5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள்

5ம் எண் புதன் பகவானுக்குரிய எண்ணாகும். 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள்.

5ம் எண்ணின் குணநலன்கள்

5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

இவர்கள் பின்னால் நடக்க போவதை முன்கூட்டியே அறியக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள். மற்ற எண்களில் பிறந்தவர்கள் தங்களின் துன்பங்களையும், துயரங்களையும் நினைத்து கண் கலங்கினாலும் இவர்கள் மட்டும், அதை சவாலாக எடுத்துக் கொள்வார்கள். 5ஆம் எண்காரர்கள் மிகுந்த அறிவு நிறைந்தவர்கள். 5ம் எண்ணைக் காந்த எண் அல்லது ஜனவசியம் நிறைந்த எண் என்றும் கூறுவார்கள். தோல்வியை கண்டு ஒருபோதும் மனம் தளராமல் வெற்றியை நோக்கி ஓடக்கூடியவர்கள்.

இவர்கள் வெளித்தோற்றத்திற்கு வெகுளியாக காட்சியளித்தாலும் தங்கள் வேலைகள் மற்றும் செயல்களில் மிகுந்த காரியவாதிகள். இவர்கள் வேடிக்கையாக பேசுவதில் வல்லவர்கள். இவர்களின் பேச்சில் நக்கலும், நையாண்டியும் நிறைந்திருக்கும். சமூகத்தில் இவர்களுக்கென தனிப்பட்ட மதிப்பு மரியாதை இருக்கும். வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதனை நேர்மறையாக எடுத்து கொள்ள கூடியவர்கள்.

எந்தவிதமான கடின வேலைகளை எடுத்துக் கொண்டாலும், அதை மிகுந்த சிரத்தையோடு தவறுகள் ஏற்படாமல் செய்து முடிப்பார்கள். எந்த வேலையாக இருந்தாலும் எல்லாவற்றையும் முழுமையாக கற்றுக் கொள்ளக்கூடிய மனபக்குவம் நிறைந்தவர்கள். இவர்கள் யாராலும் செய்ய முடியாத காரியத்தை கூட செய்து காட்டும் வல்லமை உடையவர்கள். மனதில் தன்னம்பிக்கையும், தளராத லட்சியமும், அதற்குண்டான செயல்களில் கண்ணும், கருத்துமாகவும் இருக்கக்கூடியவர்கள்.

தன்னுடைய பிரச்சனைகள் மட்டும்மல்லாது மற்றவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் தங்களின் மதிநுட்பத்தால் தீர்த்து வைப்பார்கள். மற்றவர்களுக்கு கடுமையாக இருக்கும் செயல்கள் கூட இவர்களுக்கு எளிதாக இருக்கும். எந்தவொரு விஷயத்தையும் உடனுக்குடன் புரிந்து கொள்ளக்கூடியவர்கள்.

தங்களது சொந்தப் கருத்துக்களையும், விஷயங்களையும் தொகுத்து அவைகளை ஆராய்ந்து முடிவுக்கு வரும் அறிவுத் துறைகளில் இவர்கள் சிறப்பாக விளங்குவார்கள். ஒரே சமயத்தில் பல காரியங்களில் கவனம் செலுத்தும் திறமை உடையவர்கள். நாகரீக மாற்றத்தை ஏற்படுத்துவதிலும், ஏற்றுக் கொள்வதிலும் முன்னோடியாக திகழக்கூடியவர்கள்.

உடலமைப்பு

இவர்கள் சற்று சதைப்பிடிப்பான உடலமைப்பு கொண்டவர்கள். நடுத்தரமான உயரமும், கவர்ச்சியான முகமும், கண்களும் கொண்டவர்கள். நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையும், வேகமான நடையும் கொண்டவர்கள். இனிமையான பேச்சுக்களை உடையவர்கள்.

தனது கருத்துக்களை வெளிப்படுத்தும்போது கைகளின் மூலம் ஏதாவது செய்த கொண்டே இருப்பார்கள். அடர்த்தியான தலைமுடிகளையும் நீளமான மூக்கையும் உடையவர்கள். எப்போதும் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் புன்னகையும், கண்களில் ஒருவிதமான காந்த சக்தியையும் கொண்டவர்கள்.

குடும்பம் உறவுகள்

குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகளால் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை அதன்போக்கிலேயே விட்டு தீர்த்து கொள்வார்கள்.

இவர்கள் சுகமான போகமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்புவார்கள். மனதிற்கு பிடித்தவாறு விரும்பிய வாழ்க்கையை அமைத்து கொள்ளக்கூடியவர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு திருப்தியளிப்பதாக இருக்கும். உற்றார், உறவினர்களின் ஒத்துழைப்பு இவர்களுக்கு கிடைத்து கொண்டே இருக்கும்.

நண்பர்கள்

சற்று கலகலப்பான கொண்டவர்கள் என்பதால் இவர்களுக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகம் இருக்கும். இவர்களின் கலகலப்பான பேச்சுக்கள் மூலம் மற்றவரை கவர்ந்திழுப்பார்கள். பொதுவாக 9, 1, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் வைத்துக் கொள்வார்கள். இவர்கள் யாருடனும் கூட்டுத் தொழில் சேர்ந்து செய்யலாம். மற்ற எண்காரர்களை, அனுசரித்துச் சென்று, வெற்றி பெற்று விடுவார்கள்.

திருமண வாழ்க்கை

சிறுவயதிலேயே காதல் வயப்படுவார்கள். தன்னுடைய வாழ்க்கைத்துணையிடம் அவர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் அவரிடம் அனுசரித்து வாழ்வார்கள். இவர்களுக்குக் காதல் சாகசங்களில் மோகம் அதிகம். துணிந்து காதல்களில் ஈடுபடுவார்கள். அதுவும் 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். 1, 3, 6 பிறந்தவர்களையும் மணக்கலாம். புத்திர பாக்கியம் இவர்களுக்குக் குறைவு. எனவே 2, 6 ஆகிய எண்களில் பிறந்தோரைத் திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு.

திருமணத்தில் அருந்ததி நட்சத்திரம்

திருமண வாழ்க்கை எதிர்பார்த்த விதத்தில் அமைந்தாலும் இவர்கள் அதில் எளிதில் திருப்தி அடையமாட்டார்கள். கணவன்-மனைவி இடையே உள்ள அன்யோன்யமும், அன்பும் நிறைந்திருக்கும். திருமணத்திற்கு பின்பு இவர்களுடைய வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றமும், வாழ்க்கை தரமும் உயரும். தம்பதியர்களுக்கு இடையே ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து ஒற்றுமையுடன் செயல்படுவார்கள்.

தொழில்

இவர்கள் எந்த வியாபாரமும் செய்யலாம். ஜனவசியம் நிறைந்தவர்கள். இவர்கள் இருக்கும் இடத்திற்குக் கூட்டம் அதிகம் வரும். இருந்தாலும் ஒரு தொழிலை நன்கு செய்து கொண்டிருக்கிற போது, இன்னொரு தொழில் செய்தால் இதைவிட நன்றாக இருக்குமே என்று யோசிப்பார்கள். பின்பு இதை நடுவில் விட்டுவிட்டு, புதிய தொழிலில் துணிந்து இறங்கி விடுவார்கள்.

எழுத்தாளர், கலைத்துறை, ஜோதிடம், கணிதம், நடிகர்கள், நடிகைகள், கலைஞர்கள், அமைதி தூதுவர் தொடர்பான தொழில்கள், சிற்பம் செதுக்குதல், காகிதம், மொச்சை பயிறு, மஞ்சள், முத்து, வெற்றிலை பாக்கு கொடி வகை வியாபாரங்களில் இவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.

கமிஷன் தொடர்பான தொழில்கள், ஆராய்ச்சியாளர்கள், வான் ஆராய்ச்சி, மக்கள் தொடர்பான தொழில்கள், கணக்குத்துறை, தபால் துறை, சொற்பொழி, புரோகிதம் செய்தல் போன்ற தொழில்கள் இவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட தினங்கள்

ஒவ்வொரு மாதமும் 5, 14, 23 ஆகிய தேதிகளும் 9, 18, 27 ஆகிய தேதிகளும் மிக அதிர்ஷ்டமானவை. இதே போன்று கூட்டு எண் 5 அல்லது 9 வரும் தினங்களும் அதிர்ஷ்டமானவையே. இவர்களுக்கு மற்ற அனைத்து எண்காரர்களும் உதவுவார்கள். இருப்பினும் 5, 9 எண்காரர்கள் இவர்களுக்கு மிகவும் நன்மை செய்வார்கள்.

பிறந்த தேதி பலன்

அதிர்ஷ்ட இரத்தினம், உலோகம்

இவர்களுக்கு அதிர்ஷ்ட இரத்தினம் வைரம் (Diamond) ஆகும். ZIRCON எனப்படும் கற்களும் இவர்களுக்குச் சிறந்த பலன்களையே அளிக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்

சாம்பல் நிறம் மிகவும் ஏற்றது. அனைத்து இலேசான வண்ணங்களும் ஏற்றவையே. மினுமினுக்கும் உடைகளும், வண்ணங்களும் நன்மையே புரியும். கறுப்பு, சிவப்பு, பச்சை போன்ற ஆழந்த (DARK) வண்ணங்களை நீக்கிக் கொள்ளவும்.

ஆரோக்கியம் – நோய்

இவர்களுக்கு மன அமைதி குறைவு, மன இறுக்கம், மனச்சோர்வு, நரம்பு சம்பந்தமான நோய்கள், காக்கை வலிப்பு, பக்கவாதம், ஒருபுறம் நரம்புகள் சுருக்கிக் கொள்ளும் நோய்களும் ஏற்படலாம். எனவே இவர்கள் உணவில் அதிகமாகப் பருப்பு வகைகள் தானியங்கள் ஆகியவைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதிகமாக சிந்தனை செய்வதால் நரம்பு பலவீனம் அடைந்து, நரம்பு தளர்ச்சி நோய் உண்டாகும். தலைவலி, உடல் சோர்வு அதிகமாக இருக்கும். சரியான ஓய்வு இல்லாமல் தூக்கமின்மை, முதுகு வலி, கை, கால் வலி, உடல் வலி போன்றவை உண்டாகும். வாயுத் தொல்லையும் இருக்கும். சரியான நேரத்திற்கு சாப்பிடாததால் குடல் புண்ணும் ஏற்படும்.

தேதி வாரியாக பொதுவான பலன்கள்

5-ஆம் தேதி பிறந்தவர்கள்

இவர்கள் புதன் கிரகத்தின் முழு அம்சம் பெற்றவர்கள். நல்ல தெய்வீக வாழ்க்கை அமையும். அறிவும், தெளிவும் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களை மதிப்பவர்கள். அழகான தோற்றம் உடையவர்கள். இவர்களின் பேச்சிலும் நடத்தையிலும் ஒருவித ஈர்ப்புச் சக்தி கொண்டவர்கள். சிறு வயதிலேயே குறிப்பிட்ட இலட்சியத்துடன் வாழ்க்கையை நடத்துவார்கள். இவர்களுக்கு மற்றவர்களை ஏமாற்றி பிழைக்க தெரியாது.

14-ஆம் தேதி பிறந்தவர்கள்

இவர்கள் மிகுந்த அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள். பயணம் செய்வதில் அதிக விருப்பம் கொண்டவர்கள். இறைவனின் அருளால் இவர்களுக்கு துன்பங்களைச் சமாளிப்பதற்கான சூழ்நிலையும், அறிவும் உருவாகும். காதல் விஷயங்களில் கவனமாக இல்லாவிட்டால், பின்பு வாழ்க்கையே கசந்துவிடும். மக்களைக் கவர்கின்ற சிறந்த எண் இது. எனவே எப்போதும் இவரைச் சூழ்ந்து 10 பேர் இருப்பார்கள். அரசியலிலும் இவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு.

23-ஆம் தேதி பிறந்தவர்கள்

இவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள். சமூகத்தில் உயர்ந்த பதவிகள் கிடைக்கும். பண்பாடும், ஒழுக்கமும் நிறைந்தவர்கள். இவர்கள் உலகத்தில் சாதனை புரியப் பிறந்தவர்கள். மக்களைக் கவர்கின்ற சக்தி நிறைந்தவர்கள். புன்னகை புரிந்தே மற்றவர்களை வென்று விடுவார்கள். இவர்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு மறுப்பு இருக்காது. அனைத்து மக்களின் அன்பும், ஆதரவும் கிடைப்பதால் பெரும் வியாபாரிகளாகவும் ஆன்மிகம் மற்றும் அரசியல் துறைகளில் புகழ் பெற்றும் விளங்குவார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஆண் தலை மச்ச பலன்கள்

ஆண் தலை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் தலை பகுதி மச்ச பலன்கள் சாமுத்திரிகா லட்சணத்தின்படி ஆணின் உடலில் எந்த பாகத்தில் மச்சம் இருக்கிறது என்பதை வைத்து மச்ச சாஸ்திரம் பலன்களை கூறுகிறது. அந்த வகையில் இந்த பகுதியில் ஆணின் தலை,...
27 நட்சத்திரங்களும் கோவில்களும்

27 நட்சத்திரங்களும் வழிபாட்டுக் கோவில்களும்

27 நக்ஷத்திரங்களும் வழிபாட்டுக் கோவில்களும் நக்ஷத்திரங்கள் 27 என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். ல் ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் ஒரு கோயில் உண்டு. மேற்படி அவரவர் நக்ஷத்திரத்திற்கு உரிய கோயிலை தரிசித்தால் எண்ணற்ற நன்மைகளை வாழ்வில்...
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் திருவோணம் நட்சத்திரத்தின் இராசி : மகரம் திருவோணம் நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன் திருவோணம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சனி திருவோணம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : விஷ்ணு திருவோணம் நட்சத்திரத்தின் பரிகார...
நவகிரக தோஷ பரிகாரகங்கள்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் யாவை

செவ்வாய் தோஷம் திருமணத்திற்கு வரன் பார்த்து பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக பார்க்கப்படும் ஒரு விஷயம் பிள்ளைக்கோ அல்லது பெண்ணுக்கோ ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா என்பதுதான். இந்த செவ்வாய் தோஷம் கிட்டத்தட்ட பலருடைய வாழ்க்கையை...
பல்லி விழும் தோஷம்

பல்லி விழுந்தால் தோஷமா? பல்லி தோஷத்திற்கான வழிபாடு

பல்லி விழுந்தால் தோஷமா? மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் ஏற்படும். மனிதர்களுக்கு நல்லது கெட்டது எடுத்துக் கூறும் சக்தியும், தகுதியும் பல்லிக்கு உண்டு. நல்ல விஷயங்களை பற்றி பேசும்போது பல்லி கத்தினால்...
கனவு பலன்கள் வீடு

கட்டிடங்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

கட்டிடங்கள் கனவில் வந்தால் கனவுகள் காணாதவர் இவ்வுலகில் எவரும் இல்லை. அதற்கேற்றார் போல நாம் நம் தூக்கத்தில் எண்ணற்ற கனவுகளை காண்கிறோம். ஒரு சில சமயங்களில் அதிசயக்க வைக்கும் கனவுகளும் உண்டு. ஆனால் அந்த...
வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை

வெறும் வயிற்றில் எந்த உணவை சாப்பிடுவது நல்லது

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய உணவுகள்  உடல் ஆரோக்கியத்தில் காலை உணவு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு நாளுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் காலை உணவின் மூலமே நமக்கு கிடைக்கிறது. அன்றைய நாள் முழுவதும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.