பங்குனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

பங்குனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

பனிரெண்டு தமிழ் மாதங்களில் பங்குனி மாதம் கடைசி மாதமாகும். சூரியன் மீன ராசியில் பிரவேசிக்கும் காலம் பங்குனி மாதமாகும். இந்த பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தமிழ்கடவுள் முருகப்பெருமானுக்குரிய பங்குனி உத்திர திருவிழாவும், அதேபோல் இந்த பங்குனி மாதத்தில் தான் அன்னை காமாக்ஷி ஊசி முனையில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரோடு ஐக்கியமான தினமும், வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

பங்குனியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அனைவரையும் தன்னுடைய பேச்சால் கவரக்கூடிய ஆற்றல் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் மனதில் உள்ளதை எளிதில் வெளிக்காட்டி கொள்ள மாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எந்த ஒரு சூழ்நிலை வந்தாலும் எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டார்கள். இவர்களை பொறுத்தவரை செய்யும் தொழிலே தெய்வம் என நினைப்பார்கள். கற்பனை வளம் அதிகம் நிறைந்தவர்கள் இவர்கள்.

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எல்லோரையும் தன் வசப்படுத்தக்கூடிய அளவிற்கு ஆற்றல் நிறைந்தவர்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுவார்கள். ஆனால், இவர்களின் முகபாவங்களை வைத்து எதையும் அவ்வளவு எளிதில் தெரிந்து கொள்ள இயலாது. இவர்களுக்கு ரகசியங்களை மறைக்க தெரியாது. எளியவர்களிடமும், வாயில்லாப் பிராணிகளிடமும் மிகுந்த இரக்க காட்டுவார்கள்.

இவர்கள் பிறருக்கு அவ்வளவு எளிதில் வாக்கு கொடுக்க மாட்டார்கள். அப்படி வாக்கு கொடுத்து விட்டால் அதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றியே தீருவார்கள். இவர்கள்கு எதிரிகளை திட்டமிட்டு வெல்லும் ஆற்றல் கொண்டவர்கள். இவர்களுக்கு அடிக்கடி பயணங்கள் செல்வதில் விருப்பம் இருக்கும். எதையும் முறையாக திட்டமிட்டு செயல்படக்கூடியவர்கள். இவர்களுக்கு முன்கோபம் அதிகம் இருக்கும். இயற்கைக் காட்சிகளை விரும்பி ரசிப்பார்கள்.

உணர்ச்சிகளை அவ்வளவாக வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். அதே போல வெகு எளிதில் மனத் தளர்ச்சி அடைந்து விடுவார்கள். இவர்களின் பேச்சில் கனிவும், கண்டிப்பும் இருக்கும். இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவதில் மற்றும் பணி புரிவதில் வல்லவர்கள். இவர்கள் சதா எந்நேரமும் பல்வேறு விதமான எண்ணங்களில் மூழ்கி இருப்பார்கள். தம்மைச் சார்ந்தவர்களை எல்லாவகையிலும் திருப்தியடையும்படி செய்வார்.

குடும்பத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள். எப்போதும் கணக்கு வழக்குகளில் கவனம் செலுத்துவதால் இவர்களிடம் சேமிப்பு இருந்து கொண்டே இருக்கும். எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அது தீர்க்கமாகவும், தெளிவாகவும் இருக்கும். இவர்கள் ஒரு சில விஷயங்களில் அடங்கி போவார்கள். இவர்கள் பதுங்குவது பாய்வதற்கு தான். எவ்வளவு சோதனை வந்தாலும் வேதனை அடையமாட்டார்கள். அதே போல எடுத்த காரியத்தை முடிக்காமல் பின்வாங்கமாட்டார்கள். இவர்கள் அடிக்கடி தம்முடைய லட்சியங்களை மாற்றிக்கொள்வார்கள்.

இவர்களிடம் எப்பொழுதும் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் எந்த ஒரு விஷயத்தில் முன் எச்சரிக்கையாக இருப்பார்கள். இவர்கள் புகழ்ச்சிக்கு ஆசைபடுபவர்கள். ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள். இவர்களின் இளமை வாழ்க்கை வறுமை நிறைந்ததாக இருக்கும். ஆனால் 40 வயதிற்கு மேல் சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள். வெகு சீக்கிரத்தில் யாவரையும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக்கிக்கொள்வர். இவரை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்குவது மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்குவது போலாகும். மற்றவர் சுகத்தைத் தன் சுகமாக கருதும் உயர்ந்த பண்பு கொண்டவர்கள் இவர்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஆவணியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சிம்மராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஆவணி மாதமாகும். இது தமிழ் மாதங்களில் ஐந்தாவது மாதம் ஆகும். ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும், வேங்கை மாதம் என்றும் சித்தர்கள்...
raagi recipes

உடலுக்கு வலுசேர்க்கும் கேழ்வரகு பர்பி

கேழ்வரகு பர்பி தேவையான பொருட்கள் ராகி மாவு – 1 கப் ரவை – ¼ கப் வெல்லம் – 1 கப் நெய் – தேவையான அளவு முந்திரி – தேவையான அளவு ...
aarkadu makkan beda

ஆற்காடு மக்கன் பேடா செய்வது எப்படி

ஆற்காடு மக்கன் பேடா தேவையான பொருட்கள் மைதா - 1 கப் இனிப்பு இல்லாத கோவா - 150 கிராம் வெண்ணெய்  - 1 ஸ்பூன் சமையல் சோடா - 1 சிட்டிகை எண்ணெய்...
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் திருவாதிரை நட்சத்திரத்தின் இராசி : மிதுனம் திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி : ராகு திருவாதிரை நட்சத்திரத்தின் இராசி அதிபதி : புதன் திருவாதிரை நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : மகேஸ்வரன் திருவாதிரை நட்சத்திரத்தின் பரிகார...
பெண் தலை மச்ச பலன்கள்

பெண் தலை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

பெண் தலை மற்றும் புருவ மச்ச பலன்கள் பெண்ணின் தலையில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பேராசை, மற்றும் பொறாமை குணம் இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது. பெண்ணின் புருவங்களில் மச்சம் இருந்தால் அவர்கள்...
கனவு பலன்கள் வீடு

கட்டிடங்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

கட்டிடங்கள் கனவில் வந்தால் கனவுகள் காணாதவர் இவ்வுலகில் எவரும் இல்லை. அதற்கேற்றார் போல நாம் நம் தூக்கத்தில் எண்ணற்ற கனவுகளை காண்கிறோம். ஒரு சில சமயங்களில் அதிசயக்க வைக்கும் கனவுகளும் உண்டு. ஆனால் அந்த...
குபேர எந்திரம்

லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள்

லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள் தீபாவளியும் அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் நாம் லக்ஷ்மி குபேர பூஜை செய்து மகாலக்ஷ்மியை வழிபடுவதின் மூலம் சகல சௌபாக்கியங்களையும்  நாம் பெற முடியும். தீபாவளி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.