அத்திப்பழம் பயன்கள் | அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்

அத்திப்பழம்

அத்திப்பழம் மரம் ‘மோரேசி’ Moraceae என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. அத்தியின் அறிவியல் பெயர் Ficus glomerata மற்றும் Ficus auriculate ஆகும். அத்திப்பழம் ஆங்கிலத்தில் ‘fig’ என அழைக்கபடுகிறது. அத்திமரம் களிமண் நிலம் மற்றும் ஆற்றின் கரையோர பகுதிகளில் நன்கு வளரும் தன்மையுடையது. அத்தி மரத்தில் பூவும் விதைகளும் சேர்ந்து பழம் போன்ற தோற்றத்தைத் தருகிறது.

அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்

அத்திப்பழத்தில் புதியதை விட நன்றாக காய்ந்த அல்ல‍து உலரந்த அத்திபழங்களில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. அத்தி பழத்தை சாப்பிட்டால் உடல் வலிமை அதிகரிப்பது மட்டுமில்லாமல், தலை முதல் கால் வரை உடல் முழுக்க ஆரோக்கியத்திற்கும்ம் உதவி புரியும். துணை நிற்கும் சிறந்த உணவுகளில் அத்திப்பழமும் ஒன்று. அத்திபழத்தை தினமும் சாப்பிடுவதால் உடலில் உள்ள பல நோய்கள் எளிதில் குணமாகிறது.

அத்தி மரத்தின் அமைப்பு

அத்தி மரம் வகையைச் சேர்ந்தது. அத்தி நடுத்தர உயரமுடைய மரமாகும். அத்திமரம் சுமார் 10 மீட்டர் வரை வளரும். அத்தி மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும். அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் காய்க்கும். பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக பச்சை நிறத்தில் இருக்கும். அத்தி காய் பழுத்த பின் கொய்யா பழம் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறும். பழங்கள் தானே கீழே உதிர்ந்து விழுந்து விடும்.

அத்தி வகைகள்

அத்தியில் நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என பல வகைகள் உண்டு.

அத்திப்பழம் நன்மைகள்

அத்திப்பழத்தில் உள்ள சத்துக்கள்

அத்தி பழத்தில் கலோரி – 47%, புரத சத்து – 4 கிராம், நார்ச்சத்து – 2 கிராம், இரும்பு சத்து – 4 மில்லி கிராம், தயாமின் – 0.10 மில்லி கிராம், கால்சியம் – 16 மில்லி கிராம், பொட்டாசியம் – 129 மில்லி கிராம், சோடியம் – 2 மில்லி கிராம் அடங்கியுள்ளன.

அத்திபழத்தின் மருத்துவ குணங்கள்:-

உடலில் புதிய இரத்தம் உருவாகும்

பார்க்கவும், ருசிக்கவும் அத்திப்பழம் சற்று வினோதமாக இருப்பினும், உடல் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. அத்திப்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து ஆரோக்கியமான தேகத்தை பெறலாம்.

இதயம் வலுவடையும்

அத்திப்பழத்தை உலர்த்தி பொடி செய்து , காலை, மாலை இரண்டு வேளை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமை அடையும்.

உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும்

உணவை எளிதில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பை தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள நச்சுகளையும் நீக்குகிறது.

துர்நாற்றத்தை போக்குகிறது

அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளரும். அத்தி காய்களில் இருக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவி வந்தால் வாய்ப்புண்கள் குணமாகும்.

தோல் நோய்களை குணமாக்கும்

1/2 கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளையாவது சாப்பிட்டு வந்தால் தோள்களில் தோன்றும் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், நிறமாற்றம் போன்றவை குணமாகும்.

ஆண்மை அதிகரிக்கும்

தினசரி 5 அத்திப்பழம் காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் வந்தால் நரம்பு தளர்ச்சி நீங்கி தாது விருத்தியாடையும். ஆண்மலட்டு தன்மை நீங்கும்.

கல்லீரல் வீக்கத்தை குறைக்கும்

போதைப் பழக்கம் மற்றும் இதர நோய்களால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக அத்திப் பழங்களைக் வினிகரில் ஒருவாரம் ஊற வைத்து, பின்பு தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பிரச்சனைகள் நீங்கும்.

உலர் அத்திப்பழம்

மலசிக்கலை குணமாக்கும்

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கலை குணமாக்க தினமும் 5 அத்திப்பழங்களை இரவில் சாப்பிட்டு வரவேண்டும்.

குறிப்பு:-

1. உலர்ந்த அத்திப்பழத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அத்திப்பழத்தை அதிகமாக உட்கொண்டால் உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
2. அத்திப்பழத்தை அதிகமாக உட்கொண்டால், அவை நம் உடலின் தேவையற்ற கழிவாகவே சேருகிறது. இதனால் எண்ணற்ற உடல் உபாதைகள் ஏற்படும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

how to make prawn 65 recipe

ஹோட்டல் ஸ்டைல் இறால் 65

இறால் 65 தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ சோளமாவு - 1 ஸ்பூன் மைதா மாவு - 1 ஸ்பூன் முட்டை – 1 தயிர் – 2 ஸ்பூன் இஞ்சி,...
உடல் கழிவுகள் நீங்க

உடல் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளும் வெளியேற்றும் வழிகளும்

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் அற்புத வழிகள் நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்ட பின் அதன் கழிவுகள் மலம் மற்றும் சிறுநீர் கழித்தலின் மூலம் வெளியேறி விடும். சில...
prawn katlet

இறால் கட்லட் செய்வது எப்படி

இறால் கட்லட் தேவையான பொருட்கள் இறால் -  ½ கிலோ பெரிய வெங்காயம் – 1 ( பொடியாக நறுக்கியது ) இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் பச்சைமிளகாய் – 1...
சேமியா கேசரி செய்முறை

கல்யாண வீட்டு சேமியா கேசரி

சேமியா கேசரி தேவையான பொருட்கள் சேமியா – 1 கப் சர்க்கரை – 1/2  கப் நெய் – தேவையான அளவு முந்திரி – தேவையான அளவு திராட்சை – தேவையான அளவு ஏலக்காய்...
செட்டிநாடு கோழி ரசம்

செட்டிநாடு கோழி ரசம்

செட்டிநாடு கோழி ரசம் தேவையான பொருட்கள் சிக்கன் – ½ கிலோ பட்டை – 1 துண்டு புளி – சிறிதளவு தனியாத் தூள் – ½ ஸ்பூன் மிளகாய்த் தூள் – ½...
சருமம் அழகாக

உங்கள் சருமம் பால் போன்று வெண்மையாக வேண்டுமா?

சருமத்தை வெண்மையாக மாற்றும் பால் பால் நம் தினசரி வாழக்கையில் இடம்பெரும் ஒரு முக்கிய பொருளாகும். பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு அதிக அளவிலான ஆரோக்கியத்தை அளிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததாகும். பாலில்...
வீட்டில் எங்கு விளக்கு ஏற்ற வேண்டும்

வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய இடங்கள்?

வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய இடங்கள்? தீபம் ஏற்றி வழிபடுவது இந்துக்களின் வழிபாட்டில் முக்கியமான ஒன்றாகும். ஒளி நிறைந்துள்ள இடத்தில் தான் அதிக நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும். தினந்தோறும் வீட்டில் காலையும், மாலையும் விளக்கேற்றி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.