ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்ரன் பகவான் ஆவார். இவர்களில் பெரும்பாலானோர் நல்ல சிவந்த மேனியும், பெரிய முக்கு, பெரிய வாய், அகலமான தோள்கள் கொண்டவராக இருப்பார்கள். கம்பீரமான உடல்வாகை கொண்டவர்கள். இவர்கள் எளிதில் கோபம் அடைய கூடியவர்களாக இருப்பார்கள். சுகபோகமான வாழ்க்கை வாழ்வதில் விருப்பம் கொண்டவர்கள்.

 

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பான்மையோர் செல்வச் செழிப்புடன் வாழும் குடும்ப அமைப்பை பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு நல்ல அழகான மனைவி அமையும். எப்போதும் மன நிம்மதியுடன் வாழ ஆசைபடுவார்கள். இவர்கள் கணக்கு புலியாக இருப்பார்கள். இவர்கள் சூழல் சிறு வயதில் இருந்தே குடும்ப பொறுப்பை சுமப்பார்கள். தாரளமாக செலவு செய்ய விருப்பம் கொண்டவர்கள். இதனால் பணச்சிக்கலை இவர்களே உருவாக்கி கொள்வார்கள். இவர்களுக்கு சிற்றின்ப ஆசை அதிகமாக இருக்கும். எதிர்பார்ப்பு அதிகம் கொண்டவர்கள்.

இவர்கள் எல்லோரிடமும் நட்பு பாராட்டவே விரும்புவார்கள். எவ்வளவு மோசமான சூழ்நிலையாக இருந்தாலும் அதை பொறுமையாக கையாளகூடியவராக இருப்பார்கள். ஒளிவு மறைவின்றி, எதிலும் மனம்விட்டு வெளிப்படையாக பேச கூடியவர்கள். எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். தான் மட்டும் அல்லாமல் தன்னை சார்ந்தவர்களும் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என விரும்புவார்கள். யாரையும் நம்ப வைத்து ஏமாற்ற மாட்டார்கள்.

இவர்களின் மனதை புரிந்து கொண்டு செயல்படுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இவர்களுக்கு கலைகளில் அதிக ஆர்வம் இருக்கும். கலை சார்ந்த தொழில்கள் இவர்களுக்கு அதிக லாபம் தரும். தன்னை அழகுபடுத்திகொள்வதில் அதிக ஆர்வம் உடையவர்கள். இவர்கள் பேச்சில் சாமர்த்தியசாலிகளாக இருப்பார்கள், பேசி பேசியே மற்றவர்களை மயக்கி விடுவார்கள். இளகிய மனமும், இரக்க சுபாவமும் கொண்டவர்கள். நல்ல மனிதர்களுடன் தொடர்பு கொள்ளவே விரும்புவார்கள். சமுகத்தில் இவர்கள் நல்ல பெயரும், புகழும் பெறுவார்கள்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத் துணை, மேற்கு அல்லது வடக்கு திசையிலிருந்து வருவார்கள். வரக்கூடிய வாழ்க்கை துணை சிறிது பிடிவாத குணமும், எடுத்த கொள்கையில் மாறாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தின் மேல் அதிக பற்று கொண்டவர்கள். மனைவியாக இருந்தால் கணவனிடமோ, கணவனாக இருந்தால் மனைவியிடமோ அதிக பற்றுடன் இருப்பார்கள். இவர்கள் குழந்தைகளிடம் மிகுந்த அன்பும், ஈடுபாடும் கொண்டவர். இவர்கள் உத்தியோகத்தில் இருந்தால் பெரிய பதவிகளை வகிப்பார்கள். இவர்கள் அவ்வளவு எளிதில் பதட்டபடமாட்டார்கள்.

சமுக மற்றும் குடும்ப கடமைப் பொறுப்புக்களை தவறாமல் செய்வார்கள். இவர்கள் எல்லா விஷயத்திலும் எப்போதுமே, விசுவாசத்துடன் இருக்க விரும்புவார்கள். தன்னை போலவே மற்றவர்களும் முன்னேற வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள். திருமணத்திற்குப் பிறகுதான் இவர்களுக்கு சொந்த வீடு, மனை, வாகன வசதி, பூமி லாபம் போன்றவை ஏற்படும். திருமணத்திற்கு பிறகு பொருளாதாரத்தில் சிறிது முன்னேற்றம் காணப்படும். இவர்களின் திருமண தடை நீங்க முருகனை வழிபடலாம்.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கம்பு அல்வா செய்முறை

புரதச்சத்து நிறைந்த கம்பு அல்வா

கம்பு அல்வா கம்பு ஒரு புரதச் சத்து நிறைந்த உணவாகும்.தினமும் இட்லி, தோசை சாப்பிடுவதை தவிர்த்து கம்மங்கூழ்,கம்பு அடை, கம்பு தோசை என கம்பை நம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோய்...
sandal powder

தழும்பை மறையவைக்கும் எளிய இயற்கை மருத்துவம்

தழும்புகள் மறைய வைப்பது எப்படி ? தழும்புகள் பொதுவாக இறுக்கமான ஆடைகள் அணிவதால், அம்மை தழும்புகள், பிரசவத் தழும்புகள், முகப்பரு தழும்புகள், அறுவை சிகிச்சை தழும்புகள், தீக்காயத்தினால் ஏற்படும் தழும்புகள், விபத்தினால் ஏற்படும் தழும்புகள்,...
காபி, டீ

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க நல்ல சத்தான ஆரோக்கியமான உணவை தேர்ந்த்தெடுத்து சாப்பிடுவது மிகவும் முக்கயமானதாகும். அவ்வாறு நாம் பார்த்து பார்த்து சாப்பிடும் உணவை எப்போது எப்படி சாப்பிட...
ஆப்பிள் பாயாசம் செய்வது எப்படி

ஆப்பிள் பாயாசம் செய்முறை

ஆப்பிள் பாயாசம்  ஆப்பிளில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதன் வழக்கமான நுகர்வு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் இதயம் தொடர்பான நோய்களைக் குறைக்க உதவுகிறது.  ஆப்பிளில் நோய் எதிர்ப்பு...
நாக தோஷ பரிகார தலங்கள்

சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் என்றால் என்ன? சர்ப்ப தோஷ பரிகாரங்கள்

சர்ப்ப தோஷம் என்றால் என்ன? திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது ஜாதகத்தில் நன்றாக இருக்கிறதா, அல்லது எதாவது தோஷம் இருக்கிறதா என கேட்பார்கள். அப்படிப்பட்ட தோஷங்களில் ஒன்று சர்ப்ப தோஷம், அல்லது நாக தோஷம் ஆகும்....
சித்தர்களின் சமாதி நிலை

சித்தர்களின் சமாதி நிலை என்றால் என்ன?

சித்தர்களின் சமாதி நிலை பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள், பார்த்தல் என்ற செயல் மூன்றும் சேர்ந்த நிலை தான் சமாதி நிலை. சாதாரண மனிதனின் மரணத்துக்கும், இந்த சித்தர்களின் சமாதி நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது....
யோகம் மற்றும் தோஷம்

ஜாதகத்தில் யோகங்கள் மற்றும் தோஷங்கள்

ஜாதகத்தில் யோகங்கள் மற்றும் தோஷங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்திருக்கும் இடங்களை பொருத்து அந்த ஜாதகர் யோகம் மற்றும் அதிர்ஷ்டம் உள்ளவராகவும், யோகமற்றவராகவும், தோஷமுள்ளவராகவும் ஆக்குகிறது. யோகங்களும், தோஷங்களும் பொதுவாக எல்லாருடைய ஜாதகத்திலும் காணப்படுகின்ற ஒன்றாகும். ஜாதகத்தில்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.