மாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

மாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

சூரியன் கும்பராசியில் சஞ்சரிக்கும் காலம் மாசி மாதமாகும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தியாக மனபான்மை உள்ளவர்கள். குடும்பத்திலும், சொந்த பந்தங்களிடத்திலும் சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்வார்கள். காரியங்களை திட்டம் போட்டு செயல்படுத்துவதில் வல்லவர்கள். மற்றவர்களால் எளிதில் செய்ய முடியாத காரியங்களை சாதுர்யமாக முடித்து காட்டுவார்கள்.

மாசி மாதம் பிறந்தவர்களின் குணநலன்கள்

இவர்கள் கௌரவம் பார்க்க வேண்டிய இடங்களில் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள். மற்றவர்களின் எண்ண ஓட்டங்களை அவர்களின் முகத்தை வைத்தே அறிந்து கொள்வார்கள். இவர்கள் சூழ்நிலைக் ஏற்றார்போல நடந்து கொள்வார்கள். கலை ஆர்வமும், சாஸ்திர சம்பிரதாயங்களில் அதிக ஈடுபாடும் உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் மனஉறுதியும், தெளிவான பார்வையும் கொண்டவர்களாதலால் இயற்கையாகவே மனதை ஒருநிலைப்படுத்தும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும்.

இவர்கள் தனக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும்தான் நெருங்கி பழகுவர். இவர்களுக்கு நெருக்கமானவர்கள் எதை சொன்னாலும், செய்தாலும் தாங்கிக் கொள்வர். குடும்ப விவகாரங்களில் இவர்களுக்கு ஒரு பிடிப்பு இருக்காது. விரக்தியான மனோபாவமும், தியாக உணர்ச்சியும் இவர்களுடைய இயற்கையான சுபாவங்களாகும்.

இவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உயர்ந்த அந்தஸ்து, சேவை, தலைமை பொறுப்பு வகிக்கக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் அதை வேண்டாம் என  புறக்கணித்து அதிலிருந்து வெளியேறுவார்கள். சொல் ஒன்று, செயல் ஒன்று என்பது இவர்களிடம் அறவே இருக்காது. இவர்களை நம்பி எந்தக் காரியத்திலும் ஈடுபடலாம். இவருடைய திட்டங்களுக்கும், செயல்களுக்கும் தடை விதிக்க எவராலும் இயலாது. இவர்களிடம் யாராவது உண்மையை மறைத்தால் அதை அறிந்துகொள்ளும் வல்லமை உடையவர்கள். குறிக்கோளுடன் செயல்படுவதில் வல்லவர்கள்.

இவர்கள் பிறந்தவர்கள் முன்கோபக்காரர்கள். இவர்களிடம் மன உறுதி அதிகம் இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்தும் ஆற்றல் இவர்களிடம் உண்டு. சிலசமயம் மனதில் சந்தேக எண்ணங்கள், சஞ்சலங்கள் உருவானாலும் அதிலிருந்து விடுபட்டு தைரியமாக காரியத்தை சாதித்து கொள்வார்கள்.

எந்த வேலை செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை அறிந்து திட்டமிட்டு காரியத்தை செய்யக்கூடியவர்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் காதல் திருமணம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள். புகுந்த வீட்டில் இவர்கள் செல்வசெழிப்புடன் வாழ்வார்கள். இவர்கள் அனைவருடனும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர்கள். எனவே ஏராளமான நண்பர்கள், மற்றும் உறவினர்களை பெற்றிருப்பார்கள். கள்ளம் கபடம் இல்லாமல் வெளிப்படையாக எல்லாவற்றையும் பேசிவிடுவதால் இவர்களிடம் எதிர்மறையான எண்ணங்கள் இருக்காது.

இவர்களுக்கு பெரிய பதவிகள், தலைமைப் பொறுப்புகள் தானாக வந்தடையும். சுக்கிரன் இவர்களுக்கு யோகமாக அமைந்துவிட்டால் லட்சுமி யோகம் உண்டு. புதனும், செவ்வாயும் சாதகமாக இருக்க பிறந்தவர்களை பாக்கியசாலிகள் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு சுகபோக பாக்கியங்கள் கிடைக்கும். பணப்புழக்கம் எப்பொழுதும் இவர்களிடம் இருந்துகொண்டே இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளிடம் புத்திசாலித்தனமும், ஆரோக்கியமும் உண்டு. கல்வியில் ஆர்வம் இருக்கும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பெருமாளையும், காளியையும் வணங்கி வந்தால் இவர்களுக்கு இன்னல்கள் ஏற்படாது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மேஷ ராசி பொதுவான குணங்கள்

மேஷ ராசி பொது பலன்கள் – மேஷ ராசி குணங்கள்

மேஷ ராசி குணங்கள் மேஷ ராசி யில் அசுவினி, பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம் ஆகியவை இடம் பெறுகின்றன.  மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவானவார். இந்த நட்சத்திர மண்டலத்தை தொலைநோக்கி...

திருமண தடை நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

திருமண தடை  நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இரு மணங்கள் இணையும் வைபவமே திருமணமாகும். அந்த திருமணம் சரியான காலத்திலும் சரியான வயதிலும் நடைபெறுவது முக்கியமானதாகும்.  சிலரது ஜாதகத்தில் இருக்கும்...
நீலக்கல்

எந்த ராசிக்கு எந்த ராசிக்கல் அணிந்தால் அதிஷ்டம் உண்டாகும்

இராசிக்கல் அணிவதால் உண்டாகும் பலன்கள் ஒவ்வொரு ராசியினருக்கும் - ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான  ராசிக்கல்  நாம் அணிய வேண்டும். நம் கைவிரல்களில்  அணியும் ராசிக்கல் மோதிரமானது, நமக்கு கூடுதல் பலம் தந்து  நமக்கு...
இறால் கிரேவி செய்முறை

இறால் கிரேவி செய்வது எப்படி

இறால் கிரேவி செய்வது எப்படி இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. ஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், இந்த கடல் உணவை தாரளமாக சாப்பிடலாம்....
செம்பருத்திப் பூ டீ

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை டீ வகைகள்

ஆரோக்கியமான  மூலிகை டீ வகைகள் தண்ணீருக்கு பிறகு நாம் அதிக அளவில் குடிக்க கூடிய பானம் என்ன என்றால் அது டீ தான். டீ குடிக்காமல் அன்றைய நாளே முழுமை பெறாது என்று நினைப்பவர்களும்...
தனுசு ராசி குணநலன்கள்

தனுசு ராசி பொது பலன்கள் – தனுசு ராசி குணங்கள்

தனுசு ராசி குணங்கள் தனுசு ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். தனுசு ராசியில் மூலம், மற்றும் பூராடம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், உத்திராடம் நட்சத்திரத்தின் 1-ம் பாதமும் இதில் அடங்கியுள்ளன. இந்த ராசி...

கடக ராசி பொது பலன்கள் – கடக ராசி குணங்கள்

கடக ராசி குணங்கள் கடக ராசியின் அதிபதி சந்திர பகவானாவார். கடக ராசியில் புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களின் அனைத்து பாதங்களும் அடங்கியுள்ளன. 12 ராசிகளில் இது 2வது சர...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.