வாழைப்பழ அல்வா
தேவையான பொருள்கள்
- வாழைப்பழம் – 3
- பால் – 1 கப்
- சர்க்கரை – ½ கப்
- நெய் – ¼ கப்
- ஏலக்காய் தூள் – சிறிதளவு
- சோள மாவு – 3 ஸ்பூன்
- முந்திரி – சிறிதளவு
செய்முறை
- வாழைப்பழ அல்வா செய்வதற்கு பழத்தை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் அரைத்த வாழைபழத்தை சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.
- பின்னர் 3 ஸ்பூன் சோளமாவினை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் கலந்து கரைத்து சேர்த்துக் கொள்ளவும்.
- கட்டி தட்டாமல் நன்கு கலந்து விடவும்.
- பின் ½ கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
- சர்க்கரை சேர்த்த பின் நாம் எடுத்து வைத்துள்ள நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் வரை நன்கு கிளறவும்.
- வாசனைக்காக சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
- கேசரி கலர் சிறிதளவு தண்ணீரில் கலந்து சேர்த்து நன்கு கிளறவும்.
- முந்திரி பருப்பை பொடியாக நறுக்கி சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான வாழைப்பழ அல்வா தயார்.