சரும அழகை பராமரிக்க சில எளிய அழகு குறிப்புகள்

சரும அழகை பராமரிக்க சில எளிய அழகு குறிப்புகள்

சரும அழகை மேம்படுத்த நாம் செய்யும் சில விஷயங்கள் சருமத்திற்கு அழகு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் சரும நோய்கள் ஏற்படாமலும் தடுக்கிறது.

 1. இரவில் தயிருடன் சிறிதளவு ரோஸ்வாட்டரை கலந்து முகத்தில் தடவி வரலாம். தடவிய பின் சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சரும துளைகளில் அடைந்திருக்கும் அழுக்குகளை நீக்கி சருமத்தை பளிச்சிட வைக்கும்.
 2. வெள்ளரிக்கையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் சேர்த்து  நைசாக அரைத்துக் கொள்ளவும். பின் அரைத்த விழுதை முகத்தில் தடவி விடவும். இரண்டு வெள்ளரிக்காய் துண்டுகளை எடுத்து கண்ணின் மேல் வைக்கவும்.
 3. முகம் பொலிவு பெற இவ்வாறு செய்வாதால் முகத்தில் உள்ள சோர்வு நீங்கி முகம் புத்துணர்ச்சி அடையும். கண்களின் மேல் வைப்பதால் கண் குளிர்ச்சி அடைந்து கண்களில் ஏற்படும் சோர்வினை நீக்கும். தூங்குவதற்கு முன்பு தினமும் இவ்வாறு செய்துவந்தால் காலையில் சோர்வு நீங்கி முகம் பொலிவுடன் காணப்படும். சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் இதை இரவு நேரத்தில் செய்யாமல் பகல் நேரத்தில் செய்வது சிறந்தது.
 4. வாழைப்பழத்தை நன்கு மசித்து அதில் பால் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம்.
 5. ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து அதை தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.
 6. கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால் முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் அழகாகவும் வெள்ளையாக மாறுவதை காணலாம்.
 7. முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையஇரவில் படுக்கும் போது சூரியகாந்தி விதையை பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதில் சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால் சருமம் வெண்மையான தோற்றத்தை பெரும்.
 8. கசகசாவை பாலில் சேர்த்து 15 நிமிடத்திற்கு ஊறவைக்கவும். பின் அதை மிக்சியில் சேர்த்து மைய அரைத்து அதை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் அழகான தோற்றத்தை பெறுவதுடன் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளிச்சிடும்.
 9. சிலரது முகம் எப்போதும் எண்ணெய் வடிந்தது போல் பொலிவு இல்லாமல் இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை நன்கு அரைத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு பூசவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச்சென்று மாறிவிடும்.
 10. தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். மேலும் இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.
 11. சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி  சருமம் பொலிவோடு காணப்படும்.
 12. தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகத்தில் உள்ள தழும்புகள் கருமை நீங்கி முகம் பளிச்சென்று வெள்ளையாகும்.
 13. சரும ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்த மேற்கூறிய அழகு குறிப்புகளை செய்வதோடு தினசரி நாம் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும். அடிக்கடி தண்ணீரை குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
 14. தண்ணீர் அதிகம் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவோடு காணப்படும். தண்ணீர் குடிப்பதோடு நல்ல தூக்கமும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
 15. இரவில் அதிக நேரம் விழித்து இருக்காமல் நேரத்தோடு தூங்குவது மிகவும் முக்கியம் ஆகும். நல்ல தூக்கம் இருந்தால் கண்களின் கீழ் உண்டாகும் கருவளையங்கள் ஏற்படமால் தவிர்க்கலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

இறால் முட்டை மசாலா

பட்டர் இறால் முட்டை மசாலா

பட்டர் இறால் முட்டை மசாலா தேவையான பொருட்கள் பட்டர் - 1 கப் இறால் – ½ கிலோ முட்டை – 4 ( வேக வைத்தது ) வெங்காயம் -  2 (...
ஜோதிடத்தில் யோகங்கள்

யோகங்கள் என்றால் என்ன? பலவகையான ஜாதக யோகங்கள்

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது அதற்கு எதிரான கெடு...
ஜாதகத்தில் உள்ள யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #11

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது நாம் செய்த கர்ம வினைகளின் அடிப்படையில் நாம் அனுபவிக்கும் இன்பமாகும். இதை தான் நம் முன்னோர்கள் 'திணை விதைத்தவன் திணையை அறுவடை செய்வான்" என்று சொன்னார்கள். செய்த வினையை...
விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் விருச்சிக லக்னத்தின் அதிபதி செவ்வாய் பகவனாவார். விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் கல்வி கேள்விகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர்களாய் இருப்பார்கள். இவர்கள் சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். முன் கோபம்...

மார்கழியில் சுபகாரியங்கள் ஏன் செய்வது இல்லை

மார்கழியில் சுபகாரியங்கள் மார்கழி மாதம் என்றால் நமது நினைவுக்கு முதன் முதலில் வருவது ஒவ்வொரு வீட்டின் முகப்பிலும் போடப்பட்டிருக்கும் வண்ணமயமான அழகிய கோலங்கள் தான். மார்கழி மாதத்தின் பெருமையை ஆண்டாள், "மார்கழித் திங்கள் மதிநிறைந்த...
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் அஸ்தம் நட்சத்திரத்தின் இராசி : கன்னி அஸ்தம் நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன் அஸ்தம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : புதன் அஸ்தம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : ஆதித்யன் அஸ்தம் நட்சத்திரத்தின் பரிகார...
how to make aval payasam in tamil

அவல் பாயாசம் செய்வது எப்படி ?

அவல் பாயாசம் தேவையான பொருட்கள் அவல் – 1 கப் வெல்லம் – ½ கப் பால் - 2 கப் ஏலக்காய் தூள்  - சிறிதளவு முந்திரிப்பருப்பு – தேவையான அளவு நெய்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.