மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன?

பெண்ணின் ஜாதகத்தில் உள்ள சில கிரகங்களின் சேர்க்கை, கோச்சாரநிலை, தசா புத்திகள் போன்ற காரணங்களால் திருமணம் நடைபெறுவது தாமதமாகும் அல்லது அந்த பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்காமல் தடையாக இருக்கும் கிரக அமைப்புகளைத்தான் மாங்கல்ய தோஷம் என்கிறார்கள். மாங்கல்ய தோஷமானது, பெண்ணின் ஜாதகத்தில் மட்டுமே இருக்கும்.

மாங்கல்ய தோஷம் பரிகாரம்

மாங்கல்ய தோஷம் இருப்பதை எவ்வாறு அறிவது?

பெண்ணின் ஜாதகத்தில் உள்ள லக்னத்தில் இருந்து 8-ஆம் இடம் தான், மாங்கல்ய ஸ்தானமாகும். இந்த 8-ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருப்பது நல்லதல்ல.

8-ஆம் இடத்தில் மேற்சொன்ன ஐந்து கிரகங்கள் இருந்து, அந்த இடம், அந்த கிரகங்களின் சொந்த வீடாக, உச்சம் பெற்று இருந்தால் மாங்கல்ய தோஷம் குறையும். அந்த இடத்தில் குரு, சுக்கிரன் போன்ற சுபர்கள் பார்வை இருந்தால், மாங்கல்ய தோஷம் விலகும்.

மாங்கல்ய தோஷம் எதனால் ஏற்படுகிறது?

முற்பிறவியில் நாம் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையிலேயே, இந்தப் பிறவியில் நமது பிறப்பு மற்றும் ஜாதகக் கட்டங்கள் அமைகின்றன. முற்பிறவியில் நாம் செய்த பெரும் தவறுகளாலும் மற்றும் பெரியோர்களை மதிக்காமல் நடந்திருந்தாலும் மாங்கல்ய தோஷம் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கன்னிப் பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் கழிக்கும் முறை

ஒரு புதிய தாலியை தங்கத்தில் வாங்கி அவர்களது குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தின் பாதத்தில் அந்த தாலியை வைத்து பூஜை செய்து ஒரு மஞ்சள் கயிற்றில் கோர்த்து கொள்ள வேண்டும். கோவிலிலோ அல்லது வீட்டிலோ அவர்களது இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து வழிபட்டு ஒரு சுமங்கலிப் பெண் இந்த பூஜை செய்த தாலியை திருமணம் தடைபட்டு வருகின்ற கன்னி பெண்ணிற்கு கட்ட வேண்டும்.

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

2 மணி நேரம் கழித்து தாலி கட்டப்பட்ட அந்த கன்னிப் பெண்ணின் தாலியை முன்பு தாலி கட்டிய அதே சுமங்கலிப் பெண்ணின் கையால் அந்த தாலியை அவிழ்த்து விட வேண்டும். அதன் பிறகு அந்த கன்னிப் பெண் குளிக்க வேண்டும்.

மேலும் தோஷம் கழிக்கும் போது அணிந்திருந்த இருந்த ஆடைகளை மீண்டும் அணியக் கூடாது. அதன் பிறகு அந்த கன்னிப் பெண் கழுத்தில் கட்டிய மாங்கல்யத்தை குலதெய்வம் (பெண் கடவுளுக்கு) அல்லது தங்களுக்கு இஷ்டமான பெண்கடவுளுக்கு சீர் வரிசைகளான மஞ்சள், குங்குமம், வளையல், புடவை, பழங்கள், வெற்றிலை பாக்கு, சந்தனம், இனிப்பு ஆகிய ஒன்பது மங்கள பொருட்களுடன் அந்த தாலியையும் வைத்து இஷ்ட தெய்வத்திற்கு காணிக்கை செய்ய வேண்டும்.

அவ்வாறு சீர்வரிசை செய்ய முடியாமல் போனால் அதற்கு பதில் அந்த தாலியை கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி விடலாம். இந்த தோஷம் கழிக்கும் நாளானது செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் செய்ய கூடாது. இவ்வாறு மாங்கல்ய தோஷம் கழித்து விட்டால் திருமணம் ஆகாத பெண்ணுக்கு திருமணமானது விரைவில் நடைபெறும். இது மாங்கல்ய தோஷம் கழிக்கும் பொதுவான முறை ஆகும். அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப மாங்கல்ய தோஷத்தை நிவர்த்தி செய்ய தகுந்த ஜோதிடரை அணுகவும்.

மாங்கல்ய தோஷ பரிகாரம்

வன்னி மர விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளன்று மனமுருகி வழிபட்டு அன்றைய தினம் ஒன்பது கன்னி பெண்களுக்கு வஸ்திரதானம் எனப்படும் ஆடை தானம் செய்தால் மாங்கல்ய தோஷம் விலகும்.

திருமணதிற்கு பிறகு மாங்கல்ய தோஷம்

திருமணத்திற்கு பிறகு கட்டிய மாங்கல்யத்துக்கு ஆபத்து வருமோ என்று பயப்படும் பெண்கள் செவ்வாய்க்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் பைரவருக்கு சந்தனக் காப்பு செய்து, விரலி மஞ்சள் மாலை சூட்டி, மஞ்சள் கயிறு வைத்து, சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம், பானகம், நிவேதனம் செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு, மஞ்சள் குங்குமம் கொடுத்து, பைரவரை வழிபட்டு வர வேண்டும். இவ்வாறு செய்து வர மாங்கல்ய தோஷம் பற்றிய பயம் விலகும்.

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

மேலும் எந்த கிரகத்தினால் மாங்கல்ய தோஷம் ஏற்பட்டு உள்ளதோ அந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்து வழிபட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும். அதே போல ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சையில், நெய் விளக்கேற்றி வழிபாடு செய்து வரலாம். அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவிக்கலாம். எலுமிச்சை சாதம் படைத்து வழிபாடு செய்யலாம்.

மாங்கல்ய தோஷம் நீங்க செல்ல வேண்டிய கோவில்கள்

தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்குடியில் எழுந்தருளியுள்ள மங்களநாதரை சென்று வணங்கினால் மாங்கல்ய தோஷத்தின் கடுமை குறையும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

நவராத்திரி வழிபாடு

நவராத்திரி வழிபாடும் அதன் சிறப்புகளும் 

நவராத்திரி வழிபாடும் அதன் சிறப்புகளும் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் வரும் மாகாளய அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியிலிருந்து நவமி திதி வரை வரக்கூடிய 9 நாட்களை தான் நாம் நவராத்திரி என்று அழைக்கிறோம். நாளை...
புரட்டாசியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள் புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவு மற்றும் திறமையுடன் ஞான மிக்கவராக இருப்பார்கள். இவர்கள் எளிதில் எவற்றையும் கற்கும் திறமை கொண்டவர்கள். சாமர்த்தியமாக பேசுவதில் வல்லவர்கள். இம்மாதத்தில் பிறந்தவர்கள்...
பால் பணியாரம் செய்வது எப்படி

செட்டிநாடு பால் பணியாரம்

செட்டிநாடு பால் பணியாரம் தேவையான பொருட்கள்  பச்சரிசி - 1 கப் உளுந்து - 1 கப் தேங்காய் துருவல் – 2 கப் ஏலக்காய் - தேவையான அளவு சர்க்கரை – 1...
சுப யோகங்கள்

உங்கள் ஜாதகத்தில் இந்த யோகங்கள் உள்ளதா? யோகங்கள் பகுதி #2

யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் ஒன்றினைவதால் ஏற்படும் யோக பலன்களை குறிக்கும். அவ்வாறான சில கிரக சேர்க்கைகள் நல்ல பலனையும் தரலாம், அல்லது தீய பலனையும்...
தார தோஷம் நீங்க

தார தோஷம் என்றால் என்ன? தார தோஷத்திற்கான பரிகாரம்

தார தோஷம் என்றால் என்ன? தாரம் என்றால் வாழ்க்கை துணையை குறிக்கும். அதாவது மனைவியையோ அல்லது கணவனையோ குறிப்பது ஆகும். ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2வது ஸ்தானத்திலோ அல்லது 7வது ஸ்தானமான கணவன்...
கம்பு குழி பணியாரம் செய்முறை

இனிப்பு கம்பு குழி பணியாரம்

இனிப்பு கம்பு குழி பணியாரம் செய்வது எப்படி  கம்பு சத்து மிகுந்ததும், ஆரோக்கியத்தை அள்ளித் தரும் தானியமாகும்.  கம்பினை அடிக்கடி நம் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லதாகும். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க...
புத்திர தோஷம்

புத்திர தோஷம் என்றால் என்ன? புத்திர தோஷம் நீக்கும் பரிகாரங்கள்

புத்திர தோஷம் என்றால் என்ன நமக்கு ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நாம் முற்பிறவியில் செய்த கர்மவினைகளை பொறுத்தே அமைகிறது. முற்பிறவியில் பெற்றோர்களை மதிக்காமல் கொடுமைபடுத்தியிருந்தால், அவர்கள் கொடுத்த சாபத்தால் இந்த ஜென்மத்தில் புத்திர தோஷம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.