கடக ராசி பொது பலன்கள் – கடக ராசி குணங்கள்

கடக ராசி குணங்கள்

கடக ராசியின் அதிபதி சந்திர பகவானாவார். கடக ராசியில் புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களின் அனைத்து பாதங்களும் அடங்கியுள்ளன. 12 ராசிகளில் இது 2வது சர ராசி ஆகும். பஞ்ச பூதங்களில் கடக ராசி நீர் தத்துவத்தை குறிக்கும் ராசியாகும். மேலும் இது ஒரு பெண் ராசியாகும். இது நண்டு போன்ற அமைப்பில் முத்துச் சிதறலாக ஒளிரும் நட்சத்திரக் கூட்டமைப்பே கடகம் ஆகும். பன்னிரண்டு ராசிகளில் அதிக அளவு ஈர்ப்பும் வசீகரிக்கும் சக்தியும் பெற்றிருக்கும் ராசி கடகமாகும். கடக ராசிக்கு ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை நட்பு ராசிகளாகும்.

கடக ராசி குணநலன்கள்

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு, மேலோரிடத்தில் மரியாதையும், சாந்தமும், சகிப்பு தன்மையும், கடவுள் பக்தியும் அதிகம் இருக்கும். நடுத்தர உயரம் கொண்ட இவர்கள் சிறு வயதில் ஒல்லியாக இருந்தாலும் வயது ஏற ஏற உடல் பெருத்து உருண்டு திரண்ட அங்க அமைப்புகளுடன் குண்டாக காணப்படுவார்கள். இவர்களுக்கு கூர்மையான மூக்கும், உயர்ந்த நாசியும், அழகான உதடுகளும், அழகான வில் போன்ற புருவங்களும் அமைந்திருக்கும். பேச்சில் உறுதியிருந்தாலும் மெல்லிய குரலில் தான் பேசுவார்கள். பார்வையில் ஓர் அழகிருக்கும். நல்ல ஞாபக சக்தியும், அறிவாற்றலும் கொண்டவர்கள்.

இவர்கள் எந்தத் துறையில் நுழைந்தாலும், அங்கே உங்கள் அதிகாரத்தையும் ஆளுமையையும் நிலை நிறுத்துவார்கள். இவர்களுடைய அன்பான பேச்சாலும், நிர்வாகத் திறனாலும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள். இவர்களுக்கு மேலான அதிகாரத்தில் இருப்பவர்களையும் வலுவிழக்கச் செய்வார்கள். இவர்களின் ராசிநாதன் சந்திரன் மனோகாரகர் ஆவார். ஒருவரின் மனதை சந்திரன் தான் ஆட்டி வைக்கிறது என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. இவர்கள் வெகு விரைவில் மற்றவர்களின் மனதில் இடம் பிடித்துவிடுவார்கள்.

கடக ராசியில் பிறந்தவர்கள் உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். எல்லோரிடத்திலும் சகஜமாக பழகி எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ள கூடிய ஆற்றல் கொண்டவர்கள். எந்த ஒரு காரியத்திலும் தீவிரமாக ஆலோசித்து செயல்படும் இவர்கள் துணிந்தபின் துயரம் இல்லை என்ற சொல்லிற்கேற்ப நண்டுபிடி போட்டு காரியத்தை கச்சிதமாக செய்து முடிப்பார்கள்.

இவர்கள் இரக்க குணமும், எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவராகவும் இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படுவார்கள். இவர்களிடத்தில் கற்பனைத் திறன் மிகுந்து காணப்படும். இவர்களிடம் பழகுவது கடினம் என்றாலும் பழகியபின் பிரிய முடியாது. தன்னை நம்பியவர்களுக்கு எல்லாவித உதவியும் செய்வார்கள். இதனால் அடிக்கடி ஏமாந்தும் போவார்கள். கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசும் வெகுளித்தனம் உள்ளவர்கள் என்பதால் இவர்களால் பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது. பிறர் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்காமல் தங்களுடைய கருத்துகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதால் பலரின் வெறுப்பிற்கு ஆளாகி விடுவார்கள்.

இவர்கள் எடுத்து கொண்ட வேலையை முடிக்காமல் விடமாட்டார்கள். இவர்களின் 4-ம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிரன் கட்டடக்காரகராக இருப்பதால், அதிநவீனமாக வீடு கட்ட விரும்புவார்கள். 6-ம் இடம் நோய், கடன், எதிரி ஸ்தானத்துக்கு உரியவர் குரு என்பதால், பொதுக் காரியங்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் உதவுவது இவர்களுக்கு நன்மை தரும்.

கடக ராசியில் பிறந்தவர்கள் சுக போகமாக வாழ்வதையே விரும்புவார்கள். எல்லா விதத்திலும் பணத்தை சம்பாதிக்கக் கூடிய திறமைப் பெற்றிப்பார்கள். கையில் பணம் இல்லாமல் இவர்களால் இருக்க முடியாது. இவர் கடனாக கொடுக்கும் பணம் எதுவும் திரும்ப வராது என்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. இவர்கள் ஆடம்பர செலவாளியாக இருப்பதால் தேவைக்கேற்ற பண வரவுகள் இருந்தாலும் சேமிப்பு என்பது அறவே இவர்களிடம் இருக்காது.

இவர்களின் அசையா சொத்துகளைப் பொறுத்த வரையில் அது மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரில் இருப்பதுதான் நல்லது. இவர்களுடைய வாழ்க்கைத் துணை பற்றிக் குறிப்பிடும் 7-ம் இடத்துக்கு அதிபதியாக சனி வருவதால், திருமண வாழ்க்கை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இருக்கும். இவர்களின் 8-ம் இடமான ஆயுள் ஸ்தானத்துக்கும் சனியே அதிபதி ஆதலால், தீர்க்காயுள் உண்டு.

சிறு வயதிலிருந்தே சுயமாக வீடு, மனை, வாசல், வண்டி, வாகனங்கள் யாவும் சிறப்பாக அமைந்து சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். கடக ராசிகாரர்களுக்கு கடன் வாங்குவதென்பது பிடிக்காத ஓர் விஷயமாகும். பெற்றோர் கடன் வாங்கியிருந்தாலும் தன்னுடைய சொத்துக்களை விற்றாவது அனைத்தையும் தன் வாழ்நாட்களிலேயே அடைத்து விடுவார்கள்.

10-ம் இடத்துக்கு உரிய ஜீவன ஸ்தானத்துக்கு அதிபதியாக மேஷ செவ்வாய் வருகிறது. இவர்களுக்கு பிரபல யோகாதிபதியாகவும் செவ்வாய் இருக்கிறது. இவர்கள் பெரிய பதவியிலும், வியாபாரத்திலும் சாதிக்க விரும்புவார்கள். காவல்துறை, ராணுவம், கப்பல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். 11-ம் இடமான மூத்த சகோதர ஸ்தானத்துக்கு பாதகாதிபதியான சுக்கிரன் வருவதால், இவர்களின் மூத்த சகோதர சகோதரிகள் பலன் பெறுவார்களே தவிர, அவர்களால் இவர்களுக்கு உதவிகள் கிடைக்காது.

கடக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம்

சந்திரனின் ஆதிக்கத்தில் கடக ராசி வருகிறது. பொதுவாகவே, சந்திரனின் ஆளுமையில் உள்ளவர்களுக்கு அம்பாள் வழிபாடு விசேஷமானது. அதனால் இவர்கள் திருமீயச்சூர் லலிதா பரமேஸ்வரியை வழிபட்டு வரலாம். இத்தலம் மயிலாடுதுறை – திருவாரூர் சாலையிலுள்ள பேரளம் என்னும் ஊரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

சக்தி வழிபாட்டின் இதயத் துடிப்பு போன்றது லலிதா சகஸ்ரநாமம். இந்தத் தலத்தில் அம்பாளுக்கு லலிதா சகஸ்ரநாமம் சொல்லியே அர்ச்சனை ஆராதனைகள் நிகழும். மகாமுனிவர் அகத்தியர் ‘லலிதா நவரத்ன மாலை’ எனும் அற்புத நூலை இங்குதான் இயற்றினார். இங்கு வந்து லலிதாம்பிகையின் அருளை பெற்றால் போதும். உங்கள் வாழ்வு முழு நிலவாக பிரகாசமாக மலரும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மாங்கல்ய தோஷம் பரிகாரம்

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? பெண்ணின் ஜாதகத்தில் உள்ள சில கிரகங்களின் சேர்க்கை, கோச்சாரநிலை, தசா புத்திகள் போன்ற காரணங்களால் திருமணம் நடைபெறுவது தாமதமாகும் அல்லது அந்த பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்காமல்...
கற்றாழை வளர்ப்பது எப்படி

கற்றாழை மருத்துவ பயன்கள்

கற்றாழை கற்றாழை ஒரு பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த பேரினமாகும். இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் வளரும் தன்மை கொண்டது. கற்றாழை லில்லியேசி என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவை தாயகமாகக்...
மூளை வறுவல்

மூளை மிளகு வறுவல் செய்வது எப்படி?

மூளை மிளகு வறுவல் மட்டன் உணவுகள் ஆரோக்கியம் நிறைந்தவையாகும். மட்டனை வைத்து விதவிதமாக உணவுகள் சமைக்கப்படுகிறது. மட்டன் மூளை வைத்து செய்யப்படும் உணவுகள் ருசி நிறைந்தவையாகும். அந்தவகையில் மட்டன் மூளை மிளகு வறுவல் எவ்வாறு...
கார்த்திகை தீபம் விளகேற்றும் முறை

கார்த்திகை தீபம் விளக்கேற்றும் முறை மற்றும் பலன்கள்

கார்த்திகை தீபம் கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் விளக்கேற்றும் முறை நமது தமிழகத்தில் இருந்து வருகின்றது. கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் முழுவதும் நம் வீட்டில் தீபம்...
கெட்ட கனவு வந்தால் என்ன செய்ய வேண்டும்

கெட்ட கனவுகள் ஏற்படாமல் தடுக்க பரிகாரம்

கெட்ட கனவுகள் மற்றும் அதற்கான பரிகாரங்கள் மனிதனின் ஆயுட்காலத்தில் பெரும்பான்மையான நேரம் தூக்கத்தில் தான் கழிகிறது. அந்த தூக்கத்தில் ஒரு சில கெட்ட கனவுகள் வந்து வந்து நம்மை பாடாய்படுத்திவிடும். அந்த கெட்ட கனவுக்கான...
நீர் விபத்துகளுக்கான முதலுதவிகள்

நீரில் மூழ்கியவரை காப்பாற்ற செய்ய வேண்டிய முதலுதவிகள்

நீரில் மூழ்கியவருக்கான முதலுதவிகள் நீச்சல் தெரியாதவர்கள் ஆர்வமிகுதியில் குளம், ஏரி, ஆறு அல்லது கடலில் குளிக்கும் போதும், படகில் செல்லும் போதும், நீச்சல் பயிற்சியின் போதும், தண்ணீர் விளையாட்டுகளின் போதும், எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிகளுக்கு...
கேச பராமரிப்பு

உங்கள் கேசத்தை பராமரிக்க சில அற்புத வழிகள்

கேசத்தை பராமரிக்க சில அற்புத வழிகள் நம் தோற்றத்தை அழகாக காட்டுவதில் தலைமுடியும் பெரும்பங்காற்றுகிறது என்பதை மறுக்க முடியாது. தலைமுடி ஆரோக்கியமாகவும், கருமையாகவும், நீளமாகவும் இருந்தால் அது கூடுதல் அழகையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.