இந்த 4 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும், இரத்த சர்க்கரை அளவை நீங்களே சுலபமாக குறைக்கலாம்

சர்க்கரை நோய் 

இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது வீட்டில்  ஒருவருக்கு கண்டிப்பாக இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு காரணம் மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம்.

நாகரீகம் என்ற பெயரில் நம் முன்னோர்கள் நமக்கு சொன்ன பல நல்ல வழிமுறைகளை நாம் இன்று பின்பற்றுவதே இல்லை. இதுவே தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நீரிழிவு நோய் வர காரணமாகிவிட்டது.

சர்க்கரை நோய் வர காரணம் இது ஒரு பொதுவான நோயாக கருதப்பட்டாலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் அதன் கஷ்டம் என்னவென்பதை உணர முடியும்.  இந்நோய் உடலின் இன்சுலின் மற்றும் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கிறது, கணையத்தால் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமல் போகிறது.

நீரிழிவு நோய் வருவதற்கு காரணம் நமது உணவுமுறை, உடல் உழைப்பின்மை, மரபணு போன்ற பல காரணிகள் காரணங்களாக அமைகின்றது.  நீரிழிவு நோய் உயிருக்கு ஆபத்து என்று கருதப்பட்டாலும் நாம் இதனை திறம்பட கையாள்வதன் நோயை குணப்படுத்தி நமது ஆயுளை நீட்டிக்க முடியும்.

ஆயுர்வேதத்தில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், அவை வராமல் தடுக்கவும் பல மூலிகை சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகிறது. நமது உணவில் சில மூலிகை பொருட்களை சேர்த்துக்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயின் தாக்கத்தை குறைத்து நோயிலிருந்து மீள முடியும்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் 4 பொருட்கள்

சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் திரிபலா 1. திரிபலா

ஆயுர்வேதத்தில் திரிபலாவின் பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் கூறப்பட்டுள்ளது, அதில் முக்கியமானது உடலின் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது.  இது கணையத்தின் செயல்திறனை தூண்டி இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கிறது.

இன்சுலின் அளவை கட்டுபடுத்தும் வேப்பிலை2. வேம்பு

பழங்காலம் முதல் வேப்பிலையை பல நோய்களை தீர்க்கும் மருந்தாக மக்கள் கருதி வருகின்றனர். வேப்பிலை மரத்தின் ஒவ்வொரு பாகமும் நமக்கு பலவித நன்மைகளை தருகிறது.  வேப்ப இலைகளை சுத்தமாக அலசி அதனை சற்று நசுக்கி தண்ணீரில் சேர்த்து கொதிக்கவைத்து சாறை வடிகட்டி அந்த சாரை குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு படிப்படியாக குறைய தொடங்கும். குளுக்கோஸால் ஏற்படும் ஹைப்பர் கிளைசீமியாவுக்கு சிகிச்சையளிப்பதற்கான மிகச் சிறந்த சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாகும்.

நெல்லிக்காய் ஜூஸ்3. நெல்லிக்காய்

நெல்லிக்காய் மருத்துவ உலகிற்கு கிடைத்த ஒரு அறிய பொக்கிஷமாகும். நெல்லிக்காய் அனைத்து வயதினரும் சாப்பிடக்கூடிய ஒரு சிறந்த மருத்துவ குணம் நிறைந்த கனியாகும். நெல்லிக்காய் சாப்பிடுவது இளமை தோற்றம், அடர்த்தியான முடி மற்றும் நோயெதிர்ப்பு சக்தி போன்றவற்றை ஊக்குவிப்பதாக அறிந்திருக்கிறோம்.  நெல்லிக்காயில் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியான வைட்டமின் சி சத்து நிறைய இருப்பதால், ஆயுர்வேத மருத்துவர்கள் இதனை நீரிழிவு சிகிச்சைக்கு பரிந்துரைக்கின்றனர். நெல்லிக்காயை நேரடியாகவோ அல்லது ஜூஸாகவோ தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது.

பாகற்க்காய் நன்மைகள் 4. பாகற்காய் 

இயற்கையிலேயே இனிப்பான உணவுப்பொருட்களை விட கசப்பான உணவுப்பொருட்கள் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.  அதிலும் குறிப்பாக பாகற்காய் சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது, டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் சாறு சிறந்த மருந்தாக பயன்படுகிறது என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது. பாகற்காயை நன்கு காயவைத்துப் பொடி செய்து காலை, இரவு என்று இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களுக்கு கண்டிப்பாகச் சர்க்கரை நோய் முழுமையாகக் குறையும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ரவா லட்டு செய்முறை

சுவையான ரவா லட்டு

ரவா லட்டு தேவையான பொருட்கள் ரவை - ½ கிலோ சர்க்கரை – ¼ கிலோ முந்திரி – தேவையான அளவு திராட்சை – தேவையான அளவு நெய் – சிறிதளவு ஏலக்காய் தூள்...
ஆண் தலை மச்ச பலன்கள்

ஆண் தலை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் தலை பகுதி மச்ச பலன்கள் சாமுத்திரிகா லட்சணத்தின்படி ஆணின் உடலில் எந்த பாகத்தில் மச்சம் இருக்கிறது என்பதை வைத்து மச்ச சாஸ்திரம் பலன்களை கூறுகிறது. அந்த வகையில் இந்த பகுதியில் ஆணின் தலை,...

சகட தோஷம் என்றால் என்ன? சகட தோஷ பரிகாரங்கள்

சகட தோஷம் சகட அல்லது சகடை என்றால் சக்கரம் என்று அர்த்தம். சக்கரம் எப்படி கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் செல்கிறதோ அது போல் இந்த சகட தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையும் ஏற்ற இறக்கமாகச்...

எலும்புகளை பலப்படுத்தும் எள்ளுத் துவையல்

எள்ளு துவையல் மூட்டு தேய்மானம், எலும்பு பலம் குறைதல் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எள்ளு ஒரு அருமருந்தாகும்.  இதுமட்டுமல்லாமல் எள்ளில், இரும்பு சத்து, வைட்டமின், 'ஏ, பி' ஆகியவை நிறைந்துள்ளதால், இளம் நரையை...
நீர் விபத்துகளுக்கான முதலுதவிகள்

நீரில் மூழ்கியவரை காப்பாற்ற செய்ய வேண்டிய முதலுதவிகள்

நீரில் மூழ்கியவருக்கான முதலுதவிகள் நீச்சல் தெரியாதவர்கள் ஆர்வமிகுதியில் குளம், ஏரி, ஆறு அல்லது கடலில் குளிக்கும் போதும், படகில் செல்லும் போதும், நீச்சல் பயிற்சியின் போதும், தண்ணீர் விளையாட்டுகளின் போதும், எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிகளுக்கு...
potato uses in tamil

உடலை உறுதியாக்கும் உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு சோலானம் டியூபரோசம் என்னும் செடியின் வேரில் இருந்து பெறும் மாவுப்பொருள் நிறைந்த, சமையலில் பயன்படுத்தபடும், ஒருவகைக் கிழங்கு வகையாகும். உருளைக்கிழங்கு தாவரம் நிழற்செடி குடும்பத்தைச் சேர்ந்தது. அரிசி, கோதுமை, சோளம்...
மூளை வறுவல்

மூளை மிளகு வறுவல் செய்வது எப்படி?

மூளை மிளகு வறுவல் மட்டன் உணவுகள் ஆரோக்கியம் நிறைந்தவையாகும். மட்டனை வைத்து விதவிதமாக உணவுகள் சமைக்கப்படுகிறது. மட்டன் மூளை வைத்து செய்யப்படும் உணவுகள் ருசி நிறைந்தவையாகும். அந்தவகையில் மட்டன் மூளை மிளகு வறுவல் எவ்வாறு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.