உங்கள் ராசிக்கு என்ன தானம் செய்தால் யோகம் உண்டாகும்

 

உங்கள் ராசிக்கு  என்ன தானம் செய்தால் யோகம் உண்டாகும்  

 

12 ராசிகள்  மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இந்த இராசியில் சத்திரிய கிரகமான சூரியன் உச்சம் அடைகிறார். இவர்களுக்கு அஷ்டமாதிபதியும் செவ்வாயாக இருப்பதால், இரத்த தானத்தை தொடர்ந்து ஏதேனும் ஒரு செவ்வாய் கிழமையில் இவர்கள் செய்து வருவது நல்லது. காரணம் உடலில் ஓடும் இரத்தத்திற்கு செவ்வாய் தான் அதிபதி. அந்த வகையில் இவர்கள் (உடல் ஒத்துழைப்பின்) இரத்த தானம் செய்ய, இராசி அதிபதியான செவ்வாயின் அருள் இவர்களுக்குப் பூரணமாகக் கிடைக்கப் பெறும். இதனால் வாழ்க்கையில் மேன்மை பெறுவார்கள். இதை தவிர இரத்த தானம் செய்ய முடியாதவர்கள், ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களுக்குப் பயன்படும் சாதனங்களை வாங்கித் தரலாம். இரத்த சிவப்பு நிறம் கொண்ட ஆடைகளையும் கூட தானம் செய்யலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் அஷ்டமாதிபதி அல்லது அந்த அளவிற்கு நன்மை செய்யக் கூடிய கிரகம் இல்லை என்பதால் குரு அருளைப் பெற ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் அல்லது தங்களால் முடிந்த கல்வி சம்மந்தமான பொருட்களை வாங்கித் தருதல் நன்மை செய்யும். கோயில்களில் நடக்கும் உழவாரப் பணி போன்றவற்றில் கூட கலந்து கொள்ளலாம். அதன் மூலம் ஆன்மீக சேவைகளை ஆற்றி குரு அருள் பெறலாம். ஏழை பெண்களின் திருமணத்திற்கு, உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்வதால் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

மிதுன ராசிக்கு சனி பகவான் அஷ்டமாதிபதி, அவரே பாக்கியாதிபதியும் கூட. அதனால் சனிக்கிழமைகளில் கோயில் தீபங்களுக்கு இயன்ற அளவில் நல்லெண்ணெய் வாங்கித் தானம் செய்யலாம். ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கு சனிக் கிழமைகளில் சைவ உணவைக் கூட வாங்கித் தரலாம். தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன் கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்து வெண் பொங்கலை தானமாக கொடுங்கள். எல்லாவித செல்வமும் தேடி வரும்.

கடகம்

கடக ராசிக்கு அதிபதி சந்திரன், இந்த இராசிக்கு சனி 7 மற்றும் 8 ஆம் அதிபதியாக வருகிறார். தவிர இந்த இராசி ஜல ராசி என்பதால் தாகமாக இருப்பவர்களுக்கு தண்ணீரை தானம் செய்யலாம். இலவசமாக தண்ணீர் பந்தல் போன்றவற்றை இவர்கள் குறிப்பாக வெயில் காலங்களில் வழங்குதல் சிறப்பு. பசுமாட்டிற்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி செல்வத்தை பெருகச் செய்யும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன், இந்த ராசிக்கு சனி அளவு கடந்த தீமையை செய்வார். இதனால் இவர்கள் சனிக் கிழமைகளில் இரும்பை தானம் செய்யலாம். எள் உருண்டையை கூட தானம் செய்யலாம். ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும்.

கன்னி

கன்னி ராசிக்கு அதிபதி புதன். அத்துடன் கன்னி ராசியில் தான் புதன் உச்சம் அடைவார். ஆனால் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் மேலான துன்பத்தை அளிக்கக் கூடியவர். அதனால் இவர்கள் செவ்வாய் கிழமையில் ஏழைகளுக்கு இரத்த சிவப்பு நிறம் உள்ள ஆடைகளை அல்லது வேஷ்டி சட்டைகளை வாங்கி தானம் செய்யலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும்.

துலாம்

துலா ராசி அன்பர்களுக்கு குரு பகவான் அனைத்து விதங்களிலும் கெடுப்பார். இவர்கள் இராசியில் சனி உச்சம் பெறுவது மற்றொரு சிறப்பு. எனினும் குரு பகவான் பாதகாதிபதி என்பதால் வியாழக் கிழமைகளில் மஞ்சள் நிறம் கொண்ட பொருட்களை தானம் செய்யலாம். ஏழை மாணவர்களுக்கு கல்வி சம்மந்தமான பொருட்களை வாங்கித் தரலாம். உங்களுக்கு விநாயகர் வழிபாடு கைகொடுக்கும். ஆதரவற்ற மாணவ, மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுப்பதால் உங்கள் வாரிசுகளுக்கு நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு புதன் பாதகாதிபதி. அதாவது அதிக கெடுதல்களை செய்வார். இதனால் இவர்கள் மரக்கன்றுகளை தானம் செய்யலாம். புதன் கிழமையில் பச்சை நிற ஆடைகள் அல்லது பொருட்களை தானம் செய்யலாம். பச்சை பயிறு சுண்டல் செய்து கூட ஏழை எளிவர்களுக்கு தானம் செய்யலாம். தங்களால் இயன்ற அளவு மாற்றுத் திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களுக்கு சுக்கிரன் அந்த அளவிற்கு நன்மையை செய்ய மாட்டார். அதே போல சந்திரன் கூட அவ்வளவு நன்மைகளை செய்ய மாட்டார். அதனால் இவர்கள் திங்கட் கிழமைகளில் ஏழை எளியவர்களுக்கு தங்களால் இயன்ற அளவு பச்சரிசி தானம் செய்யலாம். அதுபோல, வெள்ளிக் கிழமைகளில் மொச்சையில் சுண்டல் செய்து தானம் செய்வதும் சிறப்பு.

மகரம்

மகர ராசி அன்பர்களுக்கு சூரியன் பெரிய அளவில் தீமையை செய்யும் கிரகம் எனலாம். இதனால் இவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் கோதுமை தானியத்தை முடிந்த அளவில் வாங்கி ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்யலாம். ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களுக்கு சந்திரன் பெரிய தீமையை செய்யக்கூடிய கிரகம். அதனால் இவர்கள் திங்கட் கிழமைகளில் ஆலயங்களுக்கு சென்று சந்திரனின் தூப தீபமான சாம்பிராணியை வாங்கி தானம் செய்யலாம். பெளர்ணமியில் அம்பாள் கோயில்களில் வெண் பொங்கல் தானம் செய்யலாம். குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும்.

மீனம்

மீனம் ராசி அன்பர்களுக்கு சுக்கிரன் கெடுதலை செய்யும் கிரகம் என்பதால் வெள்ளிக் கிழமைகளில் கோயில் தெய்வங்களுக்கு வாசனை மிகுந்த வெள்ளை மலர் மாலையை வாங்கித் தரலாம். கர்ப்பவதியான பெண்களுக்கு அல்லது தாய்மார்களுக்கு அலங்கார பொருள்களை பரிசளிக்கலாம். சுக்கிரனுக்கும், புளிப்புக்கும் சம்பந்தம் உண்டு. அந்த வகையில் வெள்ளிக் கிழமைகளில் பெருமாள் கோயில்களில் புளியோதரை செய்து தானம் செய்யலாம்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கன்னி ராசி குணங்கள்

கன்னி ராசி பொது பலன்கள் – கன்னி ராசி குணங்கள்

கன்னி ராசி குணங்கள் கன்னி ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தின் 2,3,4 ஆம் பாதம், ஹஸ்தம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும் மற்றும் சித்திரை நட்சத்திரத்தின் 1, 2...
ஆனியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் தமிழ் மாதங்களில் மூன்றாவதாக வருவது ஆனி மாதமாகும். ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள், மேலும் மிகுந்த பொறுமைசாலிகள். இவர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். இவர்களுக்கு சிந்திக்கும்...
பிறந்த மாத பலன்கள்

நீங்கள் இந்த மாதத்தில் பிறந்தவரா, உங்கள் பிறந்த மாத பலன்கள் இதோ

பிறந்த மாத பலன்கள் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குணங்கள் இருக்கும். அது போல அவர்களின் செயல்பாடும், பலன்களும் அமையும். அந்த வகையில் எந்த ஆங்கில மாதத்தில் பிறந்தால் என்ன மாதிரியான குணங்கள்...
மஞ்சள்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

நோய் எதிர்ப்பு சக்தி அனைத்து வசதி வாய்ப்புகள் இருந்தாலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் முழு மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். அதனால்தான் ‘ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ‘ என்று முன்னோர்கள்...
மாசி மாதம் பிறந்தவர்களின் குணநலன்கள்

மாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

மாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சூரியன் கும்பராசியில் சஞ்சரிக்கும் காலம் மாசி மாதமாகும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தியாக மனபான்மை உள்ளவர்கள். குடும்பத்திலும், சொந்த பந்தங்களிடத்திலும் சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்வார்கள். காரியங்களை திட்டம் போட்டு...
ஆட்டு தல கறி குழம்பு

தலைக் கறிக்குழம்பு

தலைக் கறிக்குழம்பு தேவையான பொருட்கள் ஆட்டுத்தலை – 1 தேங்காய் – ½ கப் சின்ன வெங்காயம் – 1 கப் தக்காளி – 2 உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள்...
யோகம் மற்றும் தோஷம்

ஜாதகத்தில் யோகங்கள் மற்றும் தோஷங்கள்

ஜாதகத்தில் யோகங்கள் மற்றும் தோஷங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்திருக்கும் இடங்களை பொருத்து அந்த ஜாதகர் யோகம் மற்றும் அதிர்ஷ்டம் உள்ளவராகவும், யோகமற்றவராகவும், தோஷமுள்ளவராகவும் ஆக்குகிறது. யோகங்களும், தோஷங்களும் பொதுவாக எல்லாருடைய ஜாதகத்திலும் காணப்படுகின்ற ஒன்றாகும். ஜாதகத்தில்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.