ஆண் கால் பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் கால்கள் மச்ச பலன்கள்

உடலில் ஒவ்வொரு பாகத்தில் தோன்றும் மச்சங்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை மச்ச சாஸ்திரம் என்னும் நூல் விளக்குகிறது. அந்த வகையில் ஆணின் கால் பகுதியில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன் என்பதை கீழ்கண்ட பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

ஆண் தொடை மச்ச பலன்கள்

வலது தொடையில் மச்சம் இருந்தால் அவர்கள் அதிர்ஷ்டமான பலன்களைச் சந்திப்பார்கள். எல்லோரையும் எளிதில் நம்பக்கூடியவராகவும், இவர்களுக்கு யாராவது தீமையே செய்தாலும் அவர்களுக்கு நன்மையையே செய்யகூடியவர்களாக இருப்பார்கள்.

ஆண் கால் பகுதி மச்சத்தின் பலன்கள்

இடது தொடையில் மச்சம் இருந்தால் வாழ்வில் பொருளாதார நெருக்கடிகள் இவர்களுக்கு ஏற்படும்.

ஆண் கால் மச்ச பலன்கள்

வலதுகால் பகுதியில் மச்சம் உள்ளவர்களுக்கு தெய்வ நம்பிக்கையும், அமைதியான குணமும் இருக்கும்.

வலது முழங்கால் பகுதியில் மச்சம் உள்ளவர்களுக்கு யோகமான பலன்கள் கிடைக்கும்.

இடது முழங்கால் பகுதியில் மச்சம் உள்ளவர்களுக்கு தீமையான பலன்கள் கிடைக்கும்.

உள்ளங்காலில் மச்சம் இருப்பவர்கள் பயணத்தை அதிகமாக விரும்புவார்கள்.

ஆண் பாதம் மச்சம் பலன்கள்

இடது பாதத்தில் மச்சம் உள்ளவர்கள் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தவிப்பார்கள்.

கால் விரலில் மச்சம் உள்ளவர்கள் பெரும்பாலும் தனிமையை விரும்புவார்கள். மேலும் யாரிடமும் அதிக பழக்கம் வைத்து கொள்ளமாட்டார்கள். எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டர்வர்கலாக இருப்பார்கள்.

வலது பாதத்தில் மச்சம் உள்ளவர்கள் விடாமுயற்சி உடையவர்களாய் இருப்பார்கள். இவர்கள் எளிமையாக இருப்பதையும், வாழ்க்கையை சந்தோஷமாக வாழக்கூடியவர்களாக இருப்பார்கள்.

கால் பாதத்தின் நடுவில் மச்சம் இருப்பவர்கள் தாங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுபவர்களாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு கலைத்துறையின் மீது அதிக ஈடுபாடு இருக்கும்.

ஆண் பாதத்தில் உள்ள மச்ச பலன்கள்

கட்டைவிரலுக்கு கீழ்புறம் மச்சம் இருப்பவர்கள் எதிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்கள் இவர்களின் மீது அன்பு வைத்திருப்பார்கள்.

குதிகாலின் மேற்புறத்திலே அல்லது அடிப்புறத்திலோ மச்சம் இருப்பவர்களுக்கு பயணம் செய்வதில் மிகுந்த ஆர்வம் இருக்கும்.

ஆண் அந்தரங்க பகுதி மச்ச பலன்கள்

ஆண்குறி மீது மச்சம் உள்ளவர்களுக்கு ஒழுக்கத்தில் நம்பிக்கை கிடையாது.

விதைப்பைகள் மீது மச்சம் உள்ளவர்கள் தைரியசாலிகளாய் இருப்பார்கள்.

புட்டம் மீது மச்சம் உள்ளாவர்கள் பணம் சம்பாதிக்க கடுமையாய் உழைக்க வேண்டியிருக்கும்.

ஆண் பெண் மச்ச பலன்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ரஜ்ஜு பொருத்தம் என்றால் என்ன

ரஜ்ஜூ பொருத்தம் என்றால் என்ன? ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது எப்படி

ரஜ்ஜூ பொருத்தம் என்றால் என்ன? பத்து பொருத்தங்களில் மிக முக்கியமான பொருத்தமாக கருதப்படுவது ரஜ்ஜூ பொருத்தமாகும். கணவராக வரபோகிறவரின் ஆயுள் நிலையை அறிந்து கொள்வதற்கு ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில், பெண்ணின்...
தாரை வார்த்தல் என்றால் என்ன

திருமணத்தில் தாரை வார்த்தல் என்றால் என்ன?

தாரை வார்த்தல் என்றால் என்ன? திருமணம் செய்வதில் பல சடங்குகள் இருந்தாலும் அதில் மிகவும் முக்கியமானது தாரைவார்த்தல் சடங்காகும். ‘தாரை’ என்றால் நீர் என அர்த்தம். நீருக்குத் தீட்டில்லை. நீர் மந்திரநாத ஒலியின் அதிர்வை...
ஆவணியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சிம்மராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஆவணி மாதமாகும். இது தமிழ் மாதங்களில் ஐந்தாவது மாதம் ஆகும். ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும், வேங்கை மாதம் என்றும் சித்தர்கள்...
அன்னாபிஷேகம் செய்யும் முறை

அன்னாபிஷேகம் சிறப்புகள் மற்றும் பலன்கள்

அன்னாபிஷேகம் சிறப்புகள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.  இந்த ஆண்டு 07.11.2022 அன்று அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த உலகில் சகலத்தையும்...
prawn recipe

இறால் ப்ரைட் ரைஸ்

இறால் ப்ரைட் ரைஸ் தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ வடித்த சாதம்  - 2 கப் ( பாஸ்மதி அரிசி ) வெங்காயம் – சிறிதளவு  ( மெல்லிதாக நறுக்கியது ) ...
தனுசு ராசி குணநலன்கள்

தனுசு ராசி பொது பலன்கள் – தனுசு ராசி குணங்கள்

தனுசு ராசி குணங்கள் தனுசு ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். தனுசு ராசியில் மூலம், மற்றும் பூராடம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், உத்திராடம் நட்சத்திரத்தின் 1-ம் பாதமும் இதில் அடங்கியுள்ளன. இந்த ராசி...
அழகான பாதங்கள்

உங்கள் பாதங்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள சில டிப்ஸ்.

பாதங்கள் நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கு கொடுப்பதில்லை. முகத்தின் அழகு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பாதங்களின் அழகும் முக்கியம் தான். ஆனால் பெண்கள் தங்கள் முகம், தலைமுடி,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.