வாய் துர்நாற்றம் நீங்க நிரந்தர தீர்வு

வாய் துர்நாற்றம்

வாய்துர்நாற்றம் பாதிப்பு இன்று பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனையாகும். இதனால் தனது நெருங்கிய துணையுடன் கூட பேச முடியாமல் சங்கடத்திற்கு உள்ளாகின்றனர். சிலருக்கு வாய் சுகாதாரமாக இருந்தாலும் உண்ணும் உணவில் உள்ள ஒருசில பொருட்கள் வாய் துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க, என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறதுதேவையானவை

  • எலுமிச்சை – 2
  • வெதுவெதுப்பான நீர் – 1 கப்
  • பட்டை பொடி – 1/2 ஸ்பூன்
  • சோடா உப்பு – 1 ஸ்பூன்
  • தேன் – 1 ஸ்பூன்

செய்முறை

  • ஒரு பாட்டிலில் எலுமிச்சை சாறு, பட்டை பொடி, சோடா உப்பு மற்றும் தேன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு அதனுடன் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, நன்கு குலுக்க வேண்டும்.
  • பின்பு அதில் 1 – 2 மேசைக்கரண்டி அளவு வாயில் ஊற்றி, ஒரு நாளைக்கு பலமுறை வாயைக் கொப்பளித்து வந்தால், வாய் துர்நாற்றம் நீங்கும்.
  • காரணம், இதில் சேர்க்கப்பட்டுள்ள பட்டை, வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி கொண்டது.
  • தேனில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளது. இதுவும் வாயில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடும்.
  • சோடாவில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகளை அகற்றும்.
  • எலுமிச்சையிலும் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. அதுமட்டுமின்றி, எலுமிச்சை நல்ல நறுமணத்துடன் இருப்பதால், இது வாய் கிருமிகளை அழித்து, வாயை புத்துணர்ச்சியுடனும் துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ளும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

துலாம் ராசி பலன்கள்

துலாம் ராசி பொது பலன்கள் – துலாம் ராசி குணங்கள்

துலாம் ராசி குணங்கள் துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். துலாம் ராசியில் சித்திரை நட்சத்திரத்தின் 3, 4 ஆம் பாதங்களும், சுவாதி நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், விசாகம் நட்சத்திரத்தின் 1, 2,...
ஏகாதசி திதி

ஏகாதசி திதி பலன்கள், ஏகாதசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

ஏகாதசி திதி ஏகாதசி என்ற வார்த்தையை ஏகம் – தசம் என இரண்டாக பிரிக்க வேண்டும். ஏகம் என்றால் ஒன்று, தசம் என்பது பத்து என்று அர்த்தம். இரண்டையும் கூட்டினால் 11. இது திதிகளின்...
நீர் விபத்துகளுக்கான முதலுதவிகள்

நீரில் மூழ்கியவரை காப்பாற்ற செய்ய வேண்டிய முதலுதவிகள்

நீரில் மூழ்கியவருக்கான முதலுதவிகள் நீச்சல் தெரியாதவர்கள் ஆர்வமிகுதியில் குளம், ஏரி, ஆறு அல்லது கடலில் குளிக்கும் போதும், படகில் செல்லும் போதும், நீச்சல் பயிற்சியின் போதும், தண்ணீர் விளையாட்டுகளின் போதும், எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிகளுக்கு...
பூக்கள் கனவு பலன்கள்

பூக்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பூக்கள் கனவில் வந்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வித்தியாசமான கனவுகள் தூக்கத்தின் போது வருகின்றன. அதில் ஒருசில கனவுகளுக்கு என்ன பலன் என்று தெரியாமல் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர். அந்தவகையில் பலருக்கும் பூக்களை பற்றிய...
kanavil samiyay kandaal

கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன்

கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன் கடவுள் சம்பந்தமான கனவுகள் வருவதற்கு முக்கிய காரணம் நீங்கள் உங்களை தாண்டி மற்றவர்களின் நலனை பற்றி யோசிக்கும் பொழுது தான் தோன்றுகிறது. அப்படித் தோன்றும் கனவுகள்...
தந்துரி சிக்கன் பிரியாணி

தந்தூரி சிக்கன் பிரியாணி

தந்தூரி சிக்கன் பிரியாணி எளிமையான முறையில் வீட்டிலேயே மிகவும் சுவையாக தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் சிக்கன் தொடை பகுதி – 4 தயிர் - ஒரு கப் ...
வெந்தயக்கீரை மருத்துவ குணங்கள்

வெந்தயக்கீரை மருத்துவ பயன்கள்

வெந்தய கீரை வெந்தயம் கீரை மற்றும் வெந்தயம் உணவுப்பொருளாகவும், மருத்துவ பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயம் தமிழர்களின் சமையலில் தவறாமல் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருளாகும். இதன் செடி கீரையாகவும், இதன் விதைகளான வெந்தயம் உணவுகளில் சுவையூட்டியாகவும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.