முகப்பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும் பீட்ரூட்

முகப்பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும் பீட்ரூட்

இயற்கையான அழகை பெற விரும்பும் பெண்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த தீர்வாகும். பீட்ரூட்டில் நம் உடலுக்கும், உள்ளுருப்புகளுக்கும் மிகவும் தேவையான ஒன்றாகும். நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் காய் வகையில் ஒன்று தான் பீட்ரூட்.

இந்த பீட்ரூட் பல நன்மைகள் தரக்கூடியவை. உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, வைட்டமின் 12 என இரத்த அணுக்கள் உற்பத்திக்கு வேண்டிய சத்துக்களை கொண்டுள்ளது.பீட்ரூட்டை சமைத்தும் சாப்பிடலாம், முகத்திற்கும் பயன்படுத்தலாம். பீட்ரூட்டின் நிறம் மற்றும் சுவை பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் அதில் இல்லாத சத்துக்களே இல்லை.

பீட்ரூட் அழகு குறிப்புகள்

நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை பெருக்குவதில் பீட்ரூட் மிகவும் பயன்படுகிறது. செயற்கையான க்ரீம்களை பயன்படுத்தி நம்மை அழகுபடுத்திக் கொள்வது நிரந்தரமனாது அல்ல. பீட்ரூட் இயற்கை நமக்கு கொடுத்த மிக அற்புதமான அழகுசாதன பொருளாகும். பீட்ரூட்டில் நார்ச்சத்தும் , நீர்ச்சத்தும் அதிக அளவில் நிறைந்துள்ளது.

முகத்தை அழகுபடுத்தும் பீட்ரூட்

  • பீட்ரூட்டை தோல் சீவி அதை அரைத்து சாறை ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் கடலை மாவு அல்லது பாசிப்பருப்பு மாவு சேர்த்து கலந்து முகத்தில் பயன்படுத்தலாம்.
  • பீட்ரூட்டின் சாருடன் கற்றாழை சாறு,பன்னீர் அல்லது பால் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவடையும்.
  • பீட்ருட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
  • தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னை களைத் தவிர்க்கலாம். முகப்பரு மற்றும் கட்டிகள் வராது. இது ரத்தத்தை தூய்மையாக்கி சருமத்தைப் பளபளப்பாக்கும்.
  • பீட்ரூட்டை தோல் சீவி, துருவி, விழுதாக அரைத்து கைகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்யவும். இவ்வாறு தொடர்ந்து வாரம் 3 முறை செய்து வந்தால் கைகள் மென்மையாகும். முகப்பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும் பீட்ரூட்

பீட்ரூட் ஃபேஸியல்

தேவையான பொருட்கள்

  • பீட்ரூட் – 1
  • அரிசி மாவு – 2 ஸ்பூன்
  • தேன் – 2 ஸ்பூன்

செய்முறை

  • ஒரு பீட்ரூட்டினை எடுத்து அதில் உள்ள தோல் பகுதியை நீக்கி நன்றாக துருவி எடுத்து கொள்ள வேண்டும்.
  • பின் துருவிய பீட்ரூட்டை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து பீட்ரூட் ஜூஸினை எடுத்துக் கொள்ளவும்.
  • பின் இந்த பீட்ரூட் சாறுடன் இரண்டு ஸ்பூன் அரிசி மாவு, இரண்டு ஸ்பூன் தேன்  இவை இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • இந்த ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்றாக அப்ளை செய்து கொள்ளவும்.
  • பின் 20 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
  • இந்த ஃபேஸ் பேக்கினை வாரத்தில் 2 இரண்டு முறை செய்து வரலாம். இவ்வாறு செய்வதினால் சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் பருக்களினால் ஏற்படும் தழும்புகள் அனைத்து நீங்கி முகம் பளிச்சென்று ஜொலிக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சதாவரி என்னும் தண்ணீர்விட்டான் கிழங்கு-ன் மருத்துவ பயன்கள்

சதாவரி என்னும் தண்ணீர்விட்டான் கிழங்கு சதாவரி என்பது இந்தியா, இலங்கை, இமயமலை ஆகிய இடங்களில் காணப்படும் அஸ்பராகஸ் இனத் தாவரம் ஆகும். இது பல வியாதிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதை வடமொழியில் சதாவரி...
துளசி மருத்துவ நன்மைகள்

துளசி மருத்துவ குணங்கள்

துளசி துளசி மூலிகைகளின் ராணி என அழைக்கபடுகிறது. துளசியில் உள்ள மருத்துவ குணங்களால் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசியின் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. துளசி...
அஷ்டமி நவமி திதிகள்

அஷ்டமி, நவமி திதிகள் ஏன் மக்களால் புறகணிக்கப்டுகின்றன

அஷ்டமி, நவமி திதிகள் அமாவாசை, மற்றும் பௌர்ணமி நாட்களுக்கு பிறகு வரும் 8வது நாள் அஷ்டமி, 9வது நாள் நவமி ஆகும். அஷ்டமி, நவமி வரும் திதிகளில் நல்ல காரியங்கள் செய்ய கூடாது, அல்லது...
மூளை வறுவல்

மூளை மிளகு வறுவல் செய்வது எப்படி?

மூளை மிளகு வறுவல் மட்டன் உணவுகள் ஆரோக்கியம் நிறைந்தவையாகும். மட்டனை வைத்து விதவிதமாக உணவுகள் சமைக்கப்படுகிறது. மட்டன் மூளை வைத்து செய்யப்படும் உணவுகள் ருசி நிறைந்தவையாகும். அந்தவகையில் மட்டன் மூளை மிளகு வறுவல் எவ்வாறு...
புத்திர தோஷம் நீங்க

புத்திர தோஷம் ஏன் ஏற்படுகிறது? புத்திர தோஷத்தை நீக்கும் பரிகாரங்கள்

புத்திர தோஷம் திருமணமான அனைவருமே தங்களுக்கு ஒரு வாரிசு பிறக்க வேண்டும் என விரும்புவர். ஒரு சிலருக்கு திருமணமான ஒரு வருடத்திற்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஒரு சிலருக்கு சற்று தாமதமாக குழந்தை பேறு...
அதிமதுரத்தின் மருத்துவ பயன்கள்

அதிமதுரம் மருத்துவ பயன்கள்

அதிமதுரம் அதிமதுரம் செடி வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். காடுகளில் புதர் செடியாக வளரும். மிதமான சீதோஷ்ணத்தில் வளரும். இது சுமார் 1.5 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் கூட்டிலையைக் கொண்டது....
கெட்ட கனவு வந்தால் என்ன செய்ய வேண்டும்

கெட்ட கனவுகள் ஏற்படாமல் தடுக்க பரிகாரம்

கெட்ட கனவுகள் மற்றும் அதற்கான பரிகாரங்கள் மனிதனின் ஆயுட்காலத்தில் பெரும்பான்மையான நேரம் தூக்கத்தில் தான் கழிகிறது. அந்த தூக்கத்தில் ஒரு சில கெட்ட கனவுகள் வந்து வந்து நம்மை பாடாய்படுத்திவிடும். அந்த கெட்ட கனவுக்கான...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.