மருத்துவ குணங்கள் நிறைந்த மருதாணி இலை

மருதாணி இலை

மருதாணியை விரும்பாத பெண்களே இல்லை எனலாம். பெண்மை என்பதே அழகுதான். அந்த அழகுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பது மருதாணியாகும். மருதாணியானது மைலாஞ்சி, மருதோன்றி, ஐனாஇலை, ஐவனம், அழவணம் என வேறு பெயர்களாலும் அழைக்கபடுகிறது. மருதாணி இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. மருதாணி இட்டுகொள்வது வெறும் அழகுக்காக மட்டும் அல்ல, அதில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளது. அவை என்னவென்று பின்வரும் பகுதிகளில் பாரக்கலாம்.

மருதாணி இலை பயன்கள்

மருதாணியின் ஆரோக்கிய நன்மைகள்

மருதாணியை கைகளில் பூசுவதால் நகங்களில் உள்ள கிருமிகள் அழிக்கப்படுகின்றன. எனவே நகச்சுத்தி போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது உடல் சூட்டை குறைத்து விடுகிறது.

தேமல் வராமல் தடுக்கும்

ஒரு சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல்கள் காணப்படும் மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பை சேர்த்து அரைத்து பூசி வந்தால் வெகு விரைவில் அந்த கருந்தேமல்கள் மறையும்.

தோல் வியாதிகள் வராமல் தடுக்கும்

அரிப்பு, படை போன்ற சரும பிரச்சனை நோய்களுக்கு இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தோல் வியாதிகள் வராமல் தடுக்கும்.

வெள்ளைபடுதல் குணமாகும்

பெண்களுக்கு வெள்ளைபடுதல் பிரச்சனை பெரும் சங்கடத்தை கொடுக்கும். வெள்ளைபடுதல் பிரச்சனை உள்ளவர்கள் மருதாணி இலைகளை அரைத்து 6 தேக்கரண்டி அளவு வெறும் வயிற்றில் காலை வேளைகளில் குடித்து வர வேண்டும். 10 நாள்கள் வரை இவ்வாறு செய்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் நோய் குணமாகும்.

வாய் புண்களை குணமாக்கும்

நீண்ட நாட்களாக இருந்து வரும் ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து பின் வாய் கொப்பளிக்கலாம். இப்படி செய்வதால் வாயில் உள்ள கிருமிகள் அழியும், புண்களும் ஆறும்.

அம்மை தழும்புகளை குணமாக்கும்

அம்மை நோய் ஏற்பட்டவர்களுக்கு நோய் குணமானாலும் அம்மை தழும்புகள் உடனே குணமாகாது. அப்படிப்பட்டவர்கள் மருதாணி இலைகளை அரைத்து அம்மை புண்கள் மேல் பூசி வரலாம். இப்படி பூசி வந்தால் அம்மை புண்கள் 3 முதல் 5 நாட்களில் குணமாகும். வெயில்  கட்டிகளுக்கும் அரைத்துப் பற்று  போடலாம், விரைவில் குணமாகும்.

தலைமுடி பிரச்சனைகளை தீர்க்கும்

அனைத்து வகையான தலைமுடி பிரச்சனைகளுக்கும் மருதாணி இலைகளை அரைத்து பயன்படுத்தலாம். வாரம் ஒரு முறை இந்த பேஸ்ட்டை தலையில் தடவி வந்தால் பொடுகு பிரச்சனை தீரும், மேலும் தலைமுடி மென்மையாகி பளபளக்கும். மருதாணி இலைகள் அரைத்து நெற்றியில் தடவினால் தீராத தலைவலியும் தீரும்.

மருதாணி மருத்துவ பயன்கள்

நல்ல தூக்கம் வரும்

மருதாணி செடியின் வேர், நோயை நீக்கி உடலைத் தேற்றும், மருதாணி பூக்களைச் உலர்த்தி தலையணை போல் செய்து அதில் படுத்து வந்தால்  நல்ல தூக்கம் உண்டாவதுடன், பேன் பிரச்சனையும் குறையும்.

நகங்களை பாதுகாக்கும்

மருதாணி இலையுடன் சிறிது பாக்கு சேர்த்து அம்மியில் அரைத்து இரவில் கை, மற்றும் கால் நகங்களின் மீது வைத்து விடவேண்டும். பின்னர் காலையில் எழுந்து கழுவி விடவேண்டும். இவ்வாறு 15 நாளுக்கு ஒரு முறை செய்து வந்தால் நகம் சொத்தையாவது தடுக்கப்படும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி

ஆட்டுக்கால் சூப் வைப்பது எப்படி

ஆட்டுக்கால் சூப் தேவையான பொருட்கள் ஆட்டுக்கால் - 4 தனியா தூள் – 2 ஸ்பூன் மிளகு தூள் - 2 ஸ்பூன் சீரகத் தூள் - 2 ஸ்பூன் மஞ்சள் தூள் –...
உடல் சூட்டை குறைக்க வழிகள்

உடல் சூட்டினால் ஏற்படும் பாதிப்புகளும் அதற்கான தீர்வுகளும்

உடல் சூடு எதனால் ஏற்படுகிறது? இன்றைக்கு பலருக்கும் உடலில் பல்வேறு விதமான பிரச்சனைகள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று உடலில் சூடு. உடல் குளிர்ச்சியாக இருந்தாலே பல நோய்களில் இருந்து நாம் தப்பித்து விடலாம்....
சப்தமி திதி பலன்கள்

சப்தமி திதி பலன்கள், சப்தமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

சப்தமி திதி சப்தம் என்றால் ஏழு என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஏழாவது நாள் சப்தமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சப்தமியையை சுக்கில பட்ச சப்தமி என்றும், பௌர்ணமிக்கு...
இறால் பிரியாணி செய்வது எப்படி

இறால் பிரியாணி செய்வது எப்படி

இறால் பிரியாணி அசைவ உணவில் சிறியவர்  முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான். பிரியாணியின் சுவையும் மணமும் தான் நாம் விரும்பி சாப்பிட ஒரு...
சதுர்த்தசி திதி

சதுர்த்தசி திதி பலன்கள், சதுர்த்தசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

சதுர்த்தசி திதி சதுர்த்தச என்பதற்கு பதினான்கு என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 14 வது நாள் சதுர்த்தசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தசியை...
திருமணத்தில் மாலை மாற்றுதல்

திருமணத்தில் மாலை மாற்றுதல் சடங்கு ஏன் செய்யபடுகிறது?

திருமணத்தில் மாலை மாற்றுதல் ஒரு திருமண பேச்சு ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை எண்ணற்ற சடங்குகள் நம் சமுகத்தில் செய்கின்றனர். ஆனால் பல சடங்குகள் ஏன் செய்கின்றனர் என பலருக்கும் தெரிவதில்லை. அவற்றில் ஒன்று...
உடலை வலுப்படுத்தும் உணவுகள்

உடலை வலுப்படுத்தும் உணவுகள்

உடலை வலுப்படுத்தும் உணவுகள் என்னென்ன? உடலை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள சத்தான உணவுகளை நாம் சாப்பிடுவது மிகவும் அவசியமாகும். உடல் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருந்தால் தான் நம் தோற்றம் அழகாகவும் உடல் உறுதியாகவும் ,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.