முதலுதவி பெட்டி யும் அதில் இருக்க வேண்டிய முதலுதவி பொருட்களும்

முதலுதவி பெட்டி

முதலுதவி செய்ய மிகவும் முக்கியம் முக்கிய பொருட்கள் நிறைந்த முதல் உதவிப் பெட்டி ஆகும். காயமடைந்தவருக்கு முதன்மையான உதவிகளை செய்வதற்காக சில அத்தியாவசிய மருத்துவப்பொருட்களை கொண்டுள்ள பெட்டியே முதலுதவிப்பெட்டி ஆகும். இது அவசியம் எல்லா இடங்களிலும் இருக்க வேண்டிய பெட்டியாகும்.

முதலுதவியின் பயன்கள்

முதலுதவிப்பெட்டியில் இருக்க வேண்டிய பொருட்கள்

1. மென்மையான துணி : இது காயத்தை தூய்மை செய்ய

2. துணிச்சுருள் : ரத்தக்கசிவு உள்ள இடத்தில் கட்டுபோட

3. கிருமிநாசினி : காயத்தினை சுத்தம் செய்ய

4. பான்டேஜ்

5. தீப்புணுக்கான கிரீம்

முதலுதவி பெட்டியில் இருக்க வேண்டிய மேலும் சில கருவிகளும் உபகரணங்களும்

1. கத்திரிக்கோல் : இது துணியை வெட்டவும் மற்ற பொதுத் தேவைக்குமானது.

2. சுத்தம் செய்யும் சாமான்கள்

3. தீமூட்டி, இது சாமான்கள் இடுக்கிகளையும் கிருமி நீக்கம் செய்யப் பயன்படுகின்றன.

4. ஆல்கஹால் அட்டைகள்: உபகரணத்தையோ அல்லது கிழிந்த தோலையோ கிருமி நீக்கம் செய்யப் பயன்படுகின்றன.

5. நீரூற்றிக் கழுவும் மருந்தேற்றுக் குழல் : இது கிருமி நீக்கம் செய்யப்பட்ட நீர், உப்புக் கரைசல் அல்லது நீர்த்த அயோடின் கரைசல் ஆகியவற்றைக் கொண்டு காயங்களைச் சுத்தப்படுத்த பயன்படுகிறது.

6. டார்ச்

7. உடனடியாக வினை புரியும் வேதியியல் குளிர்ப்பொருள். ரத்தக் கசிவுகளுக்கு தேவைப்படும்.

8. சேனிடைசர்

9. வெப்பநிலைமானி

10. பாதுகாப்புப் போர்வை

முதலுதவிப்பெட்டியில் உள்ள பொருட்களை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையேல் பாதிக்கப்பட்டவருக்கு தொற்று வியாதிகளை ஏற்படுத்தி முதல் உதவி செய்யப்படும் நோக்கத்தையே கெடுத்து விடும்.

முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டிய மருந்துகள்

குடும்பத்திற்கான முதலுதவிக் பெட்டியில் சில மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. பயன்பாட்டின் வகையின் அடிப்படையில் முதலுதவி கருவித் தொகுப்பில் சில முக்கியமான மருந்து வகைகள் இருக்கும். அவைகள் வருமாறு

உயிர்காக்கும் மருந்துகள்

1. ஆஸ்பிரின் : நெஞ்சுவலி மற்றும் மாரடைப்பிற்கு எதிரான தற்காலிக தீர்வு உள்ள மாத்திரையாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இது முதல் உதவிப் பெட்டியில் இருப்பது அவசியம்.

2. எப்பிநெப்பிரின்: இயக்குநீர் சுயமாகச் செலுத்திக்கொள்ளும் ஊசி
3. பாரசிட்டமால்: இது பொதுவான வலிநிவாரணி மருந்தாகும். இது மாத்திரையாகவோ அல்லது திரவ மருந்தாகவோ இருக்கும்.

4. ஐப்யூப்ரோஃபன், நேப்ரோக்ஸன் போன்ற அழற்சி நீக்க வலி நிவாரணிகள்.

5. கோடீன் என்பது வலி நிவாரணியும் பேதி நிவாரணியுமாகும்.

6. பென்சல்கோனியம் குளோரைடு, நியோமைசின், பாலிமைசின் பி சல்பேட் அல்லது பாசிட்ரசின் துத்தநாகம் உள்ளிட்டவை நோய்க் கிருமிகளை அழிக்கும் தைலம், நீர்மம், ஈரமான துடைப்பான் அல்லது தெளிப்பு ஆகும்.

7. பொவிடன் அயோடின் என்பது திரவம், துடைக்கும் குச்சி அல்லது சிறு துண்டு வடிவில் இருக்கும் நோய்க் கிருமிகளை அழிக்கும் மருந்தாகும்.

8. சோற்றுக்கற்றாழை ஜெல்: தீப்புண், வேனிற் கட்டி, அரிப்பு மற்றும் தோல் வறட்சி உள்ளிட்ட பெரும்பாலான தோல் வியாதிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது.
9. தீப்புண் ஜெல்: குளுமை உண்டாக்கியாக லிடோகைன் போன்ற மருந்துகள் பயன்படுகிறது.

10. பென்சாயின் டிஞ்சர் – பெரும்பாலும் தனித்தனியாக உறையிடப்பட்ட துடைக்கும் குச்சி வடிவில் தோலைப் பாதுகாக்க பயன்படுகிறது.

ஷாக் அடித்தால் என்ன செய்ய வேண்டும்

முதலுதவி அம்சங்கள்

1. நல்ல வசதிகளை உடைய முதலுதவிப் பெட்டி அனைவர் வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டும்.

2. தீக்காயங்கள் மற்றும் வெட்டுக்கள் போன்ற பொதுவான காயங்களுக்கு சிகிச்சை அளிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

3. சுளுக்கு ஏற்படும் இடங்களில் நேரடியாக ஐஸ் கட்டி வைக்கக் கூடாது. அதை, ஒரு பாலிதின் பையில் வைத்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் வைக்கும் பொழுது பயனுள்ளதாக இருக்கும்.

4. சிறு தீக்காயங்களுக்கு மட்டுமே கிரீம் போன்றவைகளை பயன்படுத்த வேண்டும்.

5. வீட்டில் எப்பொழுதும், எந்ரேமும் மருத்துவர்களின் போன் நம்பரும், முகவரியும் அவசரத்திற்கு அனைவரும் பார்க்கும்படி ஒட்டி வைத்திருக்க வேண்டும்.

இவையே வீட்டில் இருக்க வேண்டிய முதலுதவி அம்சங்களாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

நவகிரக தோஷம் விலக

செவ்வாய் தோஷம் ஏன் ஏற்படுகிறது? செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரங்கள்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக பார்க்கபடும் ஒன்று செவ்வாய் தோஷமாகும். செவ்வாய் தோஷம் இருப்பவருக்கு திருமணம் தாமதமாக நடைபெறும், அல்லது திருமணம் நடைபெறுவதில் பல்வேறு தடைகள் ஏற்படும்....
27 நட்சத்திரங்களும் கோவில்களும்

27 நட்சத்திரங்களும் வழிபாட்டுக் கோவில்களும்

27 நக்ஷத்திரங்களும் வழிபாட்டுக் கோவில்களும் நக்ஷத்திரங்கள் 27 என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். ல் ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் ஒரு கோயில் உண்டு. மேற்படி அவரவர் நக்ஷத்திரத்திற்கு உரிய கோயிலை தரிசித்தால் எண்ணற்ற நன்மைகளை வாழ்வில்...
கேழ்வரகு முறுக்கு செய்வது எப்படி

சத்தான கேழ்வரகு முறுக்கு செய்முறை

கேழ்வரகு முறுக்கு தேவையான பொருட்கள் கேழ்வரகு மாவு – 500 கிராம் அரிசி மாவு - 50 கிராம் உடைத்த கடலை மாவு – 50 கிராம் சீரகம் – 1 ஸ்பூன் வெண்ணை...
கிரீன் டீ செய்முறை

கிரீன் டீ குடிப்பது நல்லதா கெட்டதா ?

கிரீன் டீ பெரும்பாலான மக்களால் விரும்பி சாப்பிடப்படும் தேநீராக கிரீன் டீ மாறியுள்ளது. பலரும் பால், காபி ,டீ குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ யை விரும்பி குடிக்கின்றனர். இதற்க்கு முக்கிய காரணம் கிரீன்...
4ம் எண்ணின் குணநலன்கள்

4ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

4ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 4ம் எண் ராகு பகவானுக்குரிய எண்ணாகும். இந்த எண் எங்கும், எதையும் பிரம்மாண்டமாகவும், பெரிதுப்படுத்தி எண்ணக்கூடிய மாபெரும் ஆற்றல் கொண்ட எண்ணாகும். 4, 13, 22, 31 ஆகிய...
பற்கள் பலம் பெற

பற்கள் வெண்மையாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டுமா?

பற்கள் வெண்மையாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டுமா? நம் முகத்தோற்றத்தை அழகாக காட்டுவதில் பற்களும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அனைவருக்குமே பற்கள் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். அனால் அப்படி இருப்பதில்லை. பற்கள்...
சுறா புட்டு செய்வது எப்படி

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிக சிறந்த உணாவாகும். குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.