ஜாதக யோகங்கள்
யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஜாதக கட்டத்தில் ஒரே இடத்தில் இணைந்து இருப்பதால் ஏற்படும் யோக பலன்களை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது கெடு பலனையும் தரலாம். சமுகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவர் முதல், பிச்சைக்காரர் வரை யோகங்களால் தான் அந்த நிலையை அவர்கள் ஜாதகத்தில் அமைந்துள்ள யோகங்களால் அந்த நிலையை அடைகின்றனர்.
அவரவர் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலையை பொருத்து யோக பலன்கள் மாறுபடும். ஒரு சிலருக்கு அந்த யோகங்கள் பிறந்த உடனேயும், சிலருக்கு மத்திய வயதிலும் அதன் பலன்களை வழங்கும். அதன்படி பல்வேறு யோகங்கள் மற்றும் அதன் பலன்கள் பற்றி பல பகுதிகளாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் சில யோகங்களை இந்த பகுதியில் பார்க்கலாம்.
குரு சந்திர யோகம் :
குருவும், சந்திரனும் 1, 5, 9 மற்றும் 10ம் இடங்களில் இணைந்து இருப்பது குரு சந்திர யோகம் ஆகும்.
குரு சந்திர யோகத்தின் பலன்கள் :
இந்த யோகம் கொண்டவர்கள் புகழ், கீர்த்தி மற்றும் தனம் கொண்டவர்களாக இருப்பார்கள். தெய்வபலம் மிகுந்தவராகவும் இருப்பார்கள். உயர்த கல்வியாளர்களாக திகழ்வார்கள். ஆனால் இவர்கள் படித்த படிப்பிற்க்கும். செய்யும் தொழிலுக்கும் தொடர்பு இருக்காது.
சசி மங்கள யோகம் :
செவ்வாயும், சந்திரனும் இணைந்தோ அல்லது சம சப்தமமாகவோ மகரம், மேஷம் மற்றும் கடகம் போன்ற இடங்களில் இருந்தால் சசி மங்கள யோகம் உண்டாகிறது.
சசி மங்கள யோகத்தின் பலன்கள் :
இந்த யோகம் கொண்டவர்களுக்கு மனை யோகம் உண்டாகும்.
சாக்த யோகம் :
குருவுக்கு 6, 8 மற்றும் 12 ல் சந்திரன் இருந்தால் சாக்த யோகம் உண்டாகிறது.
சாக்த யோகத்தின் பலன்கள் :
இவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்ற இறக்க நிலைகள் அடிக்கடி ஏற்படும்.
சுனபா யோகம் :
சந்திரனுக்கு 2ம் இடத்தில் சூரியனை தவிர்த்து மற்ற கிரகங்களின் அமைவுகள் உண்டானால் சுனபா யோகம் உண்டாகும்.
சுனபா யோகத்தின் பலன்கள் :
வாழ்க்கையில் அதிக வாய்ப்புகள் உண்டாகும்.
அயை யோகம் :
சந்திரனுக்கு 12ம் இடத்தில் சூரியனை தவிர்த்து மற்ற கிரகங்களின் அமைவுகள் உண்டானால் அயை யோகம் உண்டாகும்.
அயை யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
வாழ்க்கையில் சிறந்த பலன்கள் அமையும்.
துருதுரா யோகம் :
சந்திரனுக்கு 2, 8 மற்றும் 12ம் இடத்தில் சூரியனை தவிர்த்து மற்ற கிரகங்களின் சேர்க்கை அமைந்து இருந்தால் துருதுரா யோகம் உண்டாகிறது.
துருதுரா யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
இவர்கள் வாழ்க்கையில் மேன்மையான நிலையுடன் வாழ்வார்கள். கடமை உணர்வு மிக்கவர், பொன் பொருள் சேர்கை மிக்கவர். நல்ல வசதியான வாழ்கை வாழ்பவர்கள்.
சந்திராதி யோகம் :
சந்திரனுக்கு 6, 7 மற்றும் 8ம் இடத்தில் புதன் சுக்கிரன் சேர்க்கை பெற்று அமைந்து இருந்தால் சந்திராதி யோகம் உண்டாகும்.
சந்திராதி யோகத்தின் பலன்கள் :
வாழ்க்கையில் கலைகள் மற்றும் இன்பத்துடன் வாழ்வார்கள்.
கத்திரி யோகம் :
குருவும், சந்திரனும் 2 மற்றும் 5ம் இடங்களில் இணைந்து இருப்பது கத்திரி யோகம் எனப்படும்.
கத்திரி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
வாழ்க்கையில் முன்னேற்றமில்லாத சூழல் அமையும், செய்யும் தொழிலில் விரயங்கள் உண்டாகும்.
ஜெய யோகம் :
6ம் அதிபதி நீசம் பெற்று 10ம் அதிபதி உச்சம் பெற்றால் ஜெய யோகம் உண்டாகிறது.
ஜெய யோகத்தின் பலன்கள் :
இவர்கள் எதிரிகளை வெல்லக்கூடியவர்கள். போட்டி பந்தயங்களில் கீர்த்தி உடையவர்கள். நீண்ட ஆயுளை உடையவர்கள். நீதிமன்றங்களில் வாத திறமையால் வெற்றி பெறுவார்கள்.
விமல யோகம் :
12ம் அதிபதி 12ம் இடத்தில் ஆட்சி பெறுவதோ அல்லது பனிரெண்டாமிடத்தைப் பனிரெண்டாம் அதிபதியின் பார்வை பெற்றாலோ விமல யோகம் உண்டாகிறது.
விமல யோகத்தின் பலன்கள் :
இவர்கள் பொன், பொருள் அதிகம் சேர்ப்பார்கள். புகழ் வாய்ந்தவராக இருப்பார்கள்.
பாலை யோகம் :
சூரியனுக்கு 12ம் இடத்தில் குரு அமைந்து இருந்தால் பாலை யோகம் உண்டாகிறது.
பாலை யோகத்தின் பலன்கள் :
இவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பல துறைகளில் ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
வேசி யோகம் :
சூரியனுக்கு 2ம் இடத்தில் சந்திரன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் சேர்க்கை பெற்று அமைந்து இருந்தால் வேசி யோகம் உண்டாகிறது.
வேசி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
சுய சம்பாத்தியம் மூலம் முன்னேற்றம் அடைவார்கள். தனம், கீர்த்தி மற்றும் புத்தி கொண்டவராகவும் சிறந்து விளங்குவார். இந்த யோகம் உடையவர்கள் நினைத்ததை முடிபவராகவும், மகிழ்ச்சி உடையவராகவும், அதிஷ்டம் உடையவராகவும் இருப்பார்கள்.
வாசி யோகம் :
சூரியனுக்கு 12ல் சந்திரன், ராகு, கேது தவிர பிற கிரக அமைவு இருப்பின் வாசி யோகம் உண்டாகும்.
வாசி யோகத்தின் பலன்கள் :
இந்த யோகம் உடையவர்கள் பலராலும் பாராட்டப் பெற்றவர்களாகவும், செல்வாக்கு மிக்கவராகவும், பேச்சுத்திறன் மிக்கவர்களாகவும், செழிப்பாகவும் வாழ்வார்கள்.
வரிஷ்ட யோகம் :
ஜாதகத்தில் சூரியனுக்கு 3,6,9,12 சந்திரன் அமையபெரின் வரிஷ்ட யோகம் உண்டாகிறது.
வரிஷ்ட யோகத்தின் பலன்கள் :
இவர்களுக்கு நல்ல அறிவு, ஒழுக்கம், தைரியம், செல்வம், செல்வாக்கு போன்ற அற்புத பலன்கள் உண்டாகிறது. அறிவாளியாக இருப்பார்கள். வீடு, மனை மற்றும் வாகனச் சேர்க்கை இவர்களுக்கு உண்டாகும். பணிவு, மரியாதை போன்ற நற்குணங்கள் உடையவர்கள்.
அதம யோகம் :
சூரியனுக்கு 1, 4, 7 மற்றும் 10ம் வீடுகளில் சந்திரன் இருந்தால் அதம யோகம் உண்டாகிறது.
அதம யோகத்தின் பலன்கள் :
இந்த யோகத்தால் எவ்வித நல்ல மற்றும் தீய பலன்களும் உண்டாகாது.
சம யோகம் :
சூரியனுக்கு 2, 5, 8 மற்றும் 11ல் சந்திரன் இருந்தால் சம யோகம் உண்டாகிறது.
சம யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
இவர்களுக்கு ஆரோக்கியம், கல்வி ஞானம், இன்பம் மற்றும் தனம் என அனைத்தும் சரியான விகிதத்தில் வாழ்க்கையில் கிடைக்கும்.
அமாவாசை யோகம் :
சூரிய சந்திர சேர்க்கையால் உண்டாகுவது அமாவாசை யோகம் ஆகும்.
அமாவாசை யோகத்தின் பலன்கள் :
இவர்கள் சாதுர்யமான பேச்சுத் திறன் கொண்டவர்கள். எந்த வேலையையும் எளிதாக செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். அன்றாட வாழ்க்கை மிகவும் துன்பம் நிறைந்ததாக இருக்கும். இயந்திர பாகம் உடைய தொழிற்சாலையில் பணி புரியும் திறமை கொண்டவர்கள். சமுதாயத்தில் தலைவராகவோ, நாட்டின் தலைவராகவோ, அரசாலும் யோகமோ அமையப் பெறுகின்றார்கள்.
கேசரி யோகம் :
சந்திரனுக்கு கேந்திரத்தில் செவ்வாய் அல்லது குரு அமைந்து இருப்பது கேசரி யோகம் ஆகும்.
கேசரி யோகத்தின் உண்டாகும் பலன்கள் :
இவர்கள் தைரியம், வீரம் உடையவர்கள். நல்ல ஆயுள் விருத்தி கொண்டவர்கள்.
கஜ கேசரி யோகம் :
குருவும் சந்திரனும் சம சப்தமாய் கேந்திர நிலையை பார்த்தால் கஜ கேசரி யோகம் உண்டாகிறது.
கஜ கேசரி யோகத்தின் பலன்கள் :
வீரம், அறிவு மற்றும் புகழ் கொண்டவர்கள். உறவினரால் உயர்வு அடைவார். பெரும் புகழும் உடையவர். இறந்த பின்பும் புகழ் மிக்கவர். அரசருக்கு நிகரான தொழில் புரிவர்.
உங்கள் ஜாதகத்தில் உள்ள யோகங்கங்களை பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.