நரை முடி கருமையாக வளர சில டிப்ஸ்

நரை முடி கருமையாக வளர சில டிப்ஸ்

நரை முடி கருமையாக வளர சில டிப்ஸ்நமது வாழ்வியல் மாற்றங்களும் முடி நரைப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. முடி நரைப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடும் ஒரு முக்கிய காரணமாகும்.

உணவு பழக்க வழக்கத்தில் சில மாற்றங்களை கொண்டுவருவதின் மூலமும் நரை முடியை சரி செய்யலாம். விட்டமின் பி காம்ப்ளெக்ஸ் நிரந்த உணவுகள் , பழங்கள் , கீரைகள் சாப்பிடுவதின் மூலமும் நரை முடி வருவதை தடுக்கலாம்.

நரை முடி வராமல் தடுக்க நரை முடியை சரி செய்ய சில குறிப்புகள்

  1. சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் இளநரை மாறும். அதேபோல், முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.
  2. நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம்.
  3. கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.
  4. கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயப் பொடி, இஞ்சி, தேன் ஆகியவற்றை தினமும் ஒவ்வொன்றாக உணவில் சேர்த்து வரலாம்.
  5. சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் இளநரை மாறும். அதேபோல், முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.
  6. ஷாம்பூவை பயன்படுத்தாமல் சிகைக்காயை பயன்படுத்துவது மிகவும் சிறந்ததாகும். இதில் உள்ள இயற்கை பொருட்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை பாதுகாத்து நரைமுடி வராமல் தடுக்கிறது.
  7. மருதாணி இலை,வேப்பங்கொழுந்து, நெல்லிக்காய் மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து வைத்துக் கொள்ளவும். இரவு நேரத்தில் முடியின் வேர்கால்களில் படும்படி நன்கு தேய்த்து மறுநாள் காலையில் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நரை முடி மறைந்து நன்கு கரு கருவென மாறிவிடும்.
  8. நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.
  9. இஞ்சியை பால் சேர்த்து அரைத்து, அதை நரை முடி இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடங்கள் ஊற விட்டு சிகைக்காய் போட்டு தலைக்கு குளித்து வர நரை முடி நீங்கும்.
  10. மிளகை தூளாக்கி அதை தயிரில் கலந்து தலைக்கு தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவிட்டு, பின் சிகைக்காய் போட்டு குளித்தால் நரை முடி கருப்பாக மாறும்.
  11. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி கூந்தலின் வேர்களை வலுவாக்குகிறது. நெல்லிக்காயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதைக் கொதிக்க வைத்து, வாரத்திற்கு இருமுறை முடிகளில் தடவி வந்தால், நரைமுடிகள் மறைந்து விடும்.
  12. நாள்தோறும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாற்றினை பருகி வந்தால் கூந்தலுக்கு மிகவும் நல்லது.
  13. தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து முடிக்கு தடவி வந்தால் தலைமுடியில் சில மாற்றங்கள் ஏற்பட்டு நரை முடி கருமை நிறத்தில் மாறிவிடும்.
  14. அவுரிப் பொடி, மருதாணி இலையுடன் சேர்த்து அரைத்து தலையில் தடவி வந்தால் நாளடைவில் தலை முடி நன்கு கருமை நிறமாக மாறி விடும்.
  15. வாரத்தில் ஒருமுறை நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவில் எடுத்து லேசாக சூடு செய்து, தலை முடியில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து தலைமுடியின் வேர்ப்பகுதிகளில் கைகளால் மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து நன்றாக சிகைக்காய் கொண்டு தலைமுடியை அலசுங்கள்.
  16. இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நரைமுடி மறைந்து கருமையான தலை முடியை பெற முடியும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சோம்பு தண்ணீர் நன்மைகள்

தினமும் சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் சித்த மருத்துவத்தில் சோம்பு ஒரு சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. சோம்பை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குடித்து வந்தால் இரத்தில் இருக்கக்கூடிய அழுத்தத்தையும்,  இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த...
சிக்கன் சூப் செய்வது எப்படி

சிக்கன் சூப் எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி

சிக்கன் சூப் உடல் நலிவுற்றவர்கள் காய்கறிகள் மற்றும் சூப்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். சூப் குடிப்பதால் உடல் பலப்படும், பசியை தூண்டும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், இளைத்த உடலை தேற்றும்....
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் அஸ்வினி நட்சத்திரத்தின் இராசி : மேஷம். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி : கேது. அஸ்வினி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிதேவதை – சரஸ்வதி அஸ்வினி நட்சத்திரத்தின் பரிகார தெய்வம்...
பிரண்டை மருத்துவ பயன்கள்

பிரண்டை மருத்துவ குணங்கள்

பிரண்டை பிரண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் ஒரு தாவர வகையாகும். இது கொடி வகையைச் சேர்ந்த தாவரமாகும். இது பொதுவாக வெப்பம் அதிகமான இடங்களில் தானே வளரும் தன்மையுடையது. இது இந்தியா மற்றும் இலங்கை...
எந்த திசையில் தலை வைத்து படுக்கலாம்

வடக்கே தலை வைத்து படுக்கலாமா?

வடக்கே தலை வைத்து படுக்கலாமா? உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அனைவருக்கும் தூக்கம் அவசியமாகும். அத்தகைய தூக்கம் எளிதில் வரவேண்டுமென்றால், தூங்கும் அறை அமைதியாகவும், வெளிச்சமின்றியும் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். அதேபோன்று, தூங்கும் திசையையும் கவனத்தில்...
ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி

ஆட்டுக்கால் சூப் வைப்பது எப்படி

ஆட்டுக்கால் சூப் தேவையான பொருட்கள் ஆட்டுக்கால் - 4 தனியா தூள் – 2 ஸ்பூன் மிளகு தூள் - 2 ஸ்பூன் சீரகத் தூள் - 2 ஸ்பூன் மஞ்சள் தூள் –...
9ம் எண் குணநலன்கள்

9ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

9ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 9ம் எண்ணின் அதிபதி செவ்வாய் பகவனாவார். 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள் 9ம் எண்ணின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். எண் கணிதத்தில் அதிக வல்லமையும்,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.