூரிய புத்தி, புதன் புத்தியில் ராகு-கேது அந்தரம் நடக்கும்போது பரிகாரம் செய்யலாம். புதன் திசையில் சந்திர – புத்தி, ராகு – கேது அந்தரம் நடக்கும்போது பரிகாரம் செய்யலாம்.

ராகு கேது தோஷ பரிகார ஸ்தலங்கள்

1. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமாகும்.
2. கும்பகோணம் அருகே உள்ள கீழ்பெரும்பள்ளம் கேது ஸ்தலமாகும்.
3. சிவ ஸ்தலமான காளஹஸ்தியில் ராகு மற்றும் கேதுகென்று சிறப்பான பரிகாரங்கள் செய்யபடுகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

puzzles

Puzzles with Answers | Puthirgal | Brain teasers

புதிர்களும் விடைகளும்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள் மற்றும் விடைகளுடனும்...
how to make prawn 65 recipe

ஹோட்டல் ஸ்டைல் இறால் 65

இறால் 65 தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ சோளமாவு - 1 ஸ்பூன் மைதா மாவு - 1 ஸ்பூன் முட்டை – 1 தயிர் – 2 ஸ்பூன் இஞ்சி,...
வெற்றி தரும் நட்சத்திர குறியீடு

வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள்

வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள் தினசரி வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொரு விஷயத்திலும் நாம் வெற்றி அடைய வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகிறோம். சிறிதும் மனம் தளராமால் அதற்கான முயற்ச்சியை செய்து கொண்டு தான்...
சித்த மருத்துவம் பயன்கள்

சித்த மருத்துவம் என்றால் என்ன? சித்த மருத்துவ பயன்கள்

சித்த மருத்துவம் சித்த மருத்துவம் (Siddha Medicine) என்பது பழங்காலத்தில் சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவ முறையாகும். சித்த வைத்தியத்தை பாட்டி வைத்தியம், கை வைத்தியம், தமிழ் மருத்துவம், நாட்டு மருத்துவம், மூலிகை...
ஆடி செவ்வாய் வழிபாடு

ஆடிச் செவ்வாயும் ஔவையார் விரதமும்

ஆடிச் செவ்வாய் விரதம் ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் தான். மற்ற மாதங்களை காட்டிலும் ஆடி மாதத்தில் தான் அம்மனுக்கு வழிபாடுகள் அதிக அளவில் நடைபெறும். குறிப்பாக ஆடி மாதத்தில் வரும்...
chettinadu special chicken grevy

செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி

செட்டிநாடு சிக்கன் கிரேவி தேவையான பொருட்கள் சிக்கன் -  ½ கிலோ தக்காளி - 2 பெரிய வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 3 இஞ்சி பூண்டு விழுது – 2...
உணவை எப்படி சாப்பிட வேண்டும்

வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து

வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அதற்கு நம் உடலை நாம் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருக்க நாம் சாப்பிடக்கூடிய உணவு மிகவும் அவசியமாகும்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.