தீ விபத்து ஏற்பட்டால்
நாம் எதிர்பார்க்காத நேரங்களில் வீட்டிலோ, அலுவலகத்திலோ, வேறு இடங்களிலோ தீ விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. அந்த சமயத்தில் நாம் என்ன மாதிரியான முன் எச்சரிக்கை மற்றும் முதலுதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.
1. என்ன வகையான தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பதை பொருத்து நீங்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறிய அளவு தீ விபத்து எனில் நீங்களே அதை அணைத்து விடலாம். உங்களால் முடியாத பட்சத்தில் உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
2. தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
3. எண்ணெய் அல்லது அமிலம் காரணமாக ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க வேண்டும். மற்ற வகையான தீ விபத்துகளுக்கு நீரை ஊற்றி அணைக்க வேண்டும்.
4. தீ விபத்தின் போது ஒரு நபருக்கு தீ பற்றிக் கொண்டால், கம்பளி அல்லது வேறு துணியால் அந்நபரை சுற்றி, அவர்களை தரையில் உருட்டி தீயை அணைக்க முயற்சி செய்ய வேண்டும்.
5. ஒருவரின் ஆடையில் தீப்பற்றி கொண்டால் பயந்து ஓடக்கூடாது. அப்படி ஓடினால் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பரவும். அதனால் தீப்பற்றியவர் கீழே படுத்து தரையில் உருள வேண்டும்.
6. தீக்காயம் ஏற்பட்ட இடத்தை உடனே குளிர்சியாக்க வேண்டும். இதற்கு அதிகளவு குளிர்ந்த, சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.
7. தீக்காயம் ஏற்பட்ட இடத்தை சுத்தமாகவும் மற்றும் வறட்சியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். தீ காயம் ஏற்பட்ட இடத்தை ஒரு துணியால் தளர்ந்த நிலையில் கட்டி பாதுகாக்க வேண்டும். தீக்காயமானது பெரியதாக இருந்தாலோ அல்லது கொப்புளங்கள் ஏற்பட்டு இருந்தாலோ பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். கொப்புளங்களை உடைக்கக் முயற்சிக்க கூடாது.
8. தீ விபத்து ஏற்பட்டு தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை எடுக்க கூடாது. மேலும் குளிர்ந்த நீரைத் தவிர எந்த ஒரு பொருளையும் தீக்காயத்தில் போடக் கூடாது.
9. தீ விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு சிறிய தீக்காயங்கள் இருந்தால் பழச்சாறு அல்லது உப்பு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீர் போன்ற திரவ உணவுகளைக் குடிக்க கொடுக்க வேண்டும்.
10. சூடான பாத்திரங்களை தொடுவதலோ, கொதிக்கும் சூடான எண்ணெய் தெறித்து விழுவதலோ, சூடான பொருள் உடலின் மீது விழுவதலோ ஏற்படும் சிறு புண்கள், கொப்புளங்களை கையினால் தேய்த்தல், நகத்தால் கிள்ளுதல் போன்றவை கூடாது. அந்தக் கொப்புளங்களின் மீது ‘ஆன்டிசெப்டிக்’ மருந்துகளை வைத்து இறுக்கமில்லாமல் கட்டுப் போடலாம்.
12. தீக்காயங்களுக்கு தேன் மிகவும் பயன்தரும். தேனை தீ காயத்தின் மீது தடவலாம். மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவை தீ புண்ணின் மீது தடவினால் அது ஒரு படலம் போன்று பரவி கிருமிகள் உள்ளே செல்லாதவாறு தடுக்கும். மேலும் பாதிக்கப்பட்ட இடத்தில் ஏற்படும் எரிச்சலை குறைக்கும்.
13. கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டால் அதன் மீது காற்றுப்படாமல் மூட வேண்டும். இது வலி மற்றும் எரிச்சலை குறைக்கும். இதற்கு வாழை இலை பயன்படுத்துவார்கள்.
14. தீக்காயம் ஏற்பட்டவருக்கு சிறு இடைவெளிகளில் உப்பு கலந்த நீர், எலுமிச்சைசாறு, வெந்நீர் இவற்றைக் கொடுக்கலாம்.