கிரீன் டீ குடிப்பது நல்லதா கெட்டதா ?

கிரீன் டீ

பெரும்பாலான மக்களால் விரும்பி சாப்பிடப்படும் தேநீராக கிரீன் டீ மாறியுள்ளது. பலரும் பால், காபி ,டீ குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ யை விரும்பி குடிக்கின்றனர். இதற்க்கு முக்கிய காரணம் கிரீன் டீ குடித்தால் விரைவில் எடை குறைப்பு உண்டாகும் என்ற நம்பிக்கை தான்.

கிரீன் டீ செய்முறை கிரீன் டீ எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், சருமம் , தலைமுடி ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் சருமத்தையும் தலை முடியையும் மேம்படுத்த உதவுகிறது.

கிரீன் டீ உடலுக்கு நல்லது என்பதால் பலரும் இதை அடிக்கடி குடிக்கிறார்கள் அது முற்றிலும் தவறு. கிரீன் டீ எப்போது குடிக்க வேண்டும் கிரீன் டீ குடிப்பதால் உண்டாகும் நன்மை தீமைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

கிரீன் டீயை வெறும் வயிற்றிலும், உணவு சாப்பிட்டவுடனும், தூங்க செல்லும் முன்னும் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த 3 வேளைகளிலும் குடித்தால் உடலுக்கு எண்ணற்ற பாதிப்புகள் உண்டாகும்.

கிரீன் டீ செய்முறைகிரீன் டீ குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

  1. கிரீன் டீயானது உடல் எடையை குறைக்கவும், சரியான அளவிலான உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது. மூச்சு சம்மந்தமான  பிரச்சனைகளும் கிரீன் டீயால் சரியாகின்றன.
  2. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுப்பதுடன், இதயம் சம்மந்தமான் நோய்கள் வராமலும் பாதுக்காக்கிறது.
  3. கிரீன் டீயைத் தினமும் இரு வேளைகள் பருகிவருவதால் பல் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பலம் கிடைக்கும்.
  4. உடல் எடையைக் குறைப்பதில் கிரீன் டீ முக்கியப் பங்காற்றுகிறது. கிரீன் டீ பருகுவதால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்புகள் கரையும்.
  5. கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
  6. பெருங்குடல் பகுதியில் வரும் புற்றுநோயைத் தடுக்கும்.
  7. கிரீன் டீ, சருமப் பராமரிப்புக்குக் காரணமான மெலனின் உற்பத்தியைத் தூண்டி சருமத்தை பாதுகாக்கிறது.
  8. ரத்தத்தில் குளுக்கோஸ் கலக்கும் வேகத்தை கிரீன் டீ கட்டுப்படுத்தும்.
  9. கிரீன் டீயில் தயமின் எனும் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிகம் உள்ளதால் தொடர்ந்து  கிரீன் டீ அருந்தும்போது  இதய ரத்தக் குழாய்களில் சேரும் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.
  10. கிரீன் டீ தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, மறதி நோயான அல்சைமர், மூளையில் டோபோமைன் சரியாகச் சுரக்காததால் வரும் பார்கின்சன் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 25 சதவிகிதம் குறைகிறது.

கிரீன் டீ குடிப்பதால் உண்டாகும் தீமைகள் கிரீன் டீ குடிப்பதால் உண்டாகும் தீமைகள்

  1. கிரீன் டீ அதிகம் குடிப்பதால் தலைவலி, சோம்பல் மற்றும் சோர்வு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும் அதிகப்படியான சிறுநீர் கழிப்பது நீரிழப்பு மற்றும் எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும்.
  2. நீண்ட காலம் தொடர்ந்து க்ரீன் டீ குடிப்பது இதய நோயாளிகளுக்கு நல்லதல்ல.
  3. இரத்த சோகை உள்ளவர்கள் க்ரீன் டீ குடிக்க கூடாது. முக்கியமாக வெறும் வயிற்றில் கண்டிப்பாக குடிக்கக்கூடாது.
  4. மாதவிடாய் காலத்தில் கிரீன் டீ சில பெண்களுக்கு அலர்ஜியை  ஏற்படுத்தும். எனவே அந்த மாதிரியான சமயங்களில் கிரீன் டீயை தவிர்ப்பது நல்லது.
  5. அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ், வைரஸ் காய்ச்சல், அல்சர், வைரஸ் தொற்று நோய்கள் உள்ளவர்கள் கிரீன் டீ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  6. கிரீன் டீயை வெறும் வயிற்றில் குடிப்பது பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பெண் தலை மச்ச பலன்கள்

பெண் தலை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

பெண் தலை மற்றும் புருவ மச்ச பலன்கள் பெண்ணின் தலையில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பேராசை, மற்றும் பொறாமை குணம் இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது. பெண்ணின் புருவங்களில் மச்சம் இருந்தால் அவர்கள்...

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகள்

கண்களை பாதுகாக்கும் உணவுகள்  ஒருவரின் கண்களை பார்த்தே அவர்களின் உடல் ஆரோக்கியத்தை நாம் கணித்து விடலாம். மனித உடலில் இருக்கும் அனைத்து பாகங்களுமே மிக முக்கியமானதுதான். அதில் எந்த ஒரு உறுப்பு பழுதடைந்தாலும் முதலில்...
Brain Games

Brain Teasers with Answers | Tamil Puzzles with Answers | Tamil Puthirgal

மூளைக்கு வேலை கொடுக்கும் வினா விடைகள்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
pudhirgal

Puzzles with Answers | Vidukathaigal with answers

மூளைக்கு வேலை தரும் வினா விடைகள்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
வல்லாரை கீரை நன்மைகள்

வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள்

வல்லாரை கீரை வல்லாரை கீரை என்பது ஒரு பல்வேறு மருத்துவ மூலிகைப் பயன்பாட்டுடைய கீரை வகைத் தாவரமாகும். இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தன்மை கொண்டது. இதன் இலைகளை உணவாகப் பயன்படுத்துவதால்...
யோகங்களின் வகைகள்

ஜாதக யோகங்கள் எவை? யோகங்கள் பகுதி # 3

ஜாதக யோகங்கள் யோகங்கள் என்பது நமது ஜாதகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைந்து இருப்பதால் ஏற்படும் ஏற்படும் யோக பலன்களை குறிக்கும். இந்த கிரக இணைப்புகள் அமைந்துள்ள இடத்தை பொருத்து நற்பலன்...
அன்னாசி பழத்தின் பயன்கள்

அன்னாசி பழம் மருத்துவ பயன்கள் | அன்னாசி பழம் நன்மைகள்

அன்னாசி பழம் அன்னாசி பழம் பிரேசில் மற்றும் ஆகிய இடங்களைத் தாயகமாக கொண்டது. இதன் அறிவியல் பெயர் `அனாஸ் சாட்டிவிஸ் ஸ்கல்ட்’ (Annas sativis schult) என்பதாகும். இது பிரமிலசே இனத்தைச் சேர்ந்த ஒரு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.