தூதுவளை மருத்துவ குணங்கள்

தூதுவளை

தூதுவளை என்பது உணவிலும் மருத்துவத்திலும் அதிகம் பயன்படும் மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை கொடியாகும். சித்தர்கள் சுட்டிக்காட்டியுள்ள காயகற்ப மூலிகைகளில் இதுவும் ஒன்றாகும். குறிப்பாக இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். இது ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும் தன்மை கொண்டது.

தூதுவளை நன்மைகள்

தூதுவளை அமைப்பு

தூதுவளையின் இலை கரும்பச்சை நிறத்தில் இருக்கும். இதன் பூ ஊதா நிறத்தில் இருக்கும். இதன் கொடியிலும், இலைகளிலும் முட்கள் காணப்படும். சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். இதன் இலை, பூ, காய், பழம், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. குறிப்பாக ஆஸ்துமா நோய்க்கு இது மருந்தாகப் பயன்படுகிறது.

தூதுவளை வேறு பெயர்கள்

தூதுவளையானது சிங்க வல்லி, ரத்து நயத்தான், அளர்க்கம், தூதூவேளை, தூதூளம், தூதுளை போன்ற பல பெயர்களில் அழைக்கபடுகிறது.

தூதுவளை மருத்துவப் பயன்கள்

பல்வேறு நோய்களை குணமாக்கும்

தூதுவளைக் கீரையை தினமும் சாப்பிட்டு வர சளி, காது மந்தம், காது எழுச்சி, காது குத்தல், உடல் எரிச்சல், தேக குடைச்சல் ஆகிய அனைத்தும் குணமாகும்.

மார்பு சளி நீங்கும்

தூதுவளைக் கீரையை பசு வெண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி தயாரித்த நெய் காச நோய், மார்புச் சளி போன்றவற்றை குணமாக்கும்.

தாது விருத்தி உண்டாகும்

தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும், தாது விருத்தி அதிகரிக்கும், ஆண்மை சக்தியும் பெருகும்.

இருமல் சளி தீரும்

தூதுவளையுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலுவடையும். மேலும் இருமல், இரைப்பு, சளி முதலிய பிரச்சனைகள் குணமாகும்.

முச்சு திணறல் அகலும்

தூதுவளை பழத்தை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி, அந்த பொடியை புகை பிடிப்பது போல செய்து வர, இரைப்பு, இருமல், மூச்சுத் திணறல், சளி போன்றவை தீரும்.

எலும்புகள் உறுதியாகும்

தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பு களையும், பற்களையும் பலமாக்கும். தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து, அதனுடன் நெய் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு சாப்பிட்டு வர எலும்புகள் உறுதியாகி இரும்பு போல உறுதியுடன் இருக்கும்.

ஆண்மை அதிகரிக்கும்

தூதுவளையை நன்கு மை போல அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம், உஷ்ணம் குறையும். உஷ்ணம் குறைவதால் ஆண்களுக்கு இந்திரியம் அதிகம் உற்பத்தியாகி ஆண்மையைக் அதிகரிக்கும்.

சளியை விரட்டும்

தூதுவளை இலை மற்றும் வெற்றிலை இரண்டையும் சம அளவு எடுத்து காலை வேளையில் மென்று தின்றால் சளி மறைந்து விடும். காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்ததாகும்.

முதுமையை தள்ளி போடும்

தூதுவளைக் காயை ஊறுகாய் போல செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான பித்தம் குணமாகும். தூதுவளை அற்புதமான உடல் தேற்றி இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர சீக்கிரத்தில் முதுமை தோற்றம் ஏற்படாது. முதுமை காரணமாக வாடுபவர்கள் தூதுவளையை தினசரி உண்டு வர இழந்த சக்தி மீண்டும் கிடைக்கும்.

தூதுவளை இலை பயன்கள்

தைராய்டு கட்டிகள் குணமாகும்

தூதுவளையானது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் சிறந்த நிவாரணமாக திகழ்கிறது. தூதுவளை சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

கண் நோய்கள் தீரும்

தூதுவளை காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் போலோ செய்து ஒரு மண்டலம் கற்ப முறைப்படி சாப்பிட்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய் போன்ற அனைத்துப் பிரச்சனைகளுமே நீங்கும்.

அஜீரண கோளாறு நீங்கும்

தூதுவளை நல்ல செரிமானத்தை அளிக்கக் கூடியது. எனவே அஜீரண கோளாறு உள்ளவர்கள் அடிக்கடி தூதுவளையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தொடை கறி

ஆற்காடு தொடை கறி

ஆற்காடு தொடை கறி தேவையான பொருட்கள் மட்டன்  (தொடை கறி) - ½ கிலோ வினிகர் - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மிளகுத் தூள் - 2 ஸ்பூன் ...
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய

சரும அழகை பராமரிக்க சில எளிய அழகு குறிப்புகள்

சரும அழகை பராமரிக்க சில எளிய அழகு குறிப்புகள் சரும அழகை மேம்படுத்த நாம் செய்யும் சில விஷயங்கள் சருமத்திற்கு அழகு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் சரும நோய்கள் ஏற்படாமலும் தடுக்கிறது. இரவில் தயிருடன் சிறிதளவு...
சதுர்த்தசி திதி

சதுர்த்தசி திதி பலன்கள், சதுர்த்தசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

சதுர்த்தசி திதி சதுர்த்தச என்பதற்கு பதினான்கு என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 14 வது நாள் சதுர்த்தசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தசியை...
சிறுநீரக கற்களை கரைக்க

சிறுநீரகத்தில் கல் வர காரணம் ? வராமல் தடுப்பது எப்படி ?

சிறுநீரகத்தில் கல் வர என்ன காரணம்? முறையற்ற உணவுப்பழக்க வழக்கத்தாலும் மாறிவரும் வாழ்வியலாலும் மனித உடலின் கழிவுகள் வெளியேறும் பாதையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சிறுநீரகக் கல் பிரச்னை இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.  சிறுநீரகம்...

Tamil Riddles and Brain Teasers | Tamil Vidukathai with answers | Brain games Tamil

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
காகம் கரையும் பலன்கள்

காகம் சொல்லும் சகுனங்கள்

காகம் உணர்த்தும் சகுனம் காகம் இந்தியாவில் அதிக அளவில் காணப்படும் பறவை இனம் ஆகும். இந்து சமயத்தில் காகம் அதிக அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. எம லோகத்தின் வாயிலில் காகம் வீற்று இருப்பதாக ஒரு...
HOW TO MAKE COCONUT POLI

சுவையான தேங்காய் போளி

தேங்காய் போளி தேவையான பொருட்கள் வெல்லம் – 1 கப் மைதா மாவு – 1 கப் மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் துருவிய தேங்காய் – 1 கப் நெய் –...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.