அவல் லட்டு
தேவையான பொருட்கள்
- அவல் – 1 கப்
- வெல்லம் – 1 கப்
- முந்திரி, திராட்சை – தேவையான அளவு
- நெய் – தேவையான அளவு
- ஏலக்காய் – சிறிதளவு
- பால் – சிறிதளவு
செய்முறை
- அவல் லட்டு செய்வதற்கு முதலில் அவலை சுத்தம் செய்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து அதில் முந்திரி , திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.
- ஒரு மிக்சி ஜாரில் வறுத்து வைத்துள்ள அவலை சேர்க்கவும்.
- அத்துடன் 1 கப் வெல்லத்தையும் சேர்த்து ரவை பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அரைத்த அவலை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
- பின்னர் அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும்.
- சிறிதளவு காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து நன்கு கிளறவும்.
- நன்கு கலந்து விட்டு பின் லட்டு வடிவத்தில் பிடித்து வைத்தால் சுவையான ஆரோக்கியமான அவல் லட்டு ரெடி.
Aval Laddu Recipe https://youtu.be/hgSDJGY7L7g