நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

நோய் எதிர்ப்பு சக்தி

அனைத்து வசதி வாய்ப்புகள் இருந்தாலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் முழு மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். அதனால்தான் ‘ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ‘ என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவினால் பலவிதமான தொற்று நோய்கள் ஏற்படுகிறது. உடலை பாதிக்கக்கூடிய கிருமிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள நம் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிக அளவில் இருக்க வேண்டியது அவசியமாகும். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் தான் எப்படிப்பட்ட நோய் தாக்கம் ஏற்பட்டாலும் அதில் இருந்து நாம் மீள முடியும்.

நோய் எதிர்ப்பு குறைவாக இருப்பவர்களுக்கு நோய் தாக்கம் அதிக அளவில் காணப்படும். சிறிய அளவிலான நோயினையும் அவர்களால் எதிர்கொள்ள முடியாது. எப்போதும் உடல் சோர்வாக இருப்பது போலவே உணர்வார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய சில உணவுகளை பார்க்கலாம்.

மஞ்சள் மஞ்சள்

மஞ்சள் இயற்கையான ஆன்டிபயாட்டிக் என்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிக அளவில் உள்ளது. மஞ்சளை நம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதின் மூலம் கிருமிகள் தொற்று ஏற்படுவது தடுக்கப் படுகிறது. இரத்தத்தைச் சுத்தகரிக்க உதவுகிறது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

பூண்டின் பயன்கள் பூண்டு

தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்கும் தன்மை பூண்டுக்கு உள்ளது. இது உடலுக்குக் கெடுதல் செய்யும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் கொண்டதால் தினசரி உணவில் பூண்டை சேர்த்துக்கொள்வது நல்லது. வாயுத் தொல்லையை சரி செய்வதில் பூண்டுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. தாய்பாலை அதிகரிக்க செய்யும், சளியை கரைத்து, சுவாச தடையை நீக்கும். ஜீரண சக்தியை மேம்படுத்தும். ரத்த கொதிப்பை தணிக்கும், உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.

வெங்காயத்தின் நன்மைகள்வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள செலினியம் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் தன்மையுடையது. இதில் உள்ள ‘அலிலின்’ என்னும் வேதிப்பொருள் உடலில் பாக்டீரியா, நச்சு போன்றவை சேராமல் தடுக்கின்றன. ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும். வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும். மூல நோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங்காயம் சேர்ப்பது நல்லது.

காய்கறிகள்காய்கறிகள்

காய்கறிகளில் தான் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாஷியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் அடங்கியுள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ள கேரட், பீன்ஸ் மற்றும் பச்சைக் காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்களை நம்முடைய தினசரி உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும். இதனால் நமது உடம்பில் நோயெதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கிறது. நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதால் இதயம் பலப்படும். சர்க்கரை நோய் பாதிப்பு குறையும்.

பழங்கள்பழங்கள்

பழங்கள் உணவாகவும் மருந்தாகவும் செயல்பட்டு, நிறைவான ஊட்டச்சத்துக்களையும் நமக்கு அள்ளித்தருகின்றன. பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமானக் குறைபாடு மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் நம் உடலுக்குள் வருவது தடுக்கப்படுகிறது.

தயிர்தயிர்

தயிரானது நமது உடம்பில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, செரிமான மண்டலத்தின் செயல் திறனை மேம்படுத்துகிறது. எனவே அன்றாடம் சாப்பிடும் உணவில் தயிரை சேர்த்துக் கொண்டு வந்தால், தொற்று நோய்களின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. தயிர் உடலுக்கு மட்டுமல்லாமல் முடி வளர்ச்சிக்கும் பயன்படுகிறது.

கிரீன் டீ செய்முறைகிரீன் டீ

கிரீன் டீயில், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டியாக்ஸிடன்டுகள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே தினமும் கிரீன் டீயை குடித்து வந்தால், காய்ச்சல், சளி போன்ற தொற்று நோய்கள் வராமல் ஆரோக்கியமாக இருக்கலாம். கிரீன் டீ கொலஸ்ட்ராலை குறைத்து இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

வரகு நெல்லிக்காய் சாதம்

வரகு நெல்லிக்காய் சாதம்

வரகு நெல்லிக்காய் சாதம் வரகரிசியில் மாவுச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து மிகுதியாகவும் உள்ளது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் உண்டாவதில்லை. நார்ச்சத்தும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கும் குறைக்கிறது. உடல் எடை குறையவும் அதிலும் ஆரோக்கியமான...
திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்

திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்? பொன்னுருக்குதல் என்றால் என்ன?

திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்? திருமணத்தின் போது ஐயர் மாப்பிள்ளை கையில் காப்பு கட்டுவதை பார்த்திருப்போம். அதே போல மாப்பிள்ளை, மணப்பெண் கையில் காப்பு கட்டுவதை பார்த்திருப்போம். எதற்காக இதை செய்கிறார்கள் என பலருக்கும்...
கரிநாள் பரிகாரம்

கரிநாட்கள் என்றால் என்ன? கரிநாளில் சுபகாரியம் செய்வதை ஏன் தவிர்க்க வேண்டும்

கரிநாட்கள் என்றால் என்ன நமது கலெண்டர்களில் சில குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் கரிநாள் என்று குறிபிடபட்டிருக்கும். அப்படி கரிநாட்கள் என குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சூரிய கதிர் வீச்சின் தாக்கம் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் சற்று...

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகள்

கண்களை பாதுகாக்கும் உணவுகள்  ஒருவரின் கண்களை பார்த்தே அவர்களின் உடல் ஆரோக்கியத்தை நாம் கணித்து விடலாம். மனித உடலில் இருக்கும் அனைத்து பாகங்களுமே மிக முக்கியமானதுதான். அதில் எந்த ஒரு உறுப்பு பழுதடைந்தாலும் முதலில்...
இஞ்சி துவையல் செய்வது எப்படி

இஞ்சி துவையல் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

இஞ்சி துவையல் இஞ்சி துவையல் ஜீரண சக்தியை தூண்டுகிறது. கொழுப்புச்சத்தைக் குறைத்து, நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி...
சாத்துக்குடி பழம் மருத்துவ நன்மைகள்

மருத்துவ குணங்கள் நிறைந்த சாத்துக்குடி பழம்

சாத்துக்குடி பழம் சாத்துக்குடி பழம் சிட்ரஸ் வகை பழங்களில் ஒன்றாகும். தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில், சாத்துக்குடி தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் மத்திய தரைக்கடல் பகுதியின் பிராந்தியங்களில் சாத்துக்குடி வளர்க்கப்பட்டது. இது மெக்ஸிகோ...
brain games in tamil

Puthirgal with Answers | Vidukathaigal | Brain games

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்களும் விடைகளும் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.