உடல் எடையை குறைக்கும் ஒரு அருமையான டீ

உடல் எடையை குறைக்கும் ஒரு அருமையான டீ

உடல் எடை அதிகரிப்பு இன்று அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாக உருவாகியுள்ளது. உடல் எடை அதிகரிப்பால் உடல் சோர்வு, மந்த நிலை, இரத்த அழுத்த்தம், சர்க்கரை நோய் போன்ற பல நோய்கள் உருவாக உடல் எடை அதிகரிப்பும் ஒரு காரணமாக உள்ளது.

அதிகப்படியான உடல் எடையை ஒரு டீ குடிப்பதன் மூலம் நாம் கட்டுக்குள் கொண்டு வரலாம். நாம் தினசரி குறைந்தபட்சம் இரண்டு முறையாவது பால், டீ, காபி போன்றவற்றை குடிக்கிறோம். மற்ற டீ, காபி போன்றவற்றை தவிர்த்து இந்த டீயினை நாம் அன்றாடம் எடுத்துக் கொண்டால் உடல் எடையை சம அளவில் வைத்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

உடல் எடையை குறைக்கும் தேநீர்ஓமம் மற்றும் சீரக தேநீர் குடிப்பதின் பயன்கள்

  • சமையலில் சுவைக்காகவும், மனம் கிடைப்பதற்காகவும் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் தான் சீரகம் மற்றும் ஓமம். இவை  இரண்டும் நமது செரிமானத்திற்கு நன்னமை அளிக்கக் கூடியவை.
  • சீரகம் மற்றும் ஓமம் கொண்டு தயாரிக்கப்படும் டீயில் இருக்கும் தைமோல் என்னும் ரசாயனம் இரைப்பையின் சுரப்பிற்கு உதவுகிறது.
  • உடலில் நச்சுக்கள் உருவாவதை தடுக்கிறது. கெட்ட கொழுப்பு சேராமல் தடுக்கிறது. மேலும் உடல் எடையை குறைக்கவும் இவை உதவுகிறது.
  • அஜீரணம் மற்றும் வயிற்றுவலிக்கு சரியான தீர்வாக சீரகம் உள்ளது. உடலில் நோய் எதிர்பாற்றலை அதிகப்படுத்துவதுடன் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
  • சீரகத்தில் உள்ள இரும்பு சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து உடலில் இரத்தசோகை ஏற்படாமல் தடுக்கிறது.
  • சுவாசபாதையில் உள்ள நோய் கிருமிகளை அழித்து சளி மற்றும் இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க காரணமாக உள்ளது.
  • கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் செரிமானத்தை மேம்படுத்துவதுடன் பால் சுரப்பையும் அதிகரிக்கிறது.
  • பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சிறந்த வலி நிவாரணியாகவும் சீரகம் விளங்குகிறது.

ஓமம் மற்றும் சீராக தேநீர் தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்

சீரகம் – 1 ஸ்பூன்

ஓமம் – ½ ஸ்பூன்

தண்ணீர் – 1 டம்ளர்

செய்முறை

  • சீரகம் , ஓமம் இரண்டையும் தேவையான அளவு தண்ணீரில் முதல் நாள் இரவே போட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.
  • மறுநாள் காலையில் அந்த சீரகம் , ஓமம் சேர்த்து ஊற வைத்த தண்ணீரை சிறிது கொதிக்க வைக்கவும்.
  • பின்னர் வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் டீ, காபிக்கு பதிலாக குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உடல் எடை குறைய தொடங்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஜாதக யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #7

ஜாதக யோகங்கள் இந்த பூமியில் மனிதன் பிறக்கும்போது, அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கிரகங்கள் இருக்கும் நிலையை வைத்து நிர்ணயிக்கபடுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில் எந்த...
நெல்லிக்காய் துவையல் செய்வது எப்படி

பித்தத்தை தணிக்கும் நெல்லிக்காய் துவையல்

நெல்லிக்காய் துவையல் தேவையான பொருட்கள் பெரிய நெல்லிக்காய் – தேவையான அளவு தேங்காய் துருவல் - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. காய்ந்த மிளகாய் - 4 பெருங்காயத்தூள் – ¼...
மாவிலை தோரணம் கட்டும் முறை

சுப நிகழ்ச்சிகளில் மாவிலை தோரணம் பயன்படுத்துவது ஏன்?

மாவிலை தோரணம் வீட்டின் தலைவாசலை நாம் எப்போதும் மங்களகரமாகவும். அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மாவிலை தோரணம் என்பது  லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த ஒன்றாகும். வீட்டில் நடக்கும் எந்த...
எலும்பு முறிவு குணமாக

எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள்

எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள் எலும்பு முறிவு என்பது சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமில்லாமல் ஏற்படுகிறது. ஆய்வின்படி 10ல் 6 பேர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது எலும்புமுறிவு பாதிப்புக்கு...
8ம் எண் குணநலன்கள்

8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 8ம் எண் சனி பகவானுக்குரிய எண்ணாகும். 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 8ஆம் எண்ணின் அதிபதியாகிய சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவார்கள். 8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் எட்டாம் எண்...
how to make prawn 65 recipe

ஹோட்டல் ஸ்டைல் இறால் 65

இறால் 65 தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ சோளமாவு - 1 ஸ்பூன் மைதா மாவு - 1 ஸ்பூன் முட்டை – 1 தயிர் – 2 ஸ்பூன் இஞ்சி,...
ஆப்பிள் மருத்துவ பயன்கள்

ஆப்பிள் பழத்தின் மருத்துவ குணங்கள் | ஆப்பிள் பயன்கள் மற்றும் நன்மைகள்

ஆப்பிள் ஆப்பிள் அல்லது குமுளிப்பழம் குளிர்ப் பிரேதேசத்தில் வளரக்கூடிய பழமாகும். இது வருடத்திற்கு ஒரு முறை இலையுதிரும் ரோசாசிடே என்ற குடும்பத் தாவரமாகும். ஆப்பிள் பழத்தினுடைய தோல் பகுதியானது மெல்லியதாயும், பழச்சதை உறுதியானதாகவும் இருக்கும்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.