சிவக்கரந்தை மூலிகையின் மருத்துவ நன்மைகள்

சிவக்கரந்தை

சிவக்கரந்தை மருத்துவ குணம் அதிகமுள்ள அரியவகை மூலிகைச் செடியாகும். இது நல்ல வாசனை கொண்டது. சிவகரந்தை கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள், காமாலை போன்றவற்றிற்கு சிறந்தது. நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து அழற்சியைக் குறைக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். அத்துடன் இந்த மூலிகையை தினமும் சாப்பிட்டால் உடல் அழகு மேம்படும். இதற்கு கரந்தை, விஷ்ணுகிராந்தி போன்ற வேறு பல பெயர்களும் உண்டு.

சிவகரந்தை நன்மைகள்

கரந்தை வகைகள்

கரந்தை செடிகளில் சிவகரந்தை, கொட்டைக்கரந்தை, செங்கரந்தை, வெண்கரந்தை, கருங்கரந்தை எனப் பலவுண்டு. அதில் சிவகரந்தை வெள்ளை மற்றும் சிகப்பு என இரண்டு வகைப்படும். அதன் பூக்கள், மற்றும் காய்களின் நிறத்தை வைத்து சிகப்பு சிவகரந்தை, வெள்ளை சிவகரந்தை வகைபடுத்தபடுகிறது. இந்த மூலிகை அதிக வெப்பமுள்ள பகுதிகளில் மட்டுமே வளரக்கூடியது. இந்த மூலிகையின் தண்டு, இலை, பூ, வேர், விதை என அனைத்துமே மிகுந்த மருத்துவ குணம் கொண்டவை.

சிவகரந்தையை எப்படி உபயோகப்படுத்த வேண்டும்?

இந்த செடி பூக்கும் முன்பே கொண்டுவந்து நன்கு சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி அதன் வேரோடு எல்லா பாகங்களையும் இடித்துச் சூரணம் செய்து ஒரு புதிய மண் பாத்திரத்தில் போட்டு அதன் வாய் பகுதியை துணியை கொண்டு கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சூரணத்தைத் தினம் இருவேளை காலையும், மாலையும் ஒரு மேஜைக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல பசி ஏற்படும். மேலும் இது இரத்தத்திலுள்ள மாசுக்களை நீக்கி சொறி, சிரங்கு, கரப்பான் முதலிய தோல் நோய்கள் குணமாகும். இது விந்துணுவைப் பலப்படுத்தும்.

சிவகரந்தை மருத்துவப் பயன்கள்

1. சிவகரந்தையின் சாறு கல்லீரல், மண்ணீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும்.
2. சிவகரந்தை செடியின் வேரை கொண்டு செய்யப்படும் கஷாயம் மூலநோயை குணமாக்கும்.
3. சிவகரந்தை பொடி விந்தணுகளின் எண்ணிக்கையை அதிகரித்து ஆண்மையை அதிகரிக்கும்.
4. சிறு நீரகம் சம்பந்தமான நோய்களை நீக்கும்.
5. மஞ்சள் காமாலை நோயை முற்றிலும் குணப்படுத்தக் கூடியது.
6. சிவகரந்தை பொடி பசியை தூண்டும். மேலும் ரத்தத்தை சுத்திகரிக்கும்.
7. சிவகரந்தை பொடி உஷ்ணத்தால் ஏற்படும் வாந்தியை குணமாக்கும்.
8. கல்லீரலைப் பாதுகாக்கும் மற்றும் கிருமிகளைக் கொல்லும் சக்தி கொண்டது.
9. எல்லா வகையான ஜுரங்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டது.
10. நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி ஞாபகத் திறனை அதிகரிக்கும்.
11. சிவகரந்தை சாப்பிட்டு வந்தால் வாழ்நாள் அதிகரிக்கும்.
இந்த சிவகரந்தை மூலிகை சாப்பிடும் காலத்தில் மது மற்றும் புகையிலையை பயன்படுத்த கூடாது. உணவில் அதிகப்படியான காரம், மற்றும் புளிப்பை குறைக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

5ம் எண்ணின் குணநலன்கள்

5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 5ம் எண் புதன் பகவானுக்குரிய எண்ணாகும். 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். 5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் இவர்கள் பின்னால் நடக்க போவதை முன்கூட்டியே...
சப்தமி திதி பலன்கள்

சப்தமி திதி பலன்கள், சப்தமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

சப்தமி திதி சப்தம் என்றால் ஏழு என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஏழாவது நாள் சப்தமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சப்தமியையை சுக்கில பட்ச சப்தமி என்றும், பௌர்ணமிக்கு...
இறால் முட்டை மசாலா

பட்டர் இறால் முட்டை மசாலா

பட்டர் இறால் முட்டை மசாலா தேவையான பொருட்கள் பட்டர் - 1 கப் இறால் – ½ கிலோ முட்டை – 4 ( வேக வைத்தது ) வெங்காயம் -  2 (...
வயிறு மச்ச பலன் பெண்கள்

ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பொதுவான மச்ச பலன்கள்

ஆண் பெண் இருவருக்கும் பொதுவான மச்ச பலன்கள் ஆண் மற்றும் பெண்ணின் கழுத்தின் முன் பக்கம், பின் பக்கம் போன்ற இடங்களில் இருக்கும் மச்சம் நீண்ட ஆயுளைத் தரும். இவர்கள் மந்தமான போக்கு கொண்டவர்களாக...
எண்ணெய் குளியல் எப்படி செய்ய வேண்டும்

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பலன்?

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பயன்? நாம் எல்லோரும் தினமும் குளிக்கிறோம். வாரத்தில் இரு நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும். விசேஷ நாட்களிலும், பூஜையில் கலந்து கொள்ளும் போதும் தலைக்கு குளிக்க வேண்டும். இது...
பங்குனியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

பங்குனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

பங்குனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பனிரெண்டு தமிழ் மாதங்களில் பங்குனி மாதம் கடைசி மாதமாகும். சூரியன் மீன ராசியில் பிரவேசிக்கும் காலம் பங்குனி மாதமாகும். இந்த பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தமிழ்கடவுள்...
பௌர்ணமி திதி

பௌர்ணமி திதி பலன்கள், பௌர்ணமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

பௌர்ணமி திதி பௌர்ணமி திதியானது திதிகளின் வரிசையில் 15வது இடத்தை பிடிக்கிறது. திதிகளின் வரிசையில் பௌர்ணமி முக்கிய இடத்தை பிடிக்கிறது. ஆடி பௌர்ணமி, சித்திர பௌர்ணமி, ஐப்பசி பௌர்ணமி போன்றவை முக்கியமான பௌர்ணமி தினங்களாகும். பௌர்ணமி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.