எந்த கிழமையில் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்

எந்த கிழமையில் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்

குழந்தை பிறப்பதே அதிஷ்டம் தான்,கிழமை என்பது உறவுகள் என்று பொருள். அனைத்து கிழமைகளும் ஒவ்வொரு கடவுளுடைய தொடர்புடையது என்று கூறப்படுகிறது.

இருந்தாலும் குழந்தை எந்த கிழமைகளில் பிறந்தால் அதிர்ஷ்டம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாமா?

குழந்தை எந்த கிழமையில் பிறந்தால் அதிர்ஷ்டம்ஞாயிற்று கிழமை

ஞாயிற்று கிழமைக்கு உரிய கிரகம் சூரியன். ஒருவர் ஞாயிற்று கிழமையில் பிறந்தால் செல்வ செழிப்பு விருத்தியாகும், செல்வாக்கும் அதிகரிக்கும். மேலும் அவரது நடுப்பகுதி வாழ்கையில் மத்திய வயதில் அதாவது 40, 45 வயதிற்கு மேல் மிகுந்த பேரும், புகழுடன் மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்வார்கள். எதிலும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையான குணமுள்ளவர்களாவே இருப்பார்கள்.

ஞாயிற்று கிழமையில் பிறந்தவர்களின் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும். மற்றவர்கள் கடினம் என்று நினைத்து செய்யும் வேலையை இவர்கள் எளிதில் செய்து விடுவார்கள்.

திங்கள் கிழமை

திங்கள் கிழமைக்குரிய கிரகம் சந்திரன். திங்கள் கிழமையில் பிறந்தவர்கள் பேரும், புகழுடன் அனைவரும் மதிக்கக்கூடிய வாழ்க்கையை வாழ்பவர்கள். இவர் முயற்சிக்கும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவார்கள். திங்கள் கிழமை பிறந்தவர்கள் வசீகரமான தோற்றத்தையும், நகைச்சுவை மிகுந்த பேச்சாலும் மற்றவர்களை கவர்ந்துவிடுவார்கள்.

இவர்களுக்கு நண்பர்கள் அதிக அளவில் இருப்பார்கள்.  இவர் வீட்டில் இருக்கும் நேரங்களை விட நண்பர்களுடன் பொழுது போக்கும் நேரம்தான் அதிகமாக இருக்கும். உதவி கேட்கும் அனைவர்க்கும் உடனே உதவி செய்யும் மனமுள்ளவர்கள். பின் தனக்கு செலவு செய்ய பணம் இல்லையே என சில நேரங்களில் அவதிப்படுவதும் உண்டு.

செவ்வாய் கிழமை

இந்த கிழமைக்கு உரிய கிரகம் செவ்வாய்.  செவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் தனது கடுமையான உழைப்பினால் முன்னேற்றம் அடைந்து குறிப்பிட்ட இலக்கினை அடைவார்கள். உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்றும் அனைவராலும் பாராட்டப்படுவார்கள். இவர் வம்பு சண்டைக்கு போகமாட்டார் இருந்தாலும் வந்த சண்டையை விடவும் மாட்டார்.

இவர்களுடன் பேசும் பொழுது சற்று கவனமாக பேசவேண்டும். அதேபோல் இவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். இவருக்கு சற்று அடிக்கடி கோவம் வரும் என்றாலும், அனைவருடனும் அன்பாகவே இருப்பார்.

புதன் கிழமை

புதன் கிழமைக்குரிய கிரகம் புதன். புதன் கிழமை பிறந்தவர்கள் ஏதேனும் ஒரு துறையில் சிறப்பு வாய்ந்தவராக திகழ்வார்கள். சிறந்த கல்வி, கேள்வி, ஞானம், பட்டம் படிப்பு பெற்று உயர்ந்த பதவியை அடைவார்கள். புதன் கிழமையில் பிறந்தவர்கள் எதையாவது எழுதிக் கொண்டும் படித்து கொண்டும் இருப்பார்கள்.

தனக்கு தேவை இல்லை என்றாலும் அதை அறிந்துகொள்ள அதிக ஆர்வம் காட்டுவார்கள். இவர்கள் இயற்கையாகவே கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவர்கள். இவர்கள் நண்பர்களை கூட தேர்ந்தெடுத்துதான் பழகுவார்கள். ஆனால் ஒருவரிடம் நன்றாக பழகிவிட்டார்கள் என்றால் அந்த நட்புக்காக உயிரையே கொடுக்க தயங்கமாட்டார்கள்.

வியாழக்கிழமை

வியாழக்கிழமைக்குரிய கிரகம் குரு பகவான். வியாழக் கிழமையன்று பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்க கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள்  மற்றவர்களுக்கு உதவி செய்து தியாக வாழ்க்கையை வாழ்பவர்கள்.

வியாழக் கிழமை பிறந்தவர்கள் நன்னெறிக்கு இருப்பிடமாக திகழ்வார்கள். எனவே இவர் தேவையில்லாத பிரச்சனைகளில் அவ்வளவு சீக்கிரமாக மாட்டிக்கொள்ள மாட்டார்கள். குறிப்பாக தன்னடக்கம் கொண்டவராக இருப்பார்கள். தெய்வ வழிபாடுகளிலும், ஆன்மிக சொற்பொழிவுகளை கேட்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருப்பார்கள். வாழ்க்கையை குறித்து தெளிவான திட்டமிடுதலும், முறையான அணுகுமுறையும் இவரை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும்.

குழந்தை பிறப்புவெள்ளி கிழமை

வெள்ளி கிழமைக்குரிய கிரகம் சுக்கிரன்.  வெள்ளி கிழமை பிறந்தவர்கள் வாழ்க்கையில் சகல சுகங்களையும் அனுபவிக்க பிறந்தவர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ்பவர்கள். எனவே இவர்கள் மனதில் எதனை விரும்புகிறார்களோ அதனை எந்த சூழ்நிலையிலும் அடைந்தே தீருவார்கள். இவர்கள் காலில் சக்கரம் கட்டாதவாறு அலைந்து திரிந்து சம்பாரித்தாலும் இவர்களுடைய உழைப்பு முழுவதும் மற்றவர்களையே போய் சேரும்.

இவர்கள் புகழ்ச்சியை அதிகம் விரும்புபவர் என்பதால் மற்றவர்களை எளிதாக நம்பிவிடுவார்கள். அதேபோல் அதிக தெய்வ நம்பிக்கை கொண்டவராக திகழ்வார்கள். பொதுவாக பெண் குழந்தைகள் வெள்ளி கிழமையில் பிறந்தால் அந்த குழந்தை வளர வளர செல்வம் பெருகும் என்று சொல்வார்கள்.

சனிக்கிழமை

இந்த கிழமைக்குரிய கிரகம் சனி பகவான். சனிக்கிழமை பிறந்தவர்களுக்கு அதிகளவு சமயோஜித புத்தி உள்ளவராக திகழப்படுவார். இவர்கள் தூங்கினால் கும்பகர்ணன் போல் தூங்கிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் எழுந்து நின்றாள் இந்திரஜித் போன்றவர்களாக திகழ்வார்கள்.

நண்பர்களுக்கு எதையும் செய்யும் எண்ணம் கொண்டவராக திகழ்வார்கள். மற்றவர்களிடம் இருந்து எப்பொழுதும் தனித்தன்மையுடன் இருப்பவர்கள். ஆனால் அனைவரிடமும் எப்பொழுதும் அன்பாகவே இருப்பார்கள். இதனால் இவர்களை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

riddles in tamil

Most intelligent Puthirgal | Puzzles with Answers | Brain games

மூளைக்கு வேலை தரக்கூடிய கேள்விகள்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
இறந்தவர்கள் பற்றிய கனவு

இறந்தவர்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

இறந்தவர்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் ஒருவர் திடீர் என்று தூக்கத்திலிருந்து எழுந்து அலறுவார்கள். அலறுவதர்கான காரணம் கேட்டால் யாரோ இறந்து போனமாதிரி கனவு கண்டேன், இறந்தவர்கள் கனவில் வந்தார்கள்...
ராசி அதிபதி பொருத்தம் என்றால் என்ன

ராசி அதிபதி பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்க்க வேண்டும்

ராசி அதிபதி பொருத்தம் என்றால் என்ன? ராசி அதிபதி பொருத்தம் என்பது குடும்பம் சந்தோஷமாக இருக்க பார்க்கப்படும் பொருத்தம் ஆகும். ராசி அதிபதி பொருத்தம் இருந்தால் குடும்பம் சுபிட்சமாக இருக்கும். பிறக்கும் பிள்ளைகள் யோகமாக...

சதாவரி என்னும் தண்ணீர்விட்டான் கிழங்கு-ன் மருத்துவ பயன்கள்

சதாவரி என்னும் தண்ணீர்விட்டான் கிழங்கு சதாவரி என்பது இந்தியா, இலங்கை, இமயமலை ஆகிய இடங்களில் காணப்படும் அஸ்பராகஸ் இனத் தாவரம் ஆகும். இது பல வியாதிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதை வடமொழியில் சதாவரி...
சுப ஓரைகள் என்றால் என்ன

ஓரைகள் என்றால் என்ன ? எந்த ஓரையில் என்னென்ன செய்யலாம்?

ஓரைகள் என்றால் என்ன? தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். அதுவே, அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை...
27 நட்சத்திரங்கள் பெயர்கள்

27 நட்சத்திரங்கள் பற்றிய விரிவான ஒரு பார்வை

27 நட்சத்திரங்கள் ஒரு பார்வை ஜோதிடத்தில் மிக முக்கியமானது நட்சத்திரங்கள் ஆகும். கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம். ஒருவருடைய பிறந்த ஜாதகம், அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகிறது. ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளாரோ...
சிக்கன் வறுவல் செய்வது எப்படி

ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல்

ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கனில் பல வகைகள் உள்ளன. அதில் நாம் இன்று...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.